சேது சமுத்திர திட்டம்.. சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி தீர்மானம்.. ஒருமனதாக நிறைவேறியது
சென்னை: சேது சமுத்திர திட்டத்தை உடனே செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டசபையில் இன்று அதிரடியாக தீர்மானத்தைத் தாக்கல் செய்து உள்ளார். இந்த தீர்மானத்தை பாஜக, அதிமுக ஆதரித்த நிலையில், ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவதுதான் சட்டமன்றத்தின் மரபு. ஆளுநர் என்ன உரையாற்ற வேண்டும் என்பதை மாநில அரசுதான் எழுதி கொடுக்கும். இதில் மாநில அரசின் திட்டங்கள், சாதனைகள் ஆகியவை இடம்பெற்றிருக்கும். இந்த உரையானது சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆளுநருக்கு கொடுக்கப்படும். அதேபோல ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் சட்டமன்றம் தொடங்குவதற்கு முன்னர் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த உரைக்கு அவர் கடந்த 7ம் தேதி கையெழுத்திட்டு ஒப்புதலும் தெரிவித்திருக்கிறார். ஆனால் 9ம் தேதி சட்டமன்றத்தில் அவர் பேசியதற்கும், அச்சிட்டு அவருக்கு வழங்கப்பட்ட உரைக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. பெண்ணுரிமை, அம்பேத்கர், பெரியார், பெருந்தலைவர் காமராஜர், திராவிட மாடல் ஆட்சி, சட்டம் ஒழுங்கு எனும் வார்த்தைகளை வாசிக்காமல் விட்டுவிட்டார். அதேபோல வேறு சில வார்த்தைகளை தன்னிச்சையாக வாசித்தார்.

ஆளுநர் உரை
இது கூட்டத்தினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த உரையின் தமிழ் மொழி பெயர்ப்பை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதில் எந்த வார்த்தையும் விடுபடவில்லை. அப்பாவு பேசி முடித்தவுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டு அன்றைய கூட்டத்தொடர் முடிவடையும். ஆனால், அப்பாவு பேசிய பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டென எழுந்து, ஆளுநர் உரையில் அச்சிடப்பட்டதை தவிர சில வார்த்தைகளை கூட்டியும், கழித்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது வருந்ததக்கது என்றும் எனவே, ஆளுநர் உரையில் அச்சிடப்பட்டதை மட்டும் அவைக்குறிப்பில் ஏற்ற வேண்டும் எனவும் தீர்மானம் கொண்டு வந்தார்.

சலசலப்பு
இவர் பேசி முடித்தபோது ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தைவிட்டு வெளியேறினார். பொதுவாக அவர் சட்டமன்றத்தைவிட்டு வெளியே போகும்போது அவரை சபாநாயகர் வாசல் வரை சென்று வழியனுப்பி வைப்பார். ஆனால் ஆளுநர் திடீரென வெளியே சென்றபோது யாரும் வழியனுப்ப போகவில்லை. இப்படியாக பரபரப்பாக சட்டமன்றத்தின் முதல் நாள் நடந்து முடிந்தது. இரண்டாவது நாள் மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மூன்றாவது நாள் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கேள்விகளுக்கு திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் விளக்கமளித்து விரிவாக பேசினார்.

நான்காவது நாள்
இதனைத் தொடர்ந்து இன்று நான்காவது நாள் அமர்வு நடைபெற உள்ளது. இந்த அமர்வில பல திட்டங்கள் முன்மொழியப்படலாம் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேது சமுத்திர திட்டத்தை உடனே செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி தனித்தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ராமர் பலம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, 'இந்த பாலம் இருந்ததற்கான உறுதியான சான்றுகள் இல்லை' என்று மத்திய அரசு கூறியிருந்தது.

ராமர் பாலம்
அதாவது, கடந்த 22ம் தேதி நாடாளுமன்றத்தில் ஹரியானா எம்பி கார்த்திகேய ஷர்மா "ராமர் பாலம் குறித்த பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வருகிறீர்கள் இந்த ஆய்வின் முடிவு என்ன சொல்கிறது?" என்று கேள்வியெழுப்பியிருந்தார். இதற்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்திருந்த பதிலில், "ராமர் பாலம் குறித்து இஸ்ரோ உதவியுடன் பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த பாலம் அமைந்திருந்ததாக சொல்லப்பட்ட இடம் துல்லியமாக புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்தபோது ராமேஸ்வரத்திலிருந்து தலை மன்னார் வரை உள்ள இந்த திட்டுக்கள் சுண்ணாம்பு கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

விளக்கம்
சுமார் 18,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான வரலாறு கொண்டது இந்த ராமர் பாலம் என்பதால் இது குறித்து ஒரு இறுதி முடிவுக்கு எங்களால் வர இயலவில்லை. இராமேஸ்வரத்திற்கும், தலை மன்னாருக்கும் இடையே 56 கி.மீ இருக்கிறது. இவ்வளவு தொலைவில் ஏற்கெனவே கட்டப்பட்டதாக நம்பப்படும் பாலத்தின் சில எச்சங்கள் மட்டுமே தற்போது மீதமிருக்கிறது. மிகச் சரியாக சொல்வதெனில் இங்குள்ள கட்டுமானம் எந்த மாதிரியான கட்டுமானம் என்பது தெரியவில்லை. எனவே இங்கு இருந்தது ராமர் பாலம்தான் என்பதை சரியாக கூறமுடியாது" என்று விளக்கமளித்திருந்தார். ஒருபுறம் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி ராமர் பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்க, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு இவ்வாறு விளக்கமளித்துள்ளது.

56 கி.மீ
இந்த ராமர் பாலம் காரணமாகவே 'சேது சமுத்திர திட்டம்' கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தியாவின் ராமேஸ்வரத்திற்கும், இலங்கையின் தலை மன்னார் பகுதிக்கும் இடையே சுமார் 56 கி.மீ தொலைவு வெறும் கடல் பரப்பு மட்டுமே இருக்கிறது. இந்த கடல் பரப்பில் ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு சுண்ணாம்பு பாறைகள் இருக்கின்றன. இந்த பாறைகள் தொடர்ச்சியாக இல்லாமல் கொஞ்ச தூரத்திற்கு தொடர்ச்சியாகவும், கொஞ்ச தூரத்திற்கு இடைவெளி விட்டும் இருக்கிறது. இந்த பாறைகளைதான் பாஜகவினர் ராமர் பாலம் என்று அடையாளப்படுத்துகின்றனர். இந்த 56 கி.மீ தொலைவில் உள்ள சுண்ணாம்பு கற்களை அகற்றி கடலை ஆழப்படுத்துவதன் மூலம் இந்த வழியில் சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்க முடியும். இதுதான் சேது சமுத்திர திட்டமாகும்.

வெற்றி பெற்றால்
இந்த திட்டம் வெற்றிகரமாக முடிந்தால் தூத்துக்குடி, சென்னை, விசாகப்பட்டினம் என வங்க கடல் ஓரத்தில் இருக்கும் துறைமுகங்கள் சிறப்பான வளர்ச்சி பெறும். தற்போது வரை அரபு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் கப்பல்கள் சென்னைக்கு வரவேண்டும் எனில் இலங்கையை சுற்றிக்கொண்டுதான் வருகிறது. ஆனால் 'சேது சமுத்திர' திட்டம் நிறைவு பெற்றால் இப்படி இலங்கையை சுற்ற வேண்டிய அவசியமில்லை. பயண நேரமும் சுமார் 30 மணி நேரம் குறையும். எரிபொருளும் மிச்சமாகும். இந்த பாதையை சர்வதேச அளவில் பயன்படுத்தும்போது இந்தியாவின் அந்நிய செலாவனியும் அதிகரிக்கும். இந்த திட்டத்தைதான் உடனடியாக செயல்படுத்தக் கோரி மத்திய அரசை தமிழ்நாடு அரசு தற்போது வலியுறுத்தியுள்ளது. இதற்கான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்துள்ளார்.
-
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications