Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜமேஷா முபின் ஸ்டேட்டஸை மறுக்கமுடியுமா?..தமிழனின் பெருமையை கர்நாடகாவில் நிலைநாட்டினேன்..அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவை கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபின் வைத்திருந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை காவல்துறை மறுக்க முடியுமா என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தீவிரவாத சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறாமல் இருக்க சமரசமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜமேஷா முபினை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வராமல் தமிழக காவல்துறை கோட்டை விட்டுள்ளது என்றும் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை உக்கடம் அருகே கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இந்த வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை தகவல் வெள்ளிக்கிழமை வெளியானது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அண்ணாமலை பல கருத்துகளைக் கூறி புலன் விசாரணையை திசைத் திருப்ப முயற்சிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
மேலும் உண்மையில்லாத மிகைப்படுத்தப்பட்ட செய்திகளையும், வதந்திகளையும் முன்னாள் கர்நாடக காவல் அதிகாரி பரப்பி தமிழ்நாடு காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழக காவல்துறை குற்றச்சாட்டு

தமிழக காவல்துறை குற்றச்சாட்டு

இதனிடையே தமிழக டிஜிபி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். புலன் விசாரணை நடந்த கொண்டிருக்கும்போதே, அதுவும் வெடித்து சிதறிய சிலிண்டர், மற்றும் காரில் சேகரிக்கப்பட்ட பொருள்கள் என்ன என்பதை ஆய்வு செய்யும் முன்பே அது என்னவென்று பல கருத்துக்களை கூறி புலன் விசாரணையை திசை திருப்ப முயற்சிக்கிறார். இந்த வழக்கை தாமதமாக என்.ஐ.ஏ.வுக்கு அனுப்பியதாக கூறுகிறார். இது போன்ற நிகழ்வுகள் நடந்த உடன் வழக்குப்பதிவு செய்வதும் விசாரணை நடத்துவதும் உள்ளூர் காவல் துறைதான். எல்லா மாநிலத்திலும் இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது.

பயங்கரவாத தடுப்பு சட்டப்பிரிவு

பயங்கரவாத தடுப்பு சட்டப்பிரிவு

இதுதான் சட்டம். விசாரணையில் பயங்கரவாத தடுப்பு சட்டப்பிரிவு ( UAPA) சேர்க்கப்பட்டலோ அல்லது தேசியப் புலனாய்வு முகமை சட்டம், 2008இல் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் உள்ள சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டாலோ, தேசியப் புலனாய்வு முகமை சட்டப் பிரிவு 6இன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்ட காவல் நிலைய அதிகாரி, மாநில அரசாங்கத்துக்கு உடனடியாக ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையைப் பெற்றவுடன், மாநில அரசு, மத்திய அரசுக்கு விரைவில் தெரியப்படுத்த வேண்டும். அந்த அறிக்கையைப் பெற்றவுடன், ஒன்றிய அரசு, 15 தினங்களுக்குள், வழக்கின் தன்மைக்கு ஏற்ப, தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு ஆணை பிறப்பிக்கும். இதுதான் சட்டம்.

தேசிய புலனாய்வு முகமை

தேசிய புலனாய்வு முகமை

ஆனால், நடைமுறையில் மத்திய அரசு தேசியப் புலனாய்வு முகமையிடம் கருத்துரு பெற்று, விசாரணைக்கு ஆணை பிறப்பிக்க சில மாதங்கள் கூட ஆவதுண்டு. அதுவரை அந்த வழக்கின் புலன் விசாரணையை, வழக்குப்பதிவு செய்த, காவல் நிலைய, புலனாய்வு அதிகாரியே மேற்கொள்வார். கோவையில் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடித்த வழக்கில், இந்த சட்ட நடைமுறை, எந்த தாமதமுமின்றி முறையாக பின்பற்றப்பட்டு, மாநில அரசு, ஒன்றிய அரசிற்கு முறையாக அறிக்கையை அனுப்பி, அதன்பிறகு, வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டது.

கார் வெடிப்பு வழக்கு

கார் வெடிப்பு வழக்கு

மேலும் சில முக்கியத்துவம் மிக்க வழக்குகளில், ஒன்றிய உள்துறை தாமாகவே முன் வந்து என்ஐஏ விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கலாம். ஆனால் இந்த வழக்கில், ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பிக்கும் முன்னரே தமிழ்நாடு முதலமைச்சர் கோவை கார் வெடிப்பு நிகழ்வை என்ஐஏ விசாரிக்க பரிந்துரை செய்தார். இதில் எங்கே தாமதம் வந்தது? இதற்கு முன்னால் நிகழ்ந்த இது போன்ற நிகழ்வுகளில் சில மாதங்கள் கழித்து கூட வழக்குகள் என்ஐஏ இடம் ஒப்படைக்கப்பட்டன. அதுவும் சில வழக்குகளில், சில மாநிலங்களில் ஆவணங்கள் பல மாதங்களுக்குப் பின்னரே என்ஐஏ விடம் ஒப்படைக்கப்பட்டன.

