சஞ்சய் அரோரா ஐபிஎஸ் வீட்டில் குடியிருந்த ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை.. சிக்கிய கடிதம்.. ஷாக் தகவல்!
சென்னை : டெல்லி காவல்துறை கமிஷனராக பணியாற்றி வரும், தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான சஞ்சய் அரோராவின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த ரியல் எஸ்டேட் அதிபர் மதுசூதனன் ரெட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருகம்பாக்கம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து குதித்து, ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட மருத்துவரும் ரியல் எஸ்டேட் அதிபருமான மதுசூதனன் ரெட்டி எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
குடும்ப பிரச்சனை மற்றும் தொழில் நஷ்டம் ஆகியவற்றின் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎஸ் அதிகாரி வீட்டில்
சென்னை விருகம்பாக்கம், நடேசன் நகரில், ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பின் 14 வது மாடியில், டெல்லி போலீஸ் கமிஷனராக பணியாற்றி வரும், தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான சஞ்சய் அரோரா வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டில் கடந்த நான்கு ஆண்டுகளாக, துாத்துக்குடியை சேர்ந்த மதுசூதனன் ரெட்டி (69) என்பவர் தன் மனைவி பத்மாவதி மற்றும் மகள் பூர்ணிமா ஆகியோருடன் வசித்து வந்தார்.

ரியல் எஸ்டேட் அதிபர்
ஓய்வு பெற்ற மருத்துவரான மதுசூதனன் ரெட்டி, ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். இந்நிலையில், 14வது மாடியில் பால்கனியில் நடந்து கொண்டிருந்த மதுசூதனன் ரெட்டி, திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சத்தம் கேட்டு காவலாளிகள் ஓடி வந்து பார்த்தபோது, மதுசூதனன் ரெட்டி ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை கடிதம்
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மதுசூதனன் ரெட்டியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், மதுசூதனன் ரெட்டி, தற்கொலை தொடர்பாக எழுதி வைத்திருந்த எட்டு பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

மன உளைச்சல்
2 ஆண்டுகளுக்கு முன், மதுசூதனன் ரெட்டி, தன் மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆறு மாதங்களுக்கு முன் கணவரை பிரிந்த அவரது மகள், இவரது வீட்டுக்கே வந்தார். இதனால், மதுசூதனன் ரெட்டி மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

தற்கொலைக்கு காரணம்
மேலும், ரியல் எஸ்டேட் தொழிலிலும் அவருக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர், தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மதுசூதனன் ரெட்டி எழுதி வைத்திருந்த தற்கொலைக் கடிதத்திலும், இதையே காரணமாகச் சொல்லி இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications