புதிய “டுவிஸ்ட்”.. கடைசி நாட்கள்! போட்டோ எடுக்க அனுமதித்த ஜெயலலிதா.. தடுத்த ஐஏஎஸ் அதிகாரி - ஏன்?
சென்னை: ஜெயலலிதா மரணத்தின் பின்னணியில் இருக்கும் மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் நடந்த அரசு நிகழ்வில் புகைப்படம் எடுக்க அனுமதித்தும் மருத்துவர் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரி அதை தடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், சசிகலா வெளியேற்றப்பட்டு, 2012 ஆம் ஆண்டில் மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்ததிலிருந்து அவர்கள் இருவருக்கும் இடையே சுமுக உறவு இல்லை என்றும், சசிகலாவைக் குற்றம்சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 11.30 என மருத்துவமனை அறிவித்த நிலையில், அவர் இறந்த நேரம் 2016 டிசம்பர் 4 ஆம் தேதி மதியம் 3 மணி முதல் 3.50-க்குள் இருக்கும் என்று கூறியுள்ள ஆறுமுகசாமி ஆணையம் பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது.

கடைசி நாட்கள்
ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில், ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றி விவரிக்கப்பட்டு உள்ளது. அதில், "அப்போதைய தலைமைச் செயலாளர், 23.09.2016 முதல் 27.09.2016 வரை, மறைந்த முதல்வரை நான்கைந்து முறை பார்த்து, அரசு காரியங்கள் தொடர்பாக அவருடன் பேசியதாகவும் தெரிவித்தார். 27.09.2016-க்குப் பிறகு மறைந்த முதல்வருடன் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை.

அமைச்சர்களுடன் சந்திப்பு
ஆனால் அதன்பிறகு தலைமை செயலாளர் மறைந்த முதல்வர் CCU-வில் இருந்தபோது அவ்வப்போது கதவைத் திறந்து மரியாதை செலுத்தும் பொழுது மறைந்த முதல்வர் சைகைகள் மீது பதிலளிப்பார். 24.09.2016-க்கும் 27.09.2016-க்கும் இடைப்பட்ட காலத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தானாகவே, அங்கிருந்த அமைச்சர்களை அழைத்துப் பார்த்ததாக முன்னாள் தலைமை செயலாளர் கூறினார்.

புகைப்படம்
காவிரிப் பிரச்சினை தொடர்பான சந்திப்புக்குப் பிறகு, அது அரசியல் சார்புடையது என்பதால் மறைந்த முதல்வருடன் புகைப்படம் எடுக்க அதிகாரிகள் விருப்பம் தெரிவித்ததற்கு அவரும் ஒப்புக்கொண்டார். புகைப்படக்காரர் வருவதற்காக அவர்கள் வெளியே காத்திருந்தபோது, டாக்டர் K.S.சிவகுமார் மருத்துவமனையில் புகைப்படம் எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி இராமலிங்கம் தலைமை செயலாளரிடம் கூறியுள்ளார்.

அம்மா
பிறகு தலைமை செயலாளர் அமைதியாக இருந்தார். C.K.17, "அம்மா கூறியபடி புகைப்படம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார். ஆனால் எந்த "அம்மா" அந்த அறிவுறுத்தலைக் அளித்தது என்பது அவருக்குத் தெரியவில்லை என்றும் கூறினார். பொதுவாக செல்வி ஜெ.ஜெயலலிதாவை "அம்மா" என்றும், RI சசிகலாவை "சின்னம்மா" என்றும் தான் அழைப்பார்கள்." என்று விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications