Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவையில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயார்! மதுரையில் மெட்ரோ? நிதியமைச்சர் புது தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான திட்ட அறிக்கை தயாராகிவிட்டதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

மேலும், மதுரையிலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து மே மாதத்திற்குள் அது தொடர்பாக தெரிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் மீதான பதிலுரையின் போது சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

கோவையில் மெட்ரோ

கோவையில் மெட்ரோ

சென்னை மாநகருக்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் பெரு நகரமாக திகழும் கோவையில் மெட்ரோ ரயில் சேவைக்கான அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான திட்ட அறிக்கை தயாராகிவிட்டதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் விரைவில் அங்கு மெட்ரோ திட்டப்பணிகள் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 மதுரையில் மெட்ரோ?

மதுரையில் மெட்ரோ?

இதேபோல் சென்னை, கோவைக்கு அடுத்த நிலையில் தமிழ் பண்பாட்டு தலைநகராக திகழும் மதுரையிலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவது தொடர்பாக கோரிக்கைகள் எழத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் மதுரையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து மே மாதத்திற்குள் அது தொடர்பாக தெரிவிக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருக்கிறார்.

திருச்சி மக்கள்

திருச்சி மக்கள்


இதனிடையே திருச்சி மாநகரிலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அந்த ஊர் மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. இதனால் விரைவில் திருச்சியிலும் மெட்ரோ ரயில் சேவைக்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆராயத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக பட்ஜெட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த முறை வளர்ச்சித் திட்டங்கள் குறித்த ஏராளமான அறிவிப்புகள் வெளிவந்திருப்பது கவனிக்கத்தக்கது.

Recommended Video

    24-03-2022 - தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் - விவாதம்.
    வளர்ச்சித் திட்டங்கள்

    வளர்ச்சித் திட்டங்கள்

    அதேபோல் இலவச அறிவிப்புகளையும் இந்த பட்ஜெட்டில் அதிகம் காண முடியவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. வளர்ச்சித் திட்டங்கள், உட்கட்டமைப்புகள் மேம்பாடு, பெண்களின் உயர் கல்வி, பள்ளிக்கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்டவைகளுக்கு பட்ஜெட்டில் அதிகம் முக்கியத்துவம் தரப்பட்டிருப்பது திரும்பிப் பார்க்கத் தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+