டெல்லி உள்துறை எச்சரிக்கை

டெல்லி உள்துறை எச்சரிக்கை

தற்போது திடீரென்று வெடிகுண்டு நிகழ்வு கோவையில் நடக்கப் போவதாக டெல்லி உள்துறை அமைச்சகம் முன்பாகவே எச்சரித்ததாக புகார் கூறுகிறார். இது அபத்தமானது. ஏனென்றால், அவர் குறிப்பிடுவது டெல்லி உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும அனுப்பப்பட்ட பொதுவான சுற்றறிக்கை ஆகும். இதில் கோவை சம்பவம் பற்றி எந்த இடத்திலும் கூறப்படவில்லை. அந்த சுற்றறிக்கை மாநில அரசாங்கங்களுக்கு குண்டு வெடிக்கப் போவதாக முன்கூட்டியே எச்சரித்ததாகவும் காவல்துறை அதை அலட்சியப்படுத்தியதாகவும் பொய்யாகப் பழி சுமத்தி ஒரு பொய் பிம்பத்தை எற்படுத்த முயல்கிறார். குறிப்பிட்ட சுற்றறிக்கையில் கோவை மாநகரைப்பற்றி எந்தத் தகவலும் இல்லை.

காவல்துறைக்கு களங்கம்

காவல்துறைக்கு களங்கம்

18.10.2022 தேதியிட்ட வழக்கமான சுற்றறிக்கை 21ஆம் தேதி பெறப்பட்டு உடனே அனைத்து நகரங்களுக்கும், மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. இவர் சொல்வது போல் கோவையில் இந்தச் சம்பவம் சில குறிப்பிட்ட நபர்கள் நடத்தப் போகிறார்கள் என்ற தகவல் கிடைத்திருத்தால் தமிழ்நாடு காவல்துறை அந்த நிமிடமே அந்த நபர்களைக் கைது செய்து வீடுகளை சோதனையிட்டு, வெடி பொருள்களை கைப்பற்றி இருக்கும். எனவே இது போன்ற உண்மையில்லாத மிகைபடுத்தப்பட்ட செய்திகளையும் வதந்திகளையும் முன்னாள் கர்நாடக காவல் அதிகாரி பரப்பி தமிழ்நாடு காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை பதில்

அண்ணாமலை பதில்

இந்த நிலையில் தமிழ்நாடு காவல்துறையின் குற்றச்சாட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழக காவல்துறை இன்று வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில் விரைவில் வழங்கப்படும். காவல்துறையில் பணிபுரியும் சகோதர சகோதரிகள் மீது எங்களுக்கு பெருமதிப்பும் மரியாதையும் உள்ளது. ஆனால் காவல்துறை டிஜிபி மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி காவல்துறையினராக இல்லாமல் திமுகவினரை போல் செயல்படுகிறார்கள். காவல்துறை உயர் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படாமல் ஆளும் திமுக அரசை மகிழ்விக்க மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தீவிரவாத சம்பவங்கள்

தீவிரவாத சம்பவங்கள்

இதுவரை நாங்கள் முன் வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளும் இரண்டு உயர் அதிகாரிகளுக்கு எதிராக மட்டுமே ஆனால் அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள காவல்துறையிலிருந்து பொதுவான ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளார்கள். காவல்துறையின் மாண்பை குறைத்து விட்டதாக என் மீது குற்றச்சாட்டு சுமத்துவதற்கு பதிலாக இது போன்ற தீவிரவாத சம்பவங்கள் எவ்வாறு நடந்தது என்பதனை அவர்கள் ஆராய வேண்டும். பல பெருமைகளுக்கு பெயர் போன தமிழக காவல் துறையில் அரசியலைப் புகுத்தி சிறுமைப்படுத்துவது யார் என்று மக்கள் அறிவர் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

அண்ணாமலை அறிக்கை

அண்ணாமலை அறிக்கை

தமிழக போலீசாரின் அறிக்கை ஒவ்வொன்றிற்கும் விரைவில் விளக்கம் அளிப்பேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அண்ணாமலை விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபின் வைத்திருந்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பற்றி காவல்துறை மறுக்க முடியுமா என்று கேட்டுள்ளார்.

ஜமேஷா முபின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்

ஜமேஷா முபின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்

என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரிய வந்தால், நான் செய்த தவறை மன்னித்து விடுங்கள், எனது குற்றங்களை மறந்துவிடுங்கள், என்னுடைய இறுதி சடங்கில் பங்கேறுங்க, எனக்காக பிரார்த்தனை பண்ணுங்க என்று ஜமேஷா முபின் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டர் வைத்திருந்தார். அதற்கான ஸ்கீரின் ஷாட் தன்னிடம் உள்ளதாகவும் கடந்த வாரம் அண்ணாமலை கூறியிருந்தார். இந்த நிலையில் அந்த ஸ்டேட்டஸ் இல்லை என்று காவல்துறை மறுக்கமுடியுமா என்றும் அண்ணாமலை கேட்டுள்ளார்.

தமிழனின் பெருமை

தமிழனின் பெருமை

தமிழனின் பெருமையை கர்நாடகாவில் நிலைநாட்டி விட்டுத்தான் வந்திருக்கிறேன் என்று கூறியுள்ள அண்ணாமலை, தீவிரவாத சம்பவங்கள் தமிழகத்தில் நிகழாமல் இருக்க காவல்துறையினர் சமரசமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழக காவல்துறையா அல்லது அறிவாலயத்தை காக்கும் துறையா எனவும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். ஜமேஷா முபின் பற்றி உள்துறை எச்சரித்தும் தமிழக உளவுத்துறை கோட்டை விட்டது ஏன் என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+