உதயநிதி பேச்சு போலி வீடியோ என்றால் எது ஒரிஜினல்.. திருமாவளவன் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை:" சட்டமன்ற தேர்தல் முடிந்து 3 மாதங்களாகியும் தமிழக அரசியலின் பரபரப்பு ஓயவில்லை. திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தவெகவை கடுமையாக விமர்சித்து வருகின்றன. திமுக கூட்டணி உடைந்து தவெக கூட்டணி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. உதயநிதி பெண்களை குறித்து கொச்சையாக பேசி சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால் நான் அப்படி பேசவில்லை. அது வெட்டி ஒட்டி பரப்பிய வீடியோ என உதயநிதி கூறினார். அது போலியான வீடியோ என்றால் எது உண்மையான வீடியோ என திமுக நிரூபிக்க வேண்டுமென திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "காரில் பயணித்தபோது விசிக நிர்வாகியுடன் பல இடங்களில் நின்று பேசினேன். அதன் பிறகு கார் சென்றபோது சில வினாடிகள் அவர் ஜன்னலை பிடித்து பேசியதை பெரிது படுத்துகிறீர்கள். அவரை போல எத்தனையோ தம்பிகள் வழி நெடுக வண்டியை நிறுத்தி பேசினார்கள். கடைசியாக அந்த தம்பி வந்து பேசி சென்றார் அவ்வளவுதான்.

Udhayanidhi Thirumavalavan

உடன் வருவோரின் பாதுகாப்பு

இதை பெரிய விஷயமாக ஊடகங்களில் ஊதி பெருதாக்குவதன் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. என்னுடன் வருவோரின் பாதுகாப்பில் நான் எப்போதும் கவனமாக இருப்பேன். அவரை சத்தம்போட்டு நீ தொங்க கூடாது இறங்கு என கூறி இறக்கிவிட்டேன். தவெக புதிய அரசு முதல்முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது. நல்ல அறிவிப்புகள் வரவேண்டும். பொது மக்களின் பாராட்டை பெறும் வகையில் பட்ஜெட் இருக்க வேண்டும்.

உதயநிதி போராட்டத்தில் என்ன பேசினார் என்பதை ஊடகத்தில் பார்த்து தான் கருத்து சொன்னோம். அதை வெட்டி ஒட்டி தவறாக பரப்புகிறார்கள் என்றால், திமுக தான் அதை நிரூபிக்க வேண்டும். உண்மையான வீடியோ எது, வெட்டி ஒட்டிய வீடியோ எது என்பதை திமுக ஐடி விங், ஊடக புலனாய்வு அமைப்புகள் வெளியிடலாம். இதுவரை வெளியான தகவல்கள், கருத்துகள், ஊடக செய்திகள் அடிப்படையில் நான் கருத்து கூறினேன்.

எது உண்மையான வீடியோ

உண்மையில் அவர் அவ்வாறு பேசவில்லை என்றால் அது வரவேற்கத்தக்கது. அவர் பேசாத ஒரு கருத்தை வழிந்து நாம் அவதூறு பரப்பும் நோக்கம் எதுவுமில்லை. அனைத்து ஊடகங்களும் சேட்லைட் சேனல், ஆங்கில சேனல் உள்பட அவர் அவ்வாறு பேசினார் என்கிற ஆதாரங்களை வைத்து விவாதம் நடத்தின. பெண்களுக்கு எதிரான கருத்து என்பதுதான் இதில் முக்கியமானது. தவெக அரசு, முதலமைச்சருக்கு எதிரானது என்பதைவிட பெண்களுக்கு எதிரான கருத்து என்பதால் இது பேசு பொருளாக மாறியுள்ளது.

அந்த வீடியோ போலியானது என உறுதிபடுத்தினால் எங்களுடைய கருத்தை திருப்பிப் பெற்று கொள்ள தயாராக உள்ளோம். பத்திரிகையாளர்கள் தங்கள் பணியை செய்கிறார்கள். அவர்களை குறிவைத்து தாக்குவது சரியல்ல. ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், தலைவருக்கும் இதில் பொறுப்புள்ளது. அவதூறு பரப்ப கூடாது. ஆனால் அவதூறு பரப்பும் சமூக ஊடகங்கள், ஊடகங்கள் உள்ளன. அதை ஒட்டுமொத்த ஊடகத்தின் மீதான எதிர்ப்பாக வெளியிட வேண்டியதில்லை. இது கண்டிக்கத்தக்கது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+