மத்திய அமைச்சர் ஆகிறாரா அண்ணாமலை? தலைவர் பதவிக்கு மாற்றாக சமாதானம்? டெல்லி பிளான் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகும் நிலையில்... அண்ணாமலை மத்திய அமைச்சர் ஆவப்போவதாகவும் தகவல்கள் வர தொடங்கி உள்ளன. இதெல்லாம் இணையத்தில், அரசியல் விமர்சகர்கள் இடையே பரவும் தகவல்கள்தான். இன்னும் உண்மையான அறிவிப்புகள் வரவில்லை.

தமிழக பாஜகவில் மாவட்ட தலைவர்கள், மண்டலத் தலைவர்கள் நியமனம் முடிந்த நிலையில், மாநில தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகளை நியமிப்பது மட்டுமே பாக்கி இருக்கிறது. மாநில நிர்வாகிகள் குறித்த பட்டியல் கட்சியின் தேசிய தலைமைக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.

அண்ணாமலையை மாற்ற வாய்ப்பு இருக்கிறதா?

இப்படிப்பட்ட நிலையில்தான் அண்ணாமலை மாற்றப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக பாஜகவின் மாநில தலைவர் தேர்தல் நடக்க போவதாக சொல்கிறார்கள். அண்ணாமலை மாநில தலைவராக பதவி ஏற்ற காலத்தில் இருந்தே அவர் மாற்றப்பட போவதாக பலர் எதிர்பார்க்கிறார்கள். யாராவது டெல்லி சென்றால் அண்ணாமலை மாற்றப்படுகிறார் என்று பேச்சு வரும். அண்ணாமலை லண்டனுக்கு சென்ற போது இதேபோல் செய்திகள் வந்தன.

Is BJP Chief Annamalai becoming the Union Minister What will happen next

எச். ராஜா தலைமையில் குழு அமைந்த போதும் இதேபோல் செய்திகள் வந்தன. இப்போது தமிழக பாஜகவின் மாநில தலைவர் தேர்தல் நடக்க போவதாக சொல்கிறார்கள். உடனே அண்ணாமலையை மாற்ற போவதாக செய்திகள் வருகின்றன. ஆனால் உண்மையில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அண்ணாமலையை மாற்ற வாய்ப்பு குறைவு. ஏனென்றால் அவரை வைத்தே கட்சி திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. ஒரு வருடத்தில் தேர்தலை வைத்துக்கொண்டு அவரை மாற்றுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளன என்றும் இன்னொரு விதமான வாதங்கள் வைக்கப்படுகின்றன.

நயினார் நாகேந்திரன்

2023ல் அதிமுக பாஜக கூட்டணி உடைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை..பாஜக தமிழக தலைவர் பதவியில் இருந்து விலகலாம் என கட்சிக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலை இருந்தால் கூட்டணி அமைவது கஷ்டம் என்று டெல்லி இந்த முடிவை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. அண்ணாமலையின் சமீபத்திய பேட்டிகளும் கூட இதை உணர்த்துவதாகவே இருக்கின்றன. இன்னும் 2 வாரங்களில் நான் சாதாரண ஆளாக இருக்கலாம் என்றும் கூட அண்ணாமலை இக்கு வைத்து பேசி உள்ளார்.

அண்ணாமலை மாற்றம்

2026 மாநிலத் தேர்தலில் கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றால் கூட்டணி நெருக்கமாக இருக்க வேண்டும். அதுமட்டுமன்றி பாஜக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் முகமும் கவுண்டர் ஜாதியாக இருப்பதை பாஜக விரும்பவில்லை. எடப்பாடி அண்ணாமலையை ஒரே ஜாதி. அதுவே பாஜகவிற்கு வேறு ஜாதியை சேர்ந்தவர் தலைவராக இருந்தால் அது கூட்டணிக்கு இன்னும் வலு சேர்க்கும். முக்கியமாக தென் மண்டலத்தில் கூட்டணிக்கு பலம் தரும். இதை எல்லாம் கருத்தில் கொண்டு அண்ணாமலையை மாற்ற ஒரு ஆலோசனை நடக்கிறதாம். இதன் காரணமாகவே நயினார் நாகேந்திரனை தலைவராக்க டெல்லி ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வருகின்றன.

அண்ணாமலை அமைச்சரவை

இந்த நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகும் நிலையில்... அண்ணாமலை மத்திய அமைச்சர் ஆவப்போவதாகவும் தகவல்கள் வர தொடங்கி உள்ளன. அதாவது கர்நாடகா அல்லது மகாராஷ்டிராவில் இருந்து ராஜ்ய சபா வழியாக இவர் எம்பி ஆகி அமைச்சர் ஆக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

Take a Poll

தமிழ்நாட்டில் இருந்து இவர் எம்பி ஆக வாய்ப்பு இல்லை. அதற்கு அதிமுக ஆதரவு தேவை. அதனால் அண்ணாமலை தமிழ்நாட்டில் இருந்து அமைச்சராக முடியாது. இதனால் மற்ற மாநிலங்களில் இருந்து இவர் எம்பி ஆகி.. அமைச்சர் ஆகும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இதெல்லாம் இணையத்தில், அரசியல் விமர்சகர்கள் இடையே பரவும் தகவல்கள்தான். இன்னும் உண்மையான அறிவிப்புகள் வரவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+