இது தான் தமிழ்நாடு.. எதே தமிழகம்னு சொல்லனுமா? முதல்வர் ஸ்டாலினின் பக்கா ஸ்கெட்ச்! நாளைக்கு ட்விஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு உச்சத்தில் இருக்கும் நிலையில் நாளை நடக்க இருக்கும் சட்டசபை கூட்டத் தொடரில் ஆளுநருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முக்கிய நிகழ்வுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தற்போது தமிழக ஆளுநரான ஆர்.என்.ரவிக்கும் அரசுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான சட்டசபை கூட்டத் தொடர் எப்போது நடைபெறும் என எதிர்பார்ப்பு நிலவியது.

ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதா, கூட்டுறவு சங்க மசோதா உள்ளிட்ட பல மசோதாக்கள் நிலுவையில் இருக்கும் நிலையில் சட்டசபை கூட்டத் தொடரை ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் ஆர்வத்தோடு எதிர்நோக்கி இருந்தன.

சட்டசபை கூட்டத்தொடர்

சட்டசபை கூட்டத்தொடர்

இந்த நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டம் ஜனவரி ஒன்பதாம் தேதியான நாளை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருக்கிறார்.
கடந்த மாதம் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் வழக்கம் போல இந்த ஆண்டு தலைமைச் செயலகத்தில் நடைபெறும் எனவும் காலை 10 மணிக்கு தொடங்கும் எனவும், இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கும் என கூறினார்.

ஆளுநர் உரை

ஆளுநர் உரை

நாளை காலை 9:55 மணிக்கு ஆளுநர் ரவியை சபாநாயகர் அப்பாவு மற்றும் சட்டசபை செயலாளர் வரவேற்றபின் சபாநாயகர் இருக்கையில் அமரும் ஆளுநர் தனது உரையை தொடங்குவார். தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்ட பிறகு ஆளுநர் ரவி உரை நிகழ்த்த இருக்கிறார் .அவரது உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தவுடன் அன்றைய சட்டசபை நிகழ்வுகள் நிறைவடையும். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும்.

ஆளுநருக்கு பதிலடி

ஆளுநருக்கு பதிலடி

இந்த கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தினை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். இந்நிலையில் திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு உச்சத்தில் இருக்கும் நிலையில் நாளை நடக்க இருக்கும் சட்டசபை கூட்டத் தொடரில் ஆளுநருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முக்கிய நிகழ்வுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ்நாடு பெயர்

தமிழ்நாடு பெயர்

கடந்த புதன்கிழமை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர் என் ரவி தமிழ்நாடு குறித்து பேசியது தான் இந்த சர்ச்சைகளுக்கு காரணம். நிகழ்ச்சியில் பேசிய அவர் தமிழகத்தில் துரதிஷ்டவசமாக பின்னோக்கி இழுக்கும் அரசியல் நடைபெறுகிறது. இந்த தேசம் முழுவதும் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு தமிழ்நாடு மட்டும் மறுப்பு தெரிவிக்கும் இவற்றை உடைக்க வேண்டும் தமிழ்நாடு என்பது பாரதத்தின் ஆன்மா பாரதத்தின் அடையாளம் சொல்ல னால் என்று சரியாக இருக்கும் என கூறினார்.

வாசிக்க வேண்டும்

வாசிக்க வேண்டும்

ஆளுநர் ஆர் என் ரவியின் தமிழ்நாடு - தமிழகம் குறித்த பேச்சு அரசியல் தாண்டி சமூக வலைதளங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ட்விட்டர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலரும் தமிழ்நாடு என்ற வார்த்தையை ட்ரெண்டாக்கி வருகின்றனர். மேலும் திமுக தலைவர்களும் பிறக்க கட்சியினரும் ஆளுநருக்கு எதிராக கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் நாளை தமிழக அரசு கொடுக்கும் உரையில் முழுக்க முழுக்க தமிழ்நாடு எனவே இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ஆளுநர் தமிழ்நாடு என்றே வாசிக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+