Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Omicron: மனிதர்களை காக்க இயற்கையே அனுப்பிய வேக்சினா இது? டாப் நிபுணர்கள் உடைக்கும் பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓமிக்ரான் காரணமாக உலகம் முழுக்க கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில், ஓமிக்ரானை இயற்கையான வேக்சின் என்று பல நாடுகளில் கருத்துக்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

இயற்கையே அனுப்பிய வேக்சின் இது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் ஓமிக்ரான் ஏற்பட்டால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுவது இல்லை. அறிகுறிகள் குறைவாக உள்ளது.

அதேபோல் பலி எண்ணிக்கையும் மிக மிக குறைவாக இருக்கிறது. இதனால் ஓமிக்ரானை இயற்கையான வேக்சின் என்று கூறும் போக்கு அதிகரித்து வருகிறது.

வேகமாக பரவும் ஓமிக்ரான்

வேகமாக பரவும் ஓமிக்ரான்

ஓமிக்ரான் வேகமாக பரவுகிறது. இப்படிப்பட்ட நிலையில் உலகம் முழுக்க பலருக்கு இது கொரோனா எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. ஓமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு பக்கம் எதிர்ப்பு சக்திக்கான ஆண்டிபாடியும் கிடைக்கும். அதே சமயம் இது ஆபத்தும் குறைவாக இருக்கிறது. டெல்டா பரவலை தடுத்து ஓமிக்ரான் புதிய உச்சம் தொட்டுள்ளது.

இயற்கையான வேக்சின்

இயற்கையான வேக்சின்

எனவே டெல்டா என்ற மோசமான வகை கொரோனாவை வீழ்த்தி மக்களுக்கு எதிர்ப்பு சக்தி வழங்க வந்த "வீக்" கொரோனாவாக ஓமிக்ரான் வகை கொரோனா பார்க்கப்படுகிறது. இந்த கருத்து உலகம் முழுக்க பல நாடுகளில் பரவி வரும் நிலையில் இந்தியாவை சேர்ந்த டாப் வல்லுனர்கள் இதை தவறு என்று கூறி உள்ளனர். இப்படி நினைப்பது மிக தவறான கருத்து என்று தெரிவித்துள்ளனர்.

ஓமிக்ரான் வேக்சின்

ஓமிக்ரான் வேக்சின்

அதன்படி, உஜாலா சிக்னஸ் குழும மருத்துவத்தின் நிறுவனர் சூச்சின் பஜாஜ் அளித்த பேட்டியில், இந்த ஓமிக்ரான் சமயங்களில் நீண்ட பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த ஓமிக்ரான் காரணமாக சிறுநீரகம், மூளை தொடங்கி பல உறுப்புகள் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்துகிறது. சிலருக்கு 8 மாதங்கள் வரை கூட உறுப்புகளில் பாதிப்பு ஏற்படலாம்.

பின்விளைவு

பின்விளைவு

இதனால் வரும் நாட்களில் என்ன பாதிப்பு ஏற்படும், என்ன பின்விளைவுகள் ஏற்படும் என்று கூற முடியாது. இதனால் இப்போதே கவனமாக இருக்க வேண்டும். இதை இயற்கையான தடுப்பூசி என்று கூற முடியாது. அந்த வார்த்தை பதத்தை பயன்படுத்த முடியாது. பின்விளைவுகள் எதிர்காலத்தில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஓமிக்ரான் அறிகுறி

ஓமிக்ரான் அறிகுறி

பிரபல தொற்றுநோயியல் நிபுணரான கிரிதர் ஆர்.பாபு, ஓமிக்ரான் கேஸ்கள் என்பது லேசானதாக இருக்கலாம். இது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தாமல் இருக்கலாம். பலர் ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அமெரிக்காவில் கேஸ்களும் அதிகரித்து வருகிறது. எனவே ஓமிக்ரானை இயற்கையான வேக்சின் என்று கூற முடியாது.

ஓமிக்ரான் தடுப்பு விதி

ஓமிக்ரான் தடுப்பு விதி

எனவே மக்கள் கவனமாக இருக்க வேண்டும், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஐசிஎம்ஆர் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா, மருத்துவ நிபுணர் யாஷ் ஜாவேரி ஆகியோர் இதற்கு கொஞ்சம் மாறான கருத்தை தெரிவித்துள்ளனர். அதன்படி ஓமிக்ரான் காரணமாக பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

Recommended Video

    இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியுள்ளது - மா சுப்பிரமணியன்
    இயற்கையான வேக்சின் கிடையாது

    இயற்கையான வேக்சின் கிடையாது

    இதனால் மந்தை எதிர்ப்புசக்தி ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஒரு விதமான கலப்பு எதிர்ப்பு சக்தியை இது உருவாக்கும் வாய்ப்புகள் உள்ளன, என்று குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் ஓமிக்ரான் என்பதை இயற்கையான வேக்சின் என்று அழைக்கலாம் என்று இதுவரை இந்தியாவை சேர்ந்த எந்த ஆராய்ச்சியாளரும் தெரிவிக்கவில்லை.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+