சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பிரதமர் ஸ்டாலின்?".. டி.ஆர். பாலுவே சொல்லிட்டாரே.. அப்ப அதேதானா.. திமுகவை மிரண்டு பார்க்கும் டெல்லி

தேசிய அரசியலில் முக்கிய இடத்தை பெற்று வருகிறார் முதல்வர் ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு வருட ஆட்சியை நிறைவு செய்து முடித்துள்ள திமுக அரசு, தேசிய அளவில் தன்னுடைய கவனத்தை விரிவுபடுத்த போகிறதாம்.

இந்த ஒரு வருடம் ஆட்சி நிறைவில் ஏகப்பட்ட பிரச்சனைகளை திமுக சமாளித்துள்ளது. முக்கியமாக, தொடர்ந்து பிரதான இடத்தையும் பெற்று வருவது, தமிழகத்தின் மீதான நம்பிக்கையையும், மதிப்பையும் முன்னேற்றத்தை தேசிய அரசியலில் திரும்பி பார்க்க வைத்து வருகிறார் முதல்வர் முக ஸ்டாலின்.

வெளிப்படை தன்மையுடன் நிர்வாகமும் செம்மையாகவும், திறமையாகவும் கையாளப்பட்டதை இந்த நாடே உற்று கவனித்தது..

 பேரறிவாளன் விடுதலை ரொம்ப தப்பு.. இதனால் திமுக-காங். கூட்டணியில் விரிசலா? திருநாவுக்கரசர் விளக்கம் பேரறிவாளன் விடுதலை ரொம்ப தப்பு.. இதனால் திமுக-காங். கூட்டணியில் விரிசலா? திருநாவுக்கரசர் விளக்கம்

மாநில உரிமை

மாநில உரிமை

அதுமட்டுமல்லாமல், மாநில உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சிகளும் கவனத்தை பெற்றுள்ளன.. சுருக்கமாக சொன்னால், சொந்த மாநிலத்தில் காட்டிவரும் அக்கறை ஒருபக்கம், மாநில உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற முயற்சி மறுபக்கம் என இரண்டு வழிகளில் முதல்வர் தன் நாட்டத்தை விரிவுபடுத்தி வருகிறார்.. எல்லாவற்றிற்கும் மேலாக, விரைவில் எம்பி தேர்தல் நடக்க உள்ள நிலையில், பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒன்று திரட்டுவதில் தீவிரத்தையும் கையில் எடுத்துள்ளார்..

 ஆளுநர் ரவி

ஆளுநர் ரவி

அதனால்தான் ஒவ்வொரு முறையும் டெல்லி செல்லும்போதெல்லாம், எதிர்க்கட்சிகளின் கவனம் ஸ்டாலின் மீது குவிவதை தவிர்க்க முடியவில்லை.. ஓராண்டு ஆட்சியை விமர்சியாக கொண்டாடவும், ஓராண்டில் ஒவ்வொரு துறையிலும் சாதித்த சாதனைகளை விளம்பரப்படுத்தவும் திமுக அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் கசிந்தன.. அதாவது, சாதனை விளம்பரங்கள் பஞ்ச் டயலாக் வடிவத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக டயலாக்குகளை ரெடியாகி கொண்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

 விளம்பரங்கள்

விளம்பரங்கள்

அதாவது, ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் புரட்சிக்கர திட்டங்கள், சாதனைகள் அனைத்தும் வெளிமாநிலங்களிலும் எதிரொலிக்க வேண்டும் என்பதால், அந்தந்த மாநில மொழிகளில் அந்தந்த மாநிலங்களில் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் விளம்பரப்படுத்தவும் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இதற்கு காரணம், தேசிய அளவில் ஸ்டாலின் தவிர்க்க முடியாத ஒரு தலைவர் என்பதை நிலை நிறுத்தவும் உயர்த்திப் பிடிக்கவுமே இந்த விளம்பர ஏற்பாடுகள் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்...

 மாஸ் விளம்பரம்

மாஸ் விளம்பரம்

இப்போது இது தொடர்பாக இன்னொரு விஷயம் திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.. இந்த விளம்பரங்கள் தற்போது இறுதிக்கட்டத்தில் தயாராகி கொண்டிருக்கிறதாம்.. இதற்கான ஏற்பாடுகளை டெல்லியில் உள்ள ஒரு பிரபல விளம்பர நிறுவனம் செய்து வருவதாக தெரிகிறது.. முதல் வருடம் நிறைவன்று இந்தியா முழுதும் வெளியாகும் ஆங்கில தினசரிகளில் மட்டுமன்றி, இந்தி, மராத்தி என மாநில மொழிகளிலும் விளம்பரம் வர உள்ளதாக கூறப்படுகிறது.. ஸ்டாலின் போட்டோவுடன் திமுக அரசு நிறைவேற்றிய திட்டங்கள் அனைத்தும் இந்த விளம்பரத்தில் இடம் பெறும் என்கிறார்கள்.

 டெல்லி மேலிடம்

டெல்லி மேலிடம்

இதற்காக கோடிக்கணக்கிலும் பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும், அன்றைய தினம் முழுக்க திமுகவின் சாதனை மட்டுமே மீடியாக்களில் பேசும்வண்ணம் இந்த விளம்பர ஏற்பாடுகள் தயாராகி கொண்டிருக்கிறதாம்.. இதையெல்லாம் கேள்விப்பட்டுதான், டெல்லி மேலிடமே ஆச்சரியப்பட்டு போயுள்ளது.. ஏற்கனவே பிரதமர் வேட்பாளர் லிஸ்ட்டில் ஸ்டாலினையும் இடம்பெற வேண்டும் என்பதே அக்கட்சியினர் விருப்பமாக இருந்து வரும் நிலையில், வடமாநிலங்களில் வெளியாகும் விளம்பரங்கள் திமுகவை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்லும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

 டிஆர் பாலு

டிஆர் பாலு

இப்படிப்பட்ட சூழலில், சென்னை ஆதம்பாக்கத்தில் நடந்த திமுக நிகழ்ச்சியில் டிஆர் பாலு பேசிய பேச்சையும் இங்கு நாம் உற்று கவனிக்க வேண்டி உள்ளது.. "திராவிட மாடல் என்பது மாநில சுயாட்சி... அந்த மாநில சுயாட்சி கொள்கையோடு சமூக நீதியும் இணைந்தது தான் திராவிட மாடல். விரைவில் மத்தியில் திராவிட மாடல் ஆட்சி அமையும். மாநில சுயாட்சி கிடைக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.. மத்தியிலும் திராவிட மாடல் என்றால்? அப்ப மிகப்பெரிய ட்விஸ்ட் தேசிய அரசியலில் காத்திருக்கிறது போலும்.. பார்ப்போம்..!

English summary
Is MK Stalin becoming the inevitable leader nationally and dmk governments one year performance தேசிய அரசியலில் முக்கிய இடத்தை பெற்று வருகிறார் முதல்வர் ஸ்டாலின்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X