சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவசர கதவு: "ஏன் என் நேரத்தை வீணடிக்கிறீங்க.." செய்தியாளர்களிடம் கடுகடுத்த தேஜஸ்வி சூர்யா

Google Oneindia Tamil News

சென்னை: இண்டிகோ விமானத்தில் அவசர கதவு திறக்கப்பட்ட விவகாரம் குறித்து செய்தியாளர்கள் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்க மறுத்த தேஜ்ஸ்வி சூர்யா, 'எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் ஏற்கனவே அதிகாரப்பூர்வ நபர்கள் பதிலளித்து விட்டனர்' என்றார்.

கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்சிக்கு இண்டிகோ விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட இருந்தது. இந்த விமானத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட பயணிகள் இருந்தனர்.

பொதுவாக விமானம் புறப்படுவதற்கு முன்பாக விமான பணிப்பெண்கள் விமானத்தின் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விளக்கும் போது அவசர கால நேரத்தில் எமர்ஜென்சி கதவை திறப்பது பற்றியும் விளக்கும் நடைமுறை கடைபிடிக்கப்படும்.விமானத்தில் பயணிகள் இருக்கைக்கு இடையே முன் வரிசையில் எமர்ஜென்சி டோர் இருக்கும்.

தேசிய அளவில் வெடித்த விவகாரம்! இண்டிகோ விமான எமர்ஜென்சி கதவை திறந்தது யார்? விசாரணைக்கு உத்தரவு தேசிய அளவில் வெடித்த விவகாரம்! இண்டிகோ விமான எமர்ஜென்சி கதவை திறந்தது யார்? விசாரணைக்கு உத்தரவு

தவறுதலாக திறந்து விட்டதாக..

தவறுதலாக திறந்து விட்டதாக..

விமான பணிப்பெண் எமர்ஜென்சி கதவு குறித்து விளக்கிய போது எமர்ஜென்சி இருக்கைக்கு அருகே இருந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா கதவை தவறுதலாக திறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பயணிகள் கீழே இறக்கப்பட்டு, விமானத்தில் உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பிறகு, விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது. விமானம் சுமார் 142 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.

விசாரணைக்கு உத்தரவு

விசாரணைக்கு உத்தரவு

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து விமர்சனம் செய்தன. குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டரில் அண்ணாமலையும் தேஜஸ்வி சூர்யாவையும் மறைமுகமாக சாடியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், பல நாட்களுக்கு பிறகு மத்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டது.

மன்னிப்பு கோரிவிட்டார்

மன்னிப்பு கோரிவிட்டார்

அதன்பிறகுதான் விமானத்தில் தேஜஸ்வி சூர்யா தான் எமெர்ஜென்சி கதவை தவறுதலாக திறந்து விட்டதாக வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது:- விமானத்தில் எமர்ஜென்சி கதவை திறந்தது பா.ஜனதா எம்.பி. தேஜஸ்வி சூர்யா என்றும் அவர் தவறுதலாக அவசரகால கதவை திறந்து விட்டார். தனது செயலுக்கு மன்னிப்பும் கோரிவிட்டார்.

நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை

நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை

விமானத்தில் அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு பரிசோதனைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டன. அதன்பிறகு தான் விமானம் புறப்பட அனுமதி அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பியான தேஜஸ்வி சூர்யாவிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், இதற்கு பதிலளிக்க மறுத்த தேஜ்ஸ்வி சூர்யா, எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் அதிகாரப்பூர்வ நபர்கள் பதிலளித்து விட்டனர் என்றார்.

தெளிவான பதிலளித்து இருக்கிறார்கள்

தெளிவான பதிலளித்து இருக்கிறார்கள்

இது குறித்து அவர் கூறுகையில், "இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகளும், மத்திய விமானப்போக்குவரத்து அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா மற்றும் என்னுடன் பயணித்த அண்ணாமலை, மேலும் இரு பயணிகள் அங்கு என்ன நடந்தது என்பது குறித்து பேசிவிட்டனர். எனவே நான் எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஏனென்றால் இது குறித்து காங்கிரஸ் பலமுறை பேசிவிட்டது. இந்த விவகாரத்தில் உரிய அதிகாரப்பூர்வ நபர்கள் தெளிவான பதிலளித்து இருக்கிறார்கள். நீங்கள் அதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்" என்றார்.

அவசியம் அவருக்கு இல்லை

அவசியம் அவருக்கு இல்லை

முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக பேசியிருந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்ததாவது:- தேஜஸ்வி சூர்யா படித்தவர். விமானத்தின் அவசர கதவை திறக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. கதவில் இருந்த இடைவெளியை பார்த்தததும் விமானப் பணியாளர்களை அழைத்துக் கூறினார். இதை நானும் பார்த்தேன். அவர் தவறு செய்யவில்லை என்றாலும் அவர் எம்.பி என்ற பொறுப்பில் இருப்பதால் மன்னிப்பு கோரினார்" என்று கூறியிருந்தார்.

English summary
BJP MP Tejashwi Surya was questioned by reporters about the issue of emergency door opening on IndiGo flight. Tejshwi Surya refused to answer this and said, 'I don't want to waste my time. "Official persons have already responded in this matter," he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X