"கருவாடு மீன் ஆக போகுது".. சசிகலாவுக்கு எதிரா அப்படி பொங்கினாரே.. அவர் இப்போ "கப்சிப்".. இதோ காரணம்
சிவி சண்முகம் சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட போகிறாரா தெரியவில்லை
சென்னை: அதிமுகவில் நாளுக்கு நாள் பரபரப்புகள், ட்விஸ்ட்கள் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில், கட்சி 2 ஆக உடைய போகிறதா என்ற கவலை தொண்டர்களிடம் எழுந்துள்ளது.. மேலும் மாஜிக்கள் சசிகலா பக்கம் சாய்வார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுகிறது.
சசிகலாவின் தீவிர எதிர்ப்பாளர்களில் முக்கியமானவர் மாஜி அமைச்சர் சிவி சண்முகம்.. எடப்பாடி பழனிசாமியின் மிகமிக தீவிரமான விசுவாசி..
கடந்த 5 ஆண்டு காலத்தில், எடப்பாடியே அமைதி காத்தாலும் சசிகலாவின் பெயரை சொன்னால் கொந்தளித்தவர் சிவி சண்முகம்தான்.

சிறை தண்டனை
சசிகலா விடுதலையாகி ஜெயிலில் இருந்து வரும்போது, அதிமுக கொடியை பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்முதலில் சொன்னவரே சண்முகம்தான். அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று டிஜிபியிடம் அதிமுக நிர்வாகிகள் புகார் தந்தபோது, அதில் முன்னணியில் சென்றவரும் சண்முகம்தான்.

கருவாடு மீனாகுமா?
''கருவாடு மீனாகிவிட முடியாது என்று காளிமுத்து சொன்னாரே. ஆனால், கருவாடு கூட மீனாகிவிடலாம். சசிகலா ஒருநாளும் அதிமுகவுக்குள் வர முடியாது, ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது'' என்று சொன்னவரும் சண்முகம்தான்... இந்த இயக்கத்தில் சசிகலா எங்கே இருந்தார் என்பதே தெரியாது, அவருக்கும், அதிமுகவின் சரித்திரத்திற்கும் சம்பந்தமே இல்லை, அம்மா வீட்டில் வேலைக்காரராக இருந்தார். வேலை முடிந்தது அவர் சென்றுவிட்டார். அவ்வளவுதான். அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொன்னவரும் சண்முகம்தான்.

பினாமி கட்சி
தன் பினாமி கட்சியை கூட ஜெயிக்க வைக்க இயலாத சசிகலா அதிமுகவை என்ன செய்து விட முடியும்? அதிமுக யார் தயவிலும் இல்லை, அதிமுக யாரையும் நம்பி இல்லை, இது ஒன்றரைக் கோடி தொண்டர்களை நம்பியே இருக்கிறது என்று சொன்னவரும் சண்முகம்தான்.. சசிகலாவின் தூண்டுதலில் எனக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன.. அவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என்று போலீசுக்கு போய் புகார் தந்தவரும் சண்முகம்தான்.

உச்சநீதிமன்றம்
சசிகலா தாக்கல் செய்த எல்லா மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதே.. இதற்குமேல் சசிகலா ஐநா சபையில்தான் முறையிட வேண்டும் என்று சொன்னவரும் சண்முகம்தான்.. இவ்வளவு பேசிய சண்முகம்தான் இன்று சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க போகிறாரா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறார்.. காரணம், கட்சிக்குள் ஏகப்பட்ட கரைசல்கள் 2 நாட்களாகவே வெடித்து கொண்டிருக்கிறது. ஓபிஎஸ்ஸுக்கான முக்கியத்துவத்தை எடப்பாடி தருவதற்கு தவறவிட்டதன் விளைவு, கட்சி இன்றைக்கு 2ஆக பிரியுமோ என்ற கேள்வியை முன்னெடுத்து வருகிறது..

முணுமுணுப்புகள்
அப்படியானால், ஓபிஎஸ் - எடப்பாடி என இரு ஆதரவாளர்கள் தனித்தனியாக பிரியக்கூடிய சூழலும் உருவாகிவிடும் போல தெரிகிறது.. அதன்படி பார்த்தால், ஓபிஎஸ் அநேகமாக சசிகலா பக்கம் சாய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், எடப்பாடியின் அதிதீவிர ஆதரவாளராக சொல்லப்படும் சிவி சண்முகமும், சசிகலா பக்கம் சாய்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

திமுக
இதற்கு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன.. முதல் விஷயமாக கட்சி அடுத்தடுத்த தேர்தல்களினால் வெற்றி வாய்ப்பை இழந்து வருகிறது.. வளர்ந்து வரும் திமுகவுக்கு, அதிமுகவினால் பதிலடி தர முடியவில்லை. இதைதான் அன்று நயினார் நாகேந்திரன் ஓபனாகவே போட்டு உடைத்து பேசினார்.. ஏற்கனவே, ஊழல் புகார்களில் சிக்கிய மாஜிக்கள் ஒவ்வொருவராக கைதாகி வரும் நிலையில், அந்த கைது நடவடிக்கையை இதுவரை அதிமுக மேலிடத்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை..

வேலுமணி
வேலுமணி வீடு வரை ரெய்டுக்கு திமுக அரசு வந்துவிட்டபிறகுதான், அதன் சீரியஸ்தன்மை உணரப்பட்டது.. வேலுமணி வீடு வரை ரெய்டுக்கு திமுக அரசு வந்துவிட்டபிறகுதான், அதன் சீரியஸ்தன்மை உணரப்பட்டது.. இதற்கு பிறகு, ஜெயக்குமார் கைது செய்யப்பட்டது அக்கட்சிக்கு ஒட்டுமொத்த ஷாக்தான். வேலுமணி உட்பட முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்தபோதே, மக்களின் அனுதாபத்தை பெறுவதற்கு அதிமுக தவறிவிட்டதும் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.. இதற்கு பிறகு, ஜெயக்குமார் கைது செய்யப்பட்டது அக்கட்சிக்கு ஒட்டுமொத்த ஷாக்தான். வேலுமணி உட்பட முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்தபோதே, மக்களின் அனுதாபத்தை பெறுவதற்கு அதிமுக தவறிவிட்டதும் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது..

சசிகலா
இனியும் கைது நடவடிக்கைகள் தொடரும் என்பதை அழுத்தம் திருத்தமாக திமுக தலைமை சொல்லி வருவதால், மற்ற மாஜிக்களுக்கும் கலக்கம் சூழ்ந்து வருகிறது.. அந்த வகையில் சிவி சண்முகத்தையும் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக ஒரு பீதி நேற்று முன்தினம் கிளம்பியது. அதனால்தான், அவர் வீட்டு முன்பாக தொண்டர்கள் கூடினர். இதனால் சசிகலா வந்தால்தான் தங்களுக்கு பாதுகாப்பு என்று சண்முகம் நினைக்கத் தொடங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஷெரீப்
நடந்து முடிந்த இன்னொரு விஷயமும் இங்கு பொருத்தி பார்க்கப்படுகிறது.. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த முகமது ஷெரீப் என்பவர், 2 நாட்களுக்கு மன்பு, சசிகலாவை சந்தித்து அதிமுகவிற்கு தலைமையேற்க வாருங்கள் என்று பகிரங்கமாகவே சொல்லியிருந்தார்.. இவர் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளரார் ஆவார்.. அத்துடன் சிவி சண்முகத்தின் தீவிரமான ஆதரவாளரும்கூட.. சண்முகத்தின் மீதான அதிருப்தியில் ஷெரீப் இப்படி சொன்னாரா என்று தெரியவில்லை..
Recommended Video

கருவாடு - மீன்
ஆனால், அதிமுகவை காப்பாற்றுங்கள் என்று விழுப்புரத்தின் முக்கியமான நிர்வாகிகளை அழைத்து கொண்டு சென்று சசிகலாவை நேரடியாகவே சந்திக்க முனைந்ததையும் இங்கு தவிர்த்து பார்க்க முடியவில்லை. ஆக, சிவி சண்முகத்தின் மனநிலையில் சற்று மாறுபாடு தென்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், அடுத்து என்ன செய்ய போகிறார்?என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. அப்படின்னா "கருவாடு மீன் ஆக போகிறதா?" பொறுத்திருந்து பார்ப்போம்..!
-
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
குறிவைத்து அடித்த எடப்பாடி பழனிசாமி.. வீழ்த்தப்பட்ட ஜெயக்குமார்.. அதிமுக 2021 தேர்தல் பிளாஷ்பேக் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications