Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உடம்பெல்லாம் ரத்தம்...அலட்சியத்தால் பறிபோன மகன் உயிர்...அவங்களை கைது பண்ணுங்க - கதறும் தாய்

பள்ளி நிர்வாகிகளின் அலட்சியத்தால் தனது மகனின் உயிர் பறிபோய் விட்டதாக வேன் மோதி உயிரிழந்த மாணவனின் தாயார் கண்ணீர் விட்டு கதறியது காண்பவரின் கண்களை குளமாக்கியது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகனின் உயிர் பறிபோனதற்கு காரணமான நிர்வாகிகளை கைது செய்யாமல் அவனது உடலை வாங்கப்போவதில்லை என்று சிறுவனின் பெற்றோர் கண்ணீருடன் கூறியுள்ளனர். வேன் டிரைவர், பெண் ஊழியரை கைது செய்தாலும் தாளாளர், முதல்வரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Recommended Video

    Christian-ன்னு சொல்லவே வெட்கமாக இருக்கு - தாய் Jennifer பேட்டி | Oneindia Tamil

    சென்னை விருகம்பாக்கம் இளங்கோவன் நகரை சேர்ந்தவர் வெற்றிவேல். ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெனிபர். இவரும் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு தீக்சித் என்ற 7வயது மகன் இருந்தான். ஆழ்வார்திருநகரில் உள்ள வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தான்.

    இன்று காலை வழக்கம் போல் காலை 8.40 மணிக்கு வீட்டில் இருந்து பள்ளி வேனில் பள்ளிக்கு சென்றான்.பள்ளி வேனை பூங்காவனம் என்பவர் ஓட்டி வந்தார். வேன் பள்ளி வளாகத்திற்குள் வந்ததும். வேனில் இருந்து திக்‌ஷித் உள்ளிட்ட மாணவர்கள் இறங்கி வகுப்பு அறைக்கு சென்றனர். அப்போது மாணவன் தீக்சித் வகுப்பு அறைக்கு செல்ல வேனுக்கு பின்னால் நடந்து சென்று கொண்டிருந்தான்.

    தலை மீறி ஏறிய வேன்

    தலை மீறி ஏறிய வேன்

    மாணவர்கள் அனைவரும் இறங்கி சென்று விட்டதால் டிரைவர் வேனை, பின் நோக்கி இயக்கி வெளியே வாகனத்தை எடுத்து செல்ல முயன்றார். இதில் பின்னால் நடந்து சென்ற மாணவன் மீது எதிர்பாராத வகையில் வேன் மோதியது. இதில் நிலை தடுமாறி மாணவன் கீழே விழுந்தான். இதை பள்ளியில் உள்ள ஆசிரியர்களும் கவனிக்க வில்லை. வேனை பின் நோக்கி இயக்கிய டிரைவர் பூங்காவனமும் கவனிக்கவில்லை. இதனால் மாணவனின் தலைமீது வேனின் பின்சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் மாணவன் உயிரிழந்தான்.

    போலீஸ் விசாரணை

    போலீஸ் விசாரணை

    மாணவன் வேனில் சிக்கியதை கூட கவனிக்காமல் டிரைவர் தொடர்ந்து வேனை இயக்கியுள்ளார். அப்போது சக மாணவர்கள் அலறும் சத்தம் கேட்ட பிறகு தான் வேன் டிரைவர் வாகனத்தை நிறுத்தி உள்ளார். இதனால் சிறிது நேரம் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விபத்து குறித்து பள்ளி நிர்வாகம் வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கதறி துடித்த பெற்றோர்

    கதறி துடித்த பெற்றோர்

    விபத்து குறித்து மாணவனின் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் போன் செய்து தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர் விபத்து நடந்த பள்ளி வளாகத்திற்கு சென்று கண்ணீர் விட்டு கதறி துடித்தனர். இது அங்கு வந்த பெற்றோர்களின் கண்களை குளமாக்கியது. ஒரே மகனை பறிகொடுத்து விட்டோமே என்று கதறித் துடித்தனர்.

    2 பேர் கைது

    2 பேர் கைது

    பள்ளி வளாகத்திற்குள் விபத்து நடந்ததால் வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய 60 வயதான வேன் டிரைவர் பூங்காவனத்தை கைது செய்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய வேனும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், விபத்து தொடர்பாக பள்ளி தாளாளர், வேன் ஓட்டுநர், முதல்வர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களை வேனில் இருந்து இறக்கிவிடும் பெண் ஊழியர் ஞானசக்தி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    உடலை வாங்க மறுப்பு

    உடலை வாங்க மறுப்பு

    பள்ளி முதல்வர் தனலட்சுமி மற்றும் ஆசிரியர்களுடன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். வேன் டிரைவர் பூங்காவனத்திடமும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விபத்து காரணமாக பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகிகளை கைது செய்யாமல் மகனின் உடலை வாங்கப்போவதில்லை என்று சிறுவனின் தாயார் ஜெனீபர் கண்ணீருடன் கூறியுள்ளார்.

     கண்ணீர் விட்டு கதறிய தாயார்

    கண்ணீர் விட்டு கதறிய தாயார்

    பையனை வேன் ஏற்றி விட்டு விட்டு வந்து பத்து நிமிடத்தில் போன் வந்தது. ஆக்சிடென்ட் ஆனதாக போன் வந்தது. பதறியடித்துக்கொண்டு ஓடினோம். பள்ளிக்கு போனால் சீரியசாக இருக்கிறது விஜயா மருத்துவமனைக்கு போகச் சொன்னார்கள். அங்கே போனால் என் குழந்தைக்கு உயிரே இல்லை. யூனிபார்ம் முழுக்க ரத்தத்தில் நனைந்திருந்தது. ஒருத்தர் கூட என்ன நடந்தது என்று சொல்லவில்லை என்று கதறி துடித்தது பலரது கண்களையும் குளமாக்கியது.
    பள்ளி நிர்வாகிகளை கைது செய்யாமல் எனது மகனின் உடலை நான் வாங்கப்போவதில்லை என்றும் ஜெனீபர் கூறியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+