"As I have attended the Valaikappu function".. நிதியமைச்சர் பி.டி.ஆரை கலாய்த்த ஜெயக்குமார்!
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டணி கட்சிகள் பற்றி மட்டுமே கவலைப்படுகிறாரே தவிர கூட்டு-பொரியல் பற்றி கவலைப்படுவதில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 46-ஆவது நினைவு நாளை முன்னிட்டு சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மரியாதை செலுத்தினார். அங்கு இருந்த காமராஜர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயகுமார், ஊரக பகுதிகளில் தொழில் சாலைகள் அமைத்து தொழில் வளர்ந்தால் தமிழ்நாடு வளரும் என்று பல விஷயங்களை காமராஜர் முன்னெடுத்தார்.

அணைகள்
தொழிற்சாலைகள் கட்டுவது, அணைகள் கட்டுவது, கல்விக்கூடங்கள் கட்டுவது என அடிப்படையான விஷயங்கள் அவரின் சிந்தனையில் உதித்து தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார். திமுக கூட்டணியில் உள்ள தோழமை கட்சியின் கொடியை சில இடங்களில் ஏற்ற முடியவில்லை என்று சொல்கின்றனர்.

முதல்வர் ஸ்டாலின்
திருமாவளவன் போலீஸாரை குறை சொல்கிறார். ஆனால் முதல்வர் ஸ்டாலினை பற்றி பேசுவதில்லை. நண்பர் திருமாவளவனின் வீரம் எங்கே சென்றது. மதிய உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு பொரியல் கொடுக்க வேண்டும் என்று உள்ளது. ஆய்வின் போது ஏன் பொரியல் கொடுக்கவில்லை என்று அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் கேட்கவில்லை.

கொள்கை விளக்க குறிப்பு
தமிழ்நாடு அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் கூட மதிய உணவில் மாணவர்களுக்கு பொரியல் கொடுக்க வேண்டும் என உள்ளது. ஜி.எஸ்.டி கூட்டத்தில் பங்கேற்க தனி விமானம் வேண்டும். வளைகாப்பு நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கோரிக்கை விடுத்ததாக எனக்கு தகவல் வந்தது.

பள்ளி மாணவர்கள்
அதில் பங்கேற்காமல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். சென்னைக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க நேரம் கேட்டு அவரை சந்தித்துள்ளார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். அப்போது பள்ளி பருவத்தில் மாணவர்கள் விடுப்புக்கு கடிதம் கொடுப்பது போல், " Dear Madam, As i have attended the Valaikappu function, So I am not able to attend the GST meeting. Hence i request you to me pardon me madam"என்று அந்த கடிதத்தில் இருந்ததாக எனக்கு தகவல் வந்தது என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications