ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்... எக்ஸ்பிரஸ் ரயில்களில் ரிசர்வேசன் செய்யாமல் பயணிக்கலாம்
192 ரயில்களில் 2ம் வகுப்பு பெட்டிகளில் மீண்டும் முன்பதிவில்லா பயணம் செய்யும் திட்டத்தை மார்ச் 10ஆம் தேதி முதல் தெற்கு ரயில்வே அறிமுகம் செய்கிறது.
சென்னை: 192 ரயில்களில் 2ம் வகுப்பு பெட்டிகளில் மீண்டும் முன்பதிவில்லா பயணம் செய்யும் திட்டத்தை மார்ச் 10ஆம் தேதி முதல் தெற்கு ரயில்வே அறிமுகம் செய்கிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. நாகர்கோவில், முத்துநகர், உழவன் விரைவு ரயில்களில் ஏப்ரல் 1ம் முதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் ரயில் பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப எக்ஸ்பிரஸ் ரயில்களை முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டன. படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ரயில் போக்குவரத்து தொடங்கினாலும் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் அகற்றப்பட்டன. அனைத்து ரயில்களிலும் முன்பதிவு செய்து பயணம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும் ரயில்களில் மட்டும் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு இருக்கைகளாக இயக்கப்படுவதால், ஏராளமான பயணிகள் நீண்ட தூரம் பயணம் செய்வதில் சிரமத்திற்கு ஆளாகினர்.

ரிசர்வேசன் செய்யப்படாத பெட்டிகள்
முன்பதிவில்லா பெட்டிகளுடன் ரயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே முன்பதிவில்லா பெட்டிகளுடன் ரயில்களை இயக்கமுடியும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தெற்கு ரயில்வே வாரியம் ரயில் பயணிகள் மகிழ்ச்சியடையும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 1, 16 மற்றும் 20ஆம் தேதிகளில் 42 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் சேர்க்கப்படும் என்றும், மே 1ஆம் தேதி அன்று 86 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் சேர்க்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே அறிவித்துள்ள அறிக்கை
அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிகள் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா காலத்திற்கு பின்னர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. முன்பதிவில்லாத டிக்கெட்டுகள் நீக்கப்பட்டு, எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிப்போர் அனைவரும் முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

ரிசர்வேசன் தேவையில்லை
இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதையடுத்து அனைத்து ரயில்களிலும் முன்பு போல 2ம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகளை முன்பதிவு மற்றும் முன்பதிவில்லாத பெட்டிகளாக இயக்கும்படி ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் உட்பட 192 விரைவு ரயில்களில் மீண்டும் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1 முதல் தென் மாவட்ட ரயில்கள்
முதற்கட்டமாக சென்னை சென்ட்ரல் ரயில்வே கோட்டத்தில் இருந்து புறப்படும் யஷ்வந்த்புர் மற்றும் ஹூப்ளி விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டி 10ம் தேதி முதல் இணைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து நாகர்கோவில், முத்துநகர், உழவன் விரைவு ரயில்களில் ஏப்ரல் 1ம் முதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படும்.

ஏப்ரல் 16 முதல்
ஏப்ரல் 16ம் தேதி முதல், நெல்லை, குமரி, பாண்டியன், பொதிகை, ராமேஸ்வரம் உள்ளிட்ட ரயில்களில் முன்பதிவின்றி பயணிக்கலாம். இதன் மூலம் திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட 6 ரயில்வே கோட்டத்திலும் மொத்தமாக 192 விரைவு ரயில்கள் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. இதில் முதற்கட்டமாக நேற்று முதல் 19 முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்பட்டது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஏசி பெட்டிகளில் போர்வை
இதனிடையே ஏசி பெட்டிகளில் போர்வை, தலையணை வழங்கப்படாமல் இருந்தது. கொரோனா தொற்று குறைந்து வருவதால் இனி ஏசி பெட்டிகளில் போர்வை, தலையணை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications