வெறும் ரூ.5000.. அதைவிடுங்க.. சென்னை ஈசிஆர் ரோட்டில் அதென்ன பறக்குது.. அசத்தும் தமிழக அரசு.. சூப்பர்
சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில், நேற்றுமுதல் ஹெலிகாப்டர்கள் பறந்து கொண்டேயிருக்கின்றன.. ஏன் தெரியுமா? தமிழக அரசின் இந்த அதிரடியை பார்த்து பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்.
வெளிநாடு, வெளிமாநில மக்களை ஈர்க்கும் அளவுக்கு தமிழ்நாடு, வளம் வாய்ந்தது.. மனதை மயக்கும் நிலப்பரப்புகள், கலாச்சார பாரம்பரியம், கடற்கரைகள், நீர்வீழ்ச்சிகள், பாரம்பரியம் பேசும், கலை வடிவங்கள், ஆச்சரியப்படுத்தும் கைவினைப் பொருட்கள் என எத்தனையோ அம்சங்கள் நம்முடைய தமிழகத்தில் உள்ளதால்தான், உலகமெங்குமுள்ள பயணிகள், இங்கு வந்து செல்கிறார்கள்.

சுற்றுலா துறை: அதனால்தான், தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியிலும், சுற்றுலாத்துறை முக்கிய பங்கு வகித்து வருகிறது.. போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றுடன் சுற்றுலாவின் தேவைகளும் கணிசமாக அதிகரித்துள்ளன.
அதற்கேற்றவாறு, தமிழக முதல்வரும், சுற்றுலாத்துறையில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை தொடர்ந்து நிலைநிறுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறார். மற்றொருபக்கம், சுற்றுலாவில் வெற்றியாளர்கள், பயண ஏற்பாட்டாளர்கள் மற்றும் புதிய உத்திகளை கையாள்பவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறை கடந்த 2022 ம் ஆண்டு முதல் சுற்றுலா விருதுகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தி வழங்கி வருகிறது.
குட்நியூஸ்: இப்படி ஒவ்வொரு துறையிலும் தமிழக சுற்றுலா துறையின் அதிரடிகள் மக்களை ஈர்த்து வரும்நிலையில், தற்போது இன்னொரு குட்நியூஸ் வெளியாகி உள்ளது.. வெறும் 5 ஆயிரம் ரூபாயில் ஹெலிகாப்டரில் தமிழகத்தை சுற்றிப்பார்க்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அந்தவகையில், தமிழக சுற்றுலாத்துறையுடன் இணைந்து தனியார் நிறுவனம் இந்த ஏற்பாட்டை செய்துள்ளது. முட்டுக்காடு படகு துறை, கேளம்பாக்கம், திருவிடந்தை போன்ற பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் சுற்றி பார்த்துவிட்டு வரும் வசதிதான் நேற்று தீபாவளி முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர்: இதில் பயணம் செய்ய, ஒரு பயணிக்கு 5000 ரூபாய் கட்டணம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தில், 10 நிமிடத்துக்கு ஹெலிகாப்டரிலேயே பயணம் செய்யலாம் என்று சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பானது பொதுமக்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.. சுற்றுலா பயணிகளும், ஆர்வத்துடன் முன்பதிவு செய்ய துவங்கிவிட்டார்கள் ..

சூப்பர் வரவேற்பு: நேற்று முதல் நாளில் மட்டும் 20 முறை ஹெலிகாப்டர் இயக்கப்பட்டதாம்.. ஆன்லைன் மூலமும் டிக்கெட் ரிசர்வேஷன் நடந்துள்ளது.. அந்தவகையில், முன்பதிவு செய்தவர்கள், ஹெலிகாப்டர் மூலம் பறந்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரம்மியமான காட்சிகளை பார்த்து குதூகலம் அடைந்தனர்..
இன்றும் அதிக சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டரில் சுற்றி பார்க்க போகிறார்களாம். கிழக்கு கடற்கரையின் ரம்மியமான காட்சிகளை காண தொடர்ந்து பயணிகள் குவிவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
நத்தம் புறம்போக்கு நில விவகாரத்தில் தமிழக அரசின் திடீர் திருப்பம்? பட்டா "இடி"க்கு விடிவு வருமா? -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications