சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'பல்வேறு துறைகளில் தமிழகம் முன்னேறியுள்ளது பெருமையளிக்கிறது'.. சொல்வது பா.ஜ.க.வின் வானதி சீனிவாசன்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் பல்வேறு துறைகளில் முன்னேறி உள்ளதை பெருமையாக நினைப்பதாக கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் தெரிவித்தார். இது தொடர்பாக நிருபர்களிடம் பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

Recommended Video

    பல்வேறு துறைகளில் தமிழகம் முன்னேறியுள்ளது பெருமையளிக்கிறது.. சொல்வது பா.ஜ.க.வின் வானதி சீனிவாசன்

    சமீபத்தில் வெளியிடப்பட்ட குடும்ப சுகாதாரத் துறை அறிக்கையில் பெண்களுடைய பாலின விகிதம் அதிகரித்துள்ளது ஆரோக்கியமான விஷயமாக உள்ளது பெண்கள் பல துறைகளில் முன்னரே இந்த அறிக்கை ஒரு முன்னுதாரணம்.

    மலையாள நடிகையின் ஆபாச படம்.. மார்பிங் செய்து பதிவிட்ட 2 குமரி இளைஞர்கள்.. சுற்றி வளைத்த போலீஸ்மலையாள நடிகையின் ஆபாச படம்.. மார்பிங் செய்து பதிவிட்ட 2 குமரி இளைஞர்கள்.. சுற்றி வளைத்த போலீஸ்

    கோவை மாநகராட்சியில் பிரச்சினை

    கோவை மாநகராட்சியில் பிரச்சினை

    கோவை மாநகராட்சியில் குப்பை எடுப்பதில் பிரச்சினை அதிகரித்து வருகிறது எங்கு பார்த்தாலும் குப்பையாக உள்ளது ஒப்பந்த பணிகளை காரணம் காட்டி சுகாதார பணிகளை மாநகராட்சி தட்டி கழித்து வருகிறது கோவையின் தேவைக்கு ஏற்ப அரசு செயல்படவில்லை சாதாரண பிரச்சனைகளை பொருட்படுத்தாமல் செயல்படுகின்றனர் பெண்கள் பாலியல் சார்ந்த பிரச்சினைகள் ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபடுகிறது.

    மத்திய அரசின் செயல்பாடு

    மத்திய அரசின் செயல்பாடு

    பெண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள் பெருமையாக நினைக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது பெண்களுக்கான சுகாதார சதவிகிதம் அதிகரித்துள்ளது வங்கிக் கணக்குகளை பயன்படுத்துவதில் 53 லிருந்து 78 சதவிகிதமாக உயர்ந்துள்ளது பெண்கள் கல்வி , சுகாதாரம், பல்வேறு பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு வளர்ச்சிக்கு வித்திடப்பட்டுள்ளது.

     ஜெய்பீம் படம் பார்க்கணும்

    ஜெய்பீம் படம் பார்க்கணும்

    ஜெய்பீம் படம் இன்னும் நான் பார்க்கவில்லை. விரைவில் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். வேளாண் சட்டம் எதற்காக திரும்ப பெற்றதற்கான காரணத்தை பிரதமர் தெளிவாக தெரிவித்துள்ளார். சிறார்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனை வரை செல்வதற்கு மத்திய அரசு வழி செய்துள்ளது தனி மனித ஒழுக்கத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அதற்கான பணிகளை பாஜக மகளிர் அணி செய்யும்.

    பெருமையாக உள்ளது

    பெருமையாக உள்ளது

    120 கோடி மக்களுக்கு மத்திய அரசு சார்பில் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை குறைப்பதில் மாநில அரசுக்கும் பங்கு உள்ளது உள்ளாட்சி தேர்தலை உரிய நேரத்தில் நடத்த வேண்டும். தமிழகம் பல்வேறு துறைகளில் முன்னேறி உள்ளதை பெருமையாக நினைக்கிறேன். எந்தெந்த இடத்தில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது என்பதை மற்ற மாநிலத்திற்கும் கொண்டு செல்கிறேன்.

    English summary
    Coimbatore South MLA and BJP national women's team leader Vanathi Srinivasan said she was proud of Tamil Nadu's progress in various fields. He said the central government was taking appropriate steps to curb inflation
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X