சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? கேஎஸ் அழகிரி சூசகம்.. அப்போ ஜோதிமணியா?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் ஒரு பெண்ணாக இருக்கலாம் என தற்போதைய தலைவர் கே எஸ் அழகிரி சூசகமாக தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காங்கிரஸ் கட்சி பாரம்பரிய கட்சி, தேசிய கட்சி என சொல்லப்பட்டாலும் கோஷ்டி பூசல், உள்ளடி வேலைகள் உள்ளிட்டவற்றால் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டணி அமைத்து கணிசமான இடங்களில் வென்றுள்ளது.

கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் காங்கிரஸ் சோபிக்கவில்லை. அது போல் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார்.

தம்பி யுவன்! தமிழில் நமாஸ் செய்ய முடியுமா?.. படம் காட்டுவதில் பயனில்லை.. பாஜக எஸ். ஆர். சேகர் தம்பி யுவன்! தமிழில் நமாஸ் செய்ய முடியுமா?.. படம் காட்டுவதில் பயனில்லை.. பாஜக எஸ். ஆர். சேகர்

காங்கிரஸ்

காங்கிரஸ்

எனினும் அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் கூட தமிழகத்தில் வெல்லவில்லை. 2014 ஆம் ஆண்டு முதலே காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அது போல் அந்த கட்சியின் தலைவராக சோனியா காந்திக்கு பதிலாக வேறு துடிப்புமிக்க ஒருவரை நியமிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் விரும்புகிறார்கள்.

தமிழகம்

தமிழகம்

தமிழகத்தை பொருத்தவரை திமுகவுடன் கூட்டணி வைத்ததால் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வென்றுள்ளது. உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி அமைத்தே காங்கிரஸ் வென்றது. ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு கணிசமான தொகுதிகளில் வென்றதால் காங்கிரஸை கிண்டல் செய்து வருகிறது.

காங்கிரஸ் கட்சி

காங்கிரஸ் கட்சி

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது தேவை தனித்துவம். கூட்டணி கட்சியாக இருந்தாலும் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என பேசும் தைரியம்.. அந்த அம்சங்களை கொண்ட தலைமை வேண்டும். தற்போது இருக்கும் கேஎஸ் அழகிரி திமுகவுடன் போராடி வருகிறார். அவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய போகிறது. மேலும் அவர் ராஜ்யசபா எம்பி பதவியை பெற முயற்சித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

அடுத்த தலைவர்

அடுத்த தலைவர்

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த தலைவராக யாரை நியமிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து கே எஸ் அழகிரியிடம் கேட்ட போது அவர் ஒரு பெண்ணாக இருக்கலாம் என சூசகமான பதிலை சொல்லியுள்ளார். அப்படியென்றால் தமிழக காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக ஜோதிமணி எம்பி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

ஜோதிமணி எம்பியை பொருத்தமட்டில் ராகுல் காந்தியின் குட் வில் புக்கில் இருக்கிறார். பதவிக்காக தனது கட்சியின் கொள்கைகளை விட்டுக் கொடுக்காதவர். அரசியல் நாகரீகம் தெரிந்தவர். கூட்டணி கட்சியே இருந்தாலும் தவறு என்றால் துணிச்சலாக எதிர்ப்பவர். இது அவர் உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீட்டில் செந்தில் பாலாஜியுடன் ஏற்பட்ட மோதலிலேயே தெரிகிறது.

ஜோதிமணி

ஜோதிமணி

அது போல் ஜோதிமணி எந்த கோஷ்டியிலும் சேராதவர். உணர்ச்சிபூர்வமான விஷயங்கள் என்றாலும் அதை திறமையாக கையாள்பவர். அண்மையில் ஒரு பெரிய நேர்காணலில் எங்கள் ஊரில் ராமர் கோயிலே கிடையாது என ஜோதிமணி சொன்னதாக பாஜக ஒரு சிறிய வீடியோ கிளிப்பிங்கை வைரலாக்கியது. ஆனால் உண்மையில் நடந்தது என்ன அவர் எந்த சூழலில் அதை பேசினார் என்பதையும் அந்த நேர்காணலின் தமிழாக்கத்தையும் ஜோதிமணி வெளிப்படுத்தினார்.

 ராகுல் காந்தி சாய்ஸ்

ராகுல் காந்தி சாய்ஸ்

எனவே ராகுல் காந்தி தைரியம், தனித்துவம் ஆகியவற்றைத்தான் விரும்புவார். அந்த குணங்களை கொண்ட ஜோதிமணியே அடுத்த தமிழக காங்கிரஸ் தலைவராக ராகுலால் டிக் செய்யப்படுவார் என சத்யமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர் தலைமையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

English summary
Karur MP Jothimani will be the next Tamilnadu congress Committee's President?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X