டாஸ்மாக் தனியார்மயம் ஆனால் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்.. விற்பனையாளர்கள் சங்கம் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்மாக் கடைகள் தனியார் மயம் ஆக்கினால் போராட்டம் நடத்துவோம் என்று டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கம் அறிவித்துள்ளது. டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்தோடு காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபடுவோம் என டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மதுபான விற்பனை அரசின் டாஸ்மாக் மூலமாக நடைபெறுகிறது. தினமும் ரூ.100 கோடிக்கு மேல் டாஸ்மாக் மூலமாக அரசுக்கு வருவாய் கிடைத்து வருகிறது. தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து டாஸ்மாக் துறையில் புதிய மாற்றங்களை கொண்டு வருவது பற்றி ஆலோசித்து வருகிறது.

TASMAC shops are privatized We will stage a hunger strike - TASMAC

தனியார் மயம் ஆக்க முயற்சி

அந்த வகையில், டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. டாஸ்மாக் ஊழியர்களின் சம்பளமும் சமீபத்தில் 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. இதற்கிடையே டாஸ்மாக் கடைகளை தனியார் மயம் ஆக்க தமிழக அரசு முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது.

தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சட்டத்தில் இதற்காக திருத்தம் மேற்கொள்ளப்படுவதாகவும், வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நகர்ப்புறங்களில் உள்ள சுமார் 2,500 கடைகள் முதல் கட்டமாக தனியார் மயமாக்க திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

டாஸ்மாக் தனியார் மயம் ஆக்கக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே, தனியார் மயம் என முடிவு எடுக்கக்கூடாது என்று டாஸ்மாக் பணியாளர் நலசங்கமும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலசங்கம் சார்பில் கு பாரதி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டாஸ்மாக் கடைகள் இயங்காது

2,500 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை தனியார் மயம் ஆக்குவதற்கான முயற்சிகளை வரும் பட்ஜெட்டில் அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். 23 ஆயிரம் ஊழியர்கள் இதில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களை பற்றி பணி நிரந்தரம் செய்வதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. சம்பள பிடித்தம் போக 14 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்கள்.

இதுநாள் வரைக்கும் இவ்வளவு மோசமான 23 வருடம் கொத்தடிமை போல வைத்து இருக்கும் ஊழியர்களுக்கு மாற்று வழி பற்றி எதுவும் சொல்லாமல் தனியார் மயம் நோக்கி நகர்கிறோம் என்று சொல்கிறார்கள். மதுக்கடைகளை அரசு ஏற்று நடத்தக்கூடாது. எல்லாவற்றையும் மூடுங்கள்.. டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணியை அரசு துறையில் வழங்குங்கள். தொழிலாளர்களை பற்றி யோசிக்காமல் தனியார் மயம் என்று சென்றால் தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக் கடைகள் இயங்காது.

குடும்பத்தோடு நடுத்தெருவில் நிற்க வேண்டும்

ஊழியர்கள் குடும்பத்தினரோடு காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள். எங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், ஆகஸ்ட் 4 ஆம் தேதி சென்னை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய மண்டலங்களில் குடும்பத்தோடு உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபடுவோம். தனியார் மயம் ஆக்கினால் டாஸ்மாக் கடைகளை மூடிவிடுவார்கள். பணியாளர்களுக்கு வேலை போய்விடும்.

குடும்பத்தோடு நடுத்தெருவில் நிற்க வேண்டும். இதைவிட வேறு என்ன மோசம் இருக்கிறது. ஊழியர்களின் வாழ்வாதாரம் பற்றி பேசிவிட்டு தனியார் மயம் பற்றி பேச வேண்டும். மாற்றுப்பணி நாங்கள் தயாராக இருக்கிறோம். நுகர்பொருள் வாணிப கழகம், கோ ஆப்டெக்ஸ் இங்கெல்லாம் வேலை பார்த்தால் எவ்வளவு சம்பளம். லட்சத்தை தாண்டிவிட்டார்கள். இவர்களுக்கும் அதே ஊதியத்தை கொடுத்து மாற்றுப்பணி கொடுங்கள்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+