சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆபத்து நெருங்குது! மக்களே உஷார்! தமிழகத்தில் தொடர்ந்து 5வது நாளாக 1000யை கடந்த கொரோனா பாதிப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் தொடர்ச்சியாக இன்றும் 5வது நாளாக கொரோனா பாதிப்பு 1000யை கடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.

Recommended Video

    இந்த கொரோனா வீரியம் அதிகம்.. முகக்கவசம் கட்டாயம் - மா சுப்பிரமணியன்

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    சோகம்... பொருளாதார நெருக்கடியால் பசி, பட்டினி! அகதியாக வந்து தனுஷ்கோடியில் மயங்கிய இலங்கை தம்பதி! சோகம்... பொருளாதார நெருக்கடியால் பசி, பட்டினி! அகதியாக வந்து தனுஷ்கோடியில் மயங்கிய இலங்கை தம்பதி!

    இன்றைய கொரோனா பாதிப்பு

    இன்றைய கொரோனா பாதிப்பு

    தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விபரங்களை தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்றும் தமிழகத்தில் 5வது நாளாக கொரோனா பாதிப்பு 1000யை கடந்துள்ளது. அதன்படி இன்று ஒரேநாளில் மொத்தம் 1,461 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    8222 பேருக்கு சிகிச்சை

    8222 பேருக்கு சிகிச்சை

    அதேநேரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்று குணமாகி 697 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக பலி எதுவும் இல்லை. இன்றைய பாதிப்போடு சேர்த்து தற்போது தமிழகத்தில் மொத்தம் 8,222 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 ஆயிரம் என்ற அளவில் இருந்த நிலையில் தற்போது இது 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    சென்னையில் அதிகம்

    சென்னையில் அதிகம்

    இன்றைய பாதிப்பை பொறுத்தமட்டில் அதிகபட்சமாக சென்னையில் 543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக இன்று செங்கல்பட்டில் 240 பேரும், கோவையில் 181 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இததவிர கன்னியாகுமரியில் 62 பேர், காஞ்சிபுரத்தி்ல 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுவரை எவ்வளவு?

    இதுவரை எவ்வளவு?

    தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் 34 லட்சத்து 69 ஆயிரத்து 805 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 34 லட்சத்து 23 ஆயிரத்து 557 பேர் குணமாகி உள்ளனர். மொத்தம் 38 ஆயிரத்து 26 பேர் பலியாகி உள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    In Tamil Nadu, the corono cases has crossed 1000 for the 5th day today. The Tamil Nadu government has urged the public to be vigilant.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X