Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சல்லி சல்லியா உடையுதா கனவு? டெல்லிக்கு தேர்வாகும் அதிமுக எம்.பி இவரா? இன்று நடக்கிறது மா.செ.கூட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று மே 29 , நாளை 30 ஆகிய தேதிகளில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.. இன்று காலை, மாலை என்று நடைபெறும் கூட்டத்தில் 42 மாவட்டங்களின் நிர்வாகிகளும், நாளை மே 30ம் தேதியன்று காலை, மாலை என நடைபெறும் கூட்டத்தில் 40 மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்ளவிருப்பதால் அதிமுகவுக்குள் பரபரப்பு நிலவுகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக இரு கட்சிகளுமே தனித்தனியே தேர்தலை சந்தித்து, தோல்வியை தழுவியிருந்தன.. இதையடுத்து, வரப்போகும் 2026ம் ஆண்டு நடக்க போகும் சட்டப்பேரவை தேர்தலில், திமுகவை வீழ்த்துவதற்காக, பாஜக தலைமையிலான கூட்டணியில் அதிமுக இணைந்துள்ளது..

Rajya Sabha MP Edappadi Palanisamy aiadmk

எடப்பாடி பழனிசாமி

பாஜவுடன் கூட்டணியே கிடையாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக சொல்லிவந்த நிலையில், தற்போது மீண்டும் கூட்டணி வைத்திருப்பதை, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலரே விரும்பவில்லை என்கிறார்கள். அதேபோல, கட்சி தொண்டர்களிடமும், பாஜகவுடன் கூட்டணி என்பதால், சில அதிர்வலைகள் இருப்பதாக கூறப்படுகிறது.,

கடந்த 25ம் தேதி அதிமுக செயலாளர்கள் கூட்டம் நடந்தது.. அப்போது அதிருப்தியிலுள்ள சில மூத்த தலைவர்களை மட்டும், எடப்பாடி பழனிசாமி சமாதானப்படுத்தியதாக தெரிகிறது.. பிறகு கடந்த 2ம் தேதி நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பாஜவுடன் கூட்டணி அமைத்ததற்கு செயற்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

2 நாள் மா.செ. கூட்டம்

இப்படிப்பட்ட சூழலில்தான், இன்று 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தகட்ட தேர்தல் நடவடிக்கைகள் குறித்தும், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது. முக்கியமாக மாநிலங்களவை உறுப்பினராக யாரை தேர்வு செய்வது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

முன்னணி சாய்ஸ் ஜெயக்குமார்?

இதில் முன்னணி சாய்ஸில் உள்ளவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவார்.. கடந்த முறையே சிவி சண்முகத்துக்கு தந்ததுபோல தனக்கும் எம்பி சீட் கிடைத்துவிடும் என்று எதிர்பார்த்தார்.

ஆனால், முதுகுளத்தூர் தர்மருக்கு, ஓபிஎஸ் அந்த சீட்டை தந்துவிட்டதால் ஏமாற்றமடைந்தார்.. இந்த முறையாவது கிடைக்கும் என்று ஜெயக்குமார் காத்திருக்கிறார்.. இதற்கு காரணம், பாஜகவுடன் கூட்டணி அமைந்தால், ராயபுரம் தொகுதியில் சிறுபான்மை ஓட்டு அதிமுகவுக்கு வராது என்பதால், எம்பியாக டெல்லி சென்றுவிடலாம் என்று கணக்கு போடுகிறாராம்.

இந்த லிஸ்ட்டில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, உதயகுமார் ஆதரவாளர் சதன் பிரபாகர் உள்ளனர்.. இதற்கு நடுவில் தேமுதிக, பாஜக, பாமகவும், உள்ளன. ஆனால், கூட்டணிக்கு இந்த முறை சீட் கிடைக்காது என்றே தெரிகிறது. இவைகளை பற்றியும் இன்றைய தினம் ஆலோசிக்கப்படுகிறது.

வந்தது அறிவிப்பு

இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில், "அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 29, 30 ஆகிய தேதிகளில் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து, மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. 2 நாட்களும் காலை, மாலை என 2 கட்டங்களாக ஆலோசனை கூட்டம் நடைபெறும்.

29ம் தேதியன்று புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்களுடனும்,

30ம் தேதியன்று திருப்பூர், கோவை, நீலகிரி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்,வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்களுடனும் ஆலோசனை நடைபெறும். மேற்கண்ட ஆலோசனைக் கூட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+