சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

45 வயதை தாண்டிய எல்லோருக்கும்.. இந்தியாவில் கொரோனா வேக்சின்.. தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: ஏப்ரல் 1ல் இருந்து 45 வயதுக்கு மேல் உள்ள எல்லோருக்கும் கொரோனா வேக்சின் போடப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வேக்சின் தற்போது தீவிரமாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கோவிட்ஷீல்ட் மற்றும் கோவேக்சின் ஆகிய மருந்துகள் தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

India will put Coronavirus vaccine for 45+ years old people to speed up the vaccination

வயது மற்றும் உடலில் உள்ள நோய்களின் அடிப்படையில் இந்த மருந்து வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. பல மாநிலங்களில் தினசரி கேஸ்கள் உயர தொடங்கி உள்ளது. இந்தியாவில் இதுவரை 12,149,335 கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு , 11,434,301 பேர் குணமாகி, 162,502 பலியாகி உள்ளனர் .

மகராஷ்டிரா, தமிழகம், கேரளா, கர்நாடக போன்ற மாநிலங்களில் தினசரி கேஸ்கள் அதிகரித்து வருகின்றன. இதைமுன்னிட்டு தற்போது கொரோனா வேக்சின் செலுத்துவதை மத்திய அரசு துரிதப்படுத்தி உள்ளது.

இதுவரை எப்படி

இதுவரை கொரோனா வேக்சின் 60 வயதுக்கும் மேல் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டது . அதேபோல் 45 வயதுக்கு மேல் உடலில் குறைபாடு உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டது. அதாவது ஹை பிபி, சுகர், கிட்னி பிரச்சனை உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

India will put Coronavirus vaccine for 45+ years old people to speed up the vaccination

இனி மாற்றம் என்ன

இனி ஏப்ரல் 1ல் இருந்து 45 வயதுக்கு மேல் உள்ள எல்லோருக்கும் கொரோனா வேக்சின் போடப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.45 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் வேறுபாடு பார்க்காமல் கொரோனா வேக்சின் போடப்படும். 1977 ஜனவரி 1க்கு முன் பிறந்த எல்லோருக்கும் வேக்சின் போடப்படும். உடலில் நோய் பாதிப்பு இல்லாத ஆரோக்கியமானவர்களுக்கும் கொரோனா வேக்சின் போடப்படும் .

ஏன்?

இந்தியாவில் கொரோனா காரணமாக பலியானவர்களில் 88% பேர் 45 வயதை கடந்தவர்கள். இதனால் அவர்களை காக்கும் விதமாக வயது நிர்ணயம் மாற்றப்பட்டுள்ளது.

டார்கெட்

இந்தியாவில் தற்போது தினமும் 20 லட்சம் பேருக்கு கொரோனா வேக்சின் போடப்படுகிறது. இதை தினமும் 50 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை முன்னிட்டே தற்போது வயது வரம்பு குறைக்கப்பட்டுள்ளது.

எப்படி பதிவு செய்வது

நீங்கள் 45 வயதை கடந்து இருந்தால் COWIN தளத்தில் உங்கள் விவரங்களை கொடுத்து பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

India will put Coronavirus vaccine for 45+ years old people to speed up the vaccination

இதுவரை கொரோனா வேக்சின் செலுத்தப்பட்ட விவரம்

முதல் டோஸ்:

81,74,916: மருத்துவ பணியாளர்கள்

89,44,742: முன்கள பணியாளர்கள்

68,72,483: 45 வயதுக்கு மேல் (உடல் குறைபாடு உள்ளவர்கள்)

2,82,19,257: 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள்

இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டார்கள் :

51,88,747: மருத்துவ பணியாளர்கள்

37,11,221: முன்கள பணியாளர்கள்

405: 45 வயதுக்கு மேல் (உடல் குறைபாடு உள்ளவர்கள்)

1,583: 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள்

English summary
India will put Coronavirus vaccine for 45+ years old people to speed up the vaccination - All you need to know.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X