• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அடிமடியிலேயே" கை வைக்கும் எடப்பாடி.. அதிர்ந்த பாஜக.. "தூண்டிலில்" விழ போகும் டெல்லி.. என்னாகும்?

Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லி ஆதரவு கிடைக்குமா? அல்லது வழக்கம்போல் ஓபிஎஸ்ஸுக்கே சப்போர்ட் கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வெறும் அரை மணி நேரத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இதுவரை நடந்து முடிந்ததில்லை.. அதிமுக வரலாற்றில் இல்லாத சம்பவங்கள் எல்லாம் இந்த முறை நடந்துள்ளது.. ஆனால், குழப்பங்கள் தீரவில்லை.. பிரச்சனைகள் முடிவுக்கு வரவில்லை.. எனினும் இதில், கூட்டணியில் உள்ள பாஜகவின் ரோல் என்ன என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது.

பொதுக்குழு கூட்டம் முடிந்ததும் சென்ற எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுக்கான மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி சந்தித்துப் பேசினார்... அவருடன் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையும் உடனிருந்தார்.

எடப்பாடி பழனிச்சாமியை யாரோ மிரட்டி இயக்குகிறார்கள்.. ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டு! எடப்பாடி பழனிச்சாமியை யாரோ மிரட்டி இயக்குகிறார்கள்.. ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டு!

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இந்த இருவரும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசிய பிறகு, ஓபிஎஸ்ஸை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினர்... இந்த சந்திப்பின்போது அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து தாங்கள் பேசவில்லை என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார்.. இதைத்தொடர்ந்து, பாஜக தலைவர்கள் இருவரும் குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரெளபதி முர்மூவுக்கு அதிமுகவின் ஆதரவை கேட்டு அதன் தலைவர்களிடம் பேச வந்ததாக அதிமுக மற்றும் பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டது. என்றாலும், சில விஷயங்களை அப்போது இரு தரப்பிலுமே விவாதித்ததாக கூறப்படுகிறது.

 பச்சை சிக்னல்

பச்சை சிக்னல்

ஓபிஎஸ்ஸூக்கு பாஜக மேலிடம் நெருக்கம் என்பது தெரிந்த விஷயம்தான்.. அதனால், இந்த விஷயத்திலும் எடப்பாடியைவிட, ஓபிஎஸ்ஸுக்கே தன்னுடைய ஆதரவை பாஜக தரும் என்றே கருதப்பட்டது.. ஒருவேளை ஒற்றை தலைமை விவகாரம் எடப்பாடிக்கே சாதகமாக அமையும் பட்சத்தில், அப்போது பாஜக தலைவர்கள் நிச்சயம் ஓபிஎஸ்ஸை கைவிட மாட்டார்கள் என்றும், அதற்காக எடப்பாடி மீதான வழக்குகளை தூசி தட்டி எடுத்து, நெருக்கடி தரவும் டெல்லி துணியும் என்றும் யூகிக்கப்பட்டது..

 ஜாக்கிரதை

ஜாக்கிரதை

ஆனால், நிலைமை அப்படி இல்லை என்றே தெரிகிறது.. காரணம், எடப்பாடிக்கு இந்த அளவுக்கு ஆதரவு கட்சிகள் இருக்கும் என்று டெல்லியே நினைக்கவில்லையாம்.. கட்சியையும், நிர்வாகிகளையும், சீனியர்களையும் எடப்பாடி தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதை பார்த்து மிரண்டுதான் போயுள்ளதாம்.. எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், எப்படியும் அதிமுகவின் தயவுதான் பாஜகவுக்கு தேவைப்படும் என்பதாலும், பெரும்பாலான அதிமுக, எடப்பாடி பக்கமே உள்ளதாலும், இந்த விஷயத்தில் படுஜாக்கிரதையாக காய் நகர்த்துவதாக கூறப்படுகிறது.

 பச்சை கொடி

பச்சை கொடி

அதனால், ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தந்துவிட்டால், அதிமுகவின் வாக்கு சதவீதத்தை இழக்க நேரிடும் என்ற கலக்கமும் பாஜகவுக்கு உள்ளதாம்.. எனவே இப்போதைக்கு இந்த விஷயத்தில் அமைதி காத்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.. ஆனால், எடப்பாடி பழனிசாமியோ வேறு கணக்கு போடுகிறாராம்.. ஒருவேளை ஓபிஎஸ்ஸுக்கு டெல்லி மேலிடம் பச்சை கொடி காட்டிவிட்டால் என்ன செய்வது என்று யோசித்து, அதற்காகவே காங்கிரஸ் தரப்பில் நெருக்கம் காட்ட துவங்கி விட்டதாக சொல்கிறார்கள்.. வரும் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, அதற்கான காய்நகர்த்தலைதான் எடப்பாடி இப்போதே கையில் எடுத்து விட்டார் என்கிறார்கள்.

 ஷாக் - பாஜக

ஷாக் - பாஜக

இதுவும் பாஜகவுக்கு ஷாக்தானாம்.. அதிமுகவின் தயவு இல்லாமல் தனித்து எந்த ஒரு தேர்தலையும் சந்திக்க முடியாத சூழலில் உள்ளபோது, எடப்பாடியை நிச்சயம் பாஜக பகைத்து கொள்ளாது, அதேசமயம், காங்கிரஸ் பக்கமும் அதிமுகவை நழுவவிட்டுவிடாது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. டெல்லியை வைத்து, எடப்பாடிக்கு ஒரு செக் வைக்க ஓபிஎஸ் ஒரு கணக்கு போட்டால், டெல்லியையே அசைக்க எடப்பாடி ஒரு கணக்கு போட்டுவருவதுதான், இன்றைய ஹாட் டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது..!

English summary
Is edapadi palanisamy likely to form an alliance with congress and What will the BJP decide எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லி ஆதரவு கிடைக்குமா என்ற சந்தேகம் வலுத்துள்ளது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X