சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவைக் கொல்ல 9 கண்கள் கொண்ட ஹார்ஷூ நண்டு ரத்தம்...!!

Google Oneindia Tamil News

சென்னை: ஹார்ஷூ நண்டில் இருந்து கிடைக்கும் ரத்தம் கொரோனாவை குணப்படுத்தும் என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இந்த நண்டு 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இருந்தாலும் அதன் மருத்துவ பலன்கள் தற்போதுதான் சிறிது சிறிதாக வெளிச்சத்துக்கு வருகிறது.

ஹார்ஷூஎனப்படும் நண்டின் ரத்தம் இளம் ப்ளூ நிறத்தில் இருக்கும். இந்த ரத்தத்தில் தான் அனைத்து மருத்துவ குணங்களும் இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இந்த ரத்தத்தில் எண்டோகஸின் எனப்படும் பாக்டீரியா டாக்ஸின் அதிகமாக இருக்கிறது. தற்போது இந்த ரத்தம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பயன்படுமா என்ற ஆய்வில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். அதேசமயம் நண்டு ரத்தத்தை எடுக்கக் கூடாது என்று ஒரு குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எப்போதும் ஆய்வு என்று இருந்தால், சாதக, பாதகங்கள் இருப்பது வழக்கம்தான்.

Is Horseshoe crab blood will cure coronavirus, what is horseshoe crab?

புதியதாக தயாரிக்கப்படும் மருந்துகளில் இந்த ரத்தம் வேதியியல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்துகிறதா என்ற ஆய்வை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அவ்வாறு மாற்றங்கள் ஏற்படும்போது மனித உடலில் மாற்றங்களை ஏற்படுத்துமா போன்ற ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான நண்டுகள் பிடிக்கப்பட்டு அதன் இருதயப் பகுதியில் இருக்கும் நரம்பில் இருந்து ரத்தம் எடுத்து, அதை ஆய்வு கூடத்தில் அமெரிக்க விஞ்ஞானிகள் பரிசோதனை செய்கின்றனர். பின்னர் அந்த நண்டுளை மீண்டும் கடலுக்குள் விடுகின்றனர். இந்த வகை நண்டுகளுக்கு ஒன்பது கண்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இரண்டு கண்கள் மட்டும் பெரிதாக மேல் எழும்பி இருக்கும். மற்றவை சிறியதாக இருக்கும்.

வெள்ளிக்கிழமையை அதிர வைத்த விகாஸ் துபே.. விறுவிறு என்கவுன்டர்.. முழு ரவுண்டப்!வெள்ளிக்கிழமையை அதிர வைத்த விகாஸ் துபே.. விறுவிறு என்கவுன்டர்.. முழு ரவுண்டப்!

இதன் ரத்தம் கொரோனாவை கட்டுப்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தாலும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை கொரோனாவுக்கு தடுப்பு மருந்து வராத நிலையில், இதுவும் ஒரு முயற்சியாக இருக்கிறது.

English summary
Is Horseshoe crab blood will cure coronavirus, what is horseshoe crab?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X