சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னங்க நடக்குது? சசிகலாவிற்கு "இந்த" கேம்பிலிருந்து போன கால்.. போட்டுடைத்த மாஜி.. கூலான எடப்பாடி?

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் இருக்கும் முக்கியமான மாஜி அமைச்சர் ஒருவர் சசிகலா கேம்பில் இருக்கும் நிர்வாகிகளுடன் போனில் பேசி வருவதாக அதிமுக வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

Recommended Video

    ஒற்றை தலைமை வந்தாலும் சரி இரட்டை தலைமை வந்தாலும் சரி அந்த கட்சி தேறாது - டிடிவி தினகரன்

    அதிமுக பொதுக்குழு விவகாரம் உச்சம் அடைந்துள்ளது. அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறார்.

    மொத்தமா கலைங்க! கிரீன்வேஸ் சாலையில் வாசிக்கப்பட்ட லிஸ்ட்! கடுகடுத்த ஓபிஎஸ்! லபக்கென பிடித்த எடப்பாடிமொத்தமா கலைங்க! கிரீன்வேஸ் சாலையில் வாசிக்கப்பட்ட லிஸ்ட்! கடுகடுத்த ஓபிஎஸ்! லபக்கென பிடித்த எடப்பாடி

    இதற்காக வரும் ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவை கூட்ட அவர் தீவிரமாக முயன்று கொண்டு இருக்கிறார். இதற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் சட்ட போராட்டங்களை மேற்கொண்டுள்ளார்.

     சசிகலா பயணம்

    சசிகலா பயணம்

    அதிமுகவில் இவ்வளவு களேபரங்கள் நடக்கும் நிலையில்தான் சசிகலா புரட்சி பயணத்தை மேற்கொண்டு உள்ளார். வடமாவட்டங்களை மட்டும் குறி வைத்து அவர் இந்த புரட்சி பயணத்தை மேற்கொண்டு உள்ளார். தென் மாவட்டங்களில் ஏற்கனவே முக்குலத்தோர் ஆதரவு அவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுகவில் பிரச்சனை நிலவும் நேரத்தில், வடமாவட்டங்களுக்கு சென்று அங்கு நிர்வாகிகளை சந்திக்கும் திட்டத்தில் சசிகலா இருக்கிறாராம்.

     ஆலோசனை செய்து வருகிறார்

    ஆலோசனை செய்து வருகிறார்

    இதுவரையிலான பயணத்தில் அவருக்கு முன்பை விட கொஞ்சம் கூட்டம் அதிகமாகவே கூடியது. முன்பை விட தொண்டர்கள் அதிக அளவில் அவருக்கு ஆதரவாக வந்தனர். சில அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களும் கூட சசிகலாவிடம் ரகசியமாக பேசி இருக்கிறார்களாம். ஆனால் பெரிய நிர்வாகிகள் யாரும் அவருக்கு ஆதரவாக இல்லை என்று கூறப்படுகிறது. அதாவது மாவட்ட செயலாளர்கள் அளவில் யாரும் அதிமுக தரப்பில் இருந்து சசிகலாவை பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

    போன்

    போன்

    இப்படிப்பட்ட நிலையில்தான் எடப்பாடி கேம்பில் இருக்கும் மாஜி ஒருவர் சசிகலாவுடன் தொடர்பில் இருப்பதாக சசிகலா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எடப்பாடி வீட்டிற்கு அடிக்கடி மீட்டிங்கிற்கு செல்லும் முக்கிய புள்ளி ஒருவர்தான் சசிகலாவுடன் பேசி வருகிறாராம். எடப்பாடி பழனிசாமி கட்சியில் பொதுச்செயலாளர் ஆவதை அந்த மாஜி ஆதரித்தாலும், தனக்கு இதுவரை பெரிதாக பதவி எதுவும் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் சசிகலா தரப்பிடம் பேசி வருகிறாராம்.

    தகவல் வருகிறது

    தகவல் வருகிறது

    எடப்பாடி பழனிசாமி தரப்பு செய்யும் ஒவ்வொரு மூவ்களையும் இவர் சசிகலா தரப்பிடம் எடுத்து கூறி வருகிறாராம். ஏற்கனவே பொதுக்குழு தொடர்பாக பல தகவல்களை அந்த மாஜி சசிகலாவிடம் தெரிவித்துள்ளாராம். சசிகலாவிடம் அந்த மாஜி நேரடியாக பேசவில்லை. மாறாக இரண்டு தரப்பிற்கும் இடையில் இருக்கும் உறவினர் ஒருவர் மூலம் தகவல்கள் போனில் பரிமாறப்படுகின்றன என்று கூறப்படுகிறது. எடப்பாடி, ஓபிஎஸ் மீது இருக்கும் கோபம் காரணமாக அந்த மாஜி ஓபிஎஸ்ஸிடமும் எடப்பாடியிடமும் பேசாமல் சசிகலா தரப்பிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.

    உற்சாகம்

    உற்சாகம்

    இதன் காரணமாக சசிகலா தரப்பும் குஷியில் இருக்கிறதாம் . ஏற்கனவே ஓபிஎஸ் நம்மை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையில் இருக்கிறார். இப்போது இன்னொரு மாஜியும் தனக்கு ஆதரவாக இருக்கிறார். அதனால் போக போக எல்லாம் நமக்கு சாதகமாக நடக்கும் என்ற நம்பிக்கையில் சசிகலா இருக்கிறாராம். வடமாவட்ட பயணங்களில் இதனால் அவரிடம் கூடுதல் குஷி காணப்படுவதாக கூறப்படுகிறது.

    எடப்பாடி நம்பிக்கை

    எடப்பாடி நம்பிக்கை

    ஆனால் எடப்பாடி தரப்போ இதை எல்லாம் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள். சசிகலா எவ்வளவுதான் பயணம் மேற்கொண்டாலும் அதனால் பெரிய பலன் ஏற்பட போவதில்லை. அவரிடம் யார் பேசினாலும் கட்சியை அவரால் கைப்பற்ற முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு கூலாக இருக்கிறதாம். சசிகலாவின் வடமாவட்ட பயணங்களையும் எடப்பாடி பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.

    English summary
    Is a senior leader from Edappadi camp reportedly in talk with Sasikala side? அதிமுகவில் இருக்கும் முக்கியமான மாஜி அமைச்சர் ஒருவர் சசிகலா கேம்பில் இருக்கும் நிர்வாகிகளுடன் போனில் பேசி வருவதாக அதிமுக வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X