Jananayagan Censor: ஜனநாயகன் எப்போது ரிலீஸ்? சென்சார் வழக்கில் நாளை ஹைகோர்ட்டில் தீர்ப்பு!
சென்னை: ஜனநாயகன் படத்திற்கு எதிராக தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.
தவெக தலைவர் விஜய்யின் கடைசிப் படமாக அறிவிக்கப்பட்ட 'ஜனநாயகன்' திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 அன்று வெளியிடத் திட்டமிடப்பட்டது. ஆனால், மத்திய தணிக்கை வாரியம் படத்திற்குச் சான்றிதழ் வழங்க மறுத்து, மறுஆய்வுக் குழுவுக்கு அனுப்பியதால் எதிர்பாராத சிக்கல் உருவானது. இதனையடுத்து, படத் தயாரிப்புக் குழு இந்த முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, ஜனவரி 9 அன்று, தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்தார். அத்துடன், 'ஜனநாயகன்' படத்திற்கு உடனடியாகச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, மத்திய தணிக்கை வாரியம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
மேல்முறையீட்டு வழக்கு
மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, விசாரணையை ஜனவரி 20-க்கு ஒத்திவைத்தது. இந்த இடைக்காலத் தடையை உடனடியாக நீக்கக் கோரி, படத் தயாரிப்புக் குழு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. எனினும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கை உயர் நீதிமன்றத்திலேயே அணுகுமாறு அறிவுறுத்தி, மனுவை முடித்து வைத்தனர்.
தணிக்கை வாரியம்
அதன்படி, தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் ஜனவரி 20 அன்று விசாரணைக்கு வந்தது. தணிக்கை வாரியத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், "படத்தை மறுஆய்வுக்கு அனுப்பும் முடிவு ஜனவரி 5-ஆம் தேதியே 'இ-சினி பிரம்மாண்' இணையதளம் வாயிலாக தயாரிப்புக் குழுவுக்குத் தெரிவிக்கப்பட்டது" என்றார்.
தயாரிப்புக் குழு
மேலும் அவர், "தயாரிப்புக் குழு சான்றிதழ் கேட்டு ஜனவரி 6-ல் வழக்குத் தொடங்கி, ஜனவரி 9-ல் சாதகமான உத்தரவைப் பெற்றது. கேட்காத பரிகாரத்தைத் தனி நீதிபதி வழங்கியது சட்டத்துக்குப் புறம்பானது" என நீதிமன்றத்தில் வாதிட்டார். படத் தயாரிப்புக் குழு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சதீஷ் பராசரன் மற்றும் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
தனி நீதிபதி தீர்ப்பு
"தனி நீதிபதி தீர்ப்பை வழங்கிய மறுநிமிடமே தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இதன் நடவடிக்கையால் தயாரிப்பு நிறுவனத்திற்குக் கடும் நஷ்டம் ஏற்பட்டது. அத்துடன், தணிக்கை வாரியம் வெளிப்படையாகச் செயல்படவில்லை" என்று தயாரிப்புக் குழுவின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சில முக்கியக் கருத்துக்களை முன்வைத்தனர்.
நீதிமன்ற நடைமுறைகள்
நீதிபதிகள், "நீதிமன்ற நடைமுறைகளை முடித்து ஒரே நாளில் தீர்வு கோருவதை ஏற்க முடியாது. சான்றிதழ் பெறும் முன் வெளியீட்டுத் தேதியை முடிவு செய்யக் கூடாது. இயற்கை நீதியைப் பின்பற்றியே எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியும்" என்று அழுத்தமாகக் கூறி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
குடியரசுத் தினத்தன்று
இந்த நிலையில், 'ஜனநாயகன்' படத்தின் தீர்ப்பு ஜனவரி 23-ல் வெளியாகும் என்றும், படம் குடியரசுத் தினத்தையொட்டி வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் முன்னர் தகவல்கள் வெளியாயின.
நாளை தீர்ப்பு
ஆனால் ஜனவரி 27-ஆம் தேதி அதாவது நாளை ஜனநாயகன் சென்சார் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தின் வெளியீடு எப்போது அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
அதிமுகவுக்கு ஆப்படித்த 4 பேர்.. தவெக காலத்தில் சான்ஸ் தரக் கூடாது! திடீரென குரல் கொடுத்த சரத்குமார்! -
TASMAC: பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் ஏன்? யார் யாருக்கு லஞ்சம் போகிறது தெரியுமா? முழு லிஸ்டடால் ஷாக் -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
விஜய்யை திட்டமிட்டு புறக்கணித்த அமித்ஷா? கேரள முதல்வரை மீட் பண்ணிருக்காரே.. டெல்லியில் நடந்தது என்ன? -
தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி.. யுபிஎஸ்சி பரிந்துரைக்கு ராமதாஸ் வரவேற்பு.. விஜய்க்கு வைத்த கோரிக்கை -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
உண்மையிலேயே நீங்கள் தமிழகத்தின் முதல்வரா அல்லது எதிரியா ஜோசப் விஜய் அவர்களே.. நயினார் கேள்வி -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? விஜய் டிக் அடிக்கும் அந்த நேர்மையான அதிகாரி! வெளியான தகவல் -
சமூக வலைதளங்களை தவெகவினர் தந்திரமாக பயன்படுத்தினார்கள்.. கே.என்.நேரு பேச்சு












Click it and Unblock the Notifications