43 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு.. தமிழக அரசு அதிரடி உத்தரவு.. இணை செயலரான ஜெயசீலன் ஐஏஎஸ்!
சென்னை : ஐஏஎஸ் அதிகாரிகள் 43 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இணை செயலாளராக பதவி உயர்வு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் ஜெயசீலன், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உட்பட 8 ஐஏஎஸ் அதிகாரிகள் இணை செயலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறை ஆணையர் த.நந்தகுமார் ஐஏஎஸ் உள்ளிட்ட 27 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அரசு செயலாளராக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின் தொடர்ந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று வெளியான அறிவிப்பில் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம், 43 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

கிரேடு
1999-ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த 4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முதன்மைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 2007-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு super time scale ஐஏஎஸ் அதிகாரிகளாக ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் 14 பேருக்கு செலக்ஷன் கிரேட் ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் 2014 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த 13 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு junior administrative grade ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

34 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
தமிழகத்தில் 34 ஐஏஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், சமூகநலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் சஞ்சோங்கம் ஜடக் சிரு, உலக வர்த்தக மையத்தின் இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் மற்றும் பிரதிநிதி பிரஜேந்திர நவனீத், டெல்லி தமிழ்நாடு இல்லம் ஆணையர் ஆஷீஷ் சாட்டர்ஜி, கோவை ஒழுங்கு நடவடிக்கை செயலர் தேவராஜ் தேவ் ஆகியோருக்கு அரசு முதன்மை செயலாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வு
அதேபோல், 2007 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரிகளான வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவராவ், பள்ளிகல்வித்துறை ஆணையர் நந்தகுமார், சிப்காட் மேலாண்மை இயக்குநர் சுந்தரவள்ளி, வீட்டு வசதித்துறை மேலாண்மை இயக்குநர் சரவணவேல்ராஜ், ஆவின் மேலாண்மை இயக்குநர் சுப்பையன், குடிநீர் வழங்கல் துறை மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு super time scale ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஜெயசீலன்
செய்தித்துறை இயக்குநர் ஜெயசீலன், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரவன் குமார், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ், தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன், உணவு வழங்கல் துறை இணை மேலாண்மை இயக்குநர் கற்பகம் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
இதேபோல 45 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பணியிட மாற்றம் செய்யப்பட்ட 45 பேரில் 27 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 5 ஐபிஎஸ் அதிகாரிகள் ஐ.ஜியில் இருந்து கூடுதல் டிஜிபியாகவும் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஐஜியில் இருந்து ஐ.ஜியாகவும் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் எஸ்பியில் இருந்து டிஐஜியாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications