அள்ளிக் கொடுக்கும் ஸ்டாலின்.. இந்திய கம்யூனிஸ்டுக்கும் 2 சீட்.. திமுக கூட்டணி கையெழுத்தானது!

லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டணி பேச்சுவார்த்தையில் திமுக படுவேகம் காட்டி வருகிறது. இரண்டு நாட்களாக இது தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Indian Communist parts seals alliance DMK: Will contest in 2 seats

லோக்சபா தேர்தலுக்கான திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி இருக்கிறது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் மொத்தம் 10 இடங்களில் போட்டியிட இருக்கிறது. இந்த நிலையில் திமுக மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இன்று காலை திமுக - விடுதலை சிறுத்தைகள் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக ஆலோசனை செய்தது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முத்தரசன் தலைமையிலான குழு, திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஆலோசனை செய்தார்.

ஆலோசனையின் முடிவில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் விசிக போலவே 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் முத்தரசன்- மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டனர்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிட போகும் தொகுதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. இதையடுத்து திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எத்தனை இடங்கள் கொடுக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.

திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், 2வது கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு கூடி இந்த கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+