மெசேஜ் வந்துடுச்சான்னு பாருங்க.. ஒருநாள் முன்பே கிரெடிட் ஆன மகளிர் உரிமைத்தொகை.. அடடே செம!
சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வங்கியில் ஆயிரம் ரூபாய் பணம் வரவு வைக்கும் பணி தொடங்கியுள்ளது. இன்று இரவுக்குள் அனைவரது கணக்கிலும் பணம் வரவு வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திமுக கடந்த 2021 ஆம் ஆண்டு சடட்டப்பேரவை தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டமான மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கியது. பேரறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்து, அதன் அடையாளமாக பயனாளிகளுக்கு அவர் ஏடிஎம் கார்டையும் வழங்கினார்.
முதல்வர் ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்ததும், செப்டம்பர் மாதத்துக்கான உரிமைத் தொகை தகுதியான அனைத்து குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கிற்கு சென்றுள்ளது. அதாவது பயனாளிகளாகத் தேர்வு செய்யப்பட்ட 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1,000 பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஒருசிலருக்கு வங்கி கணக்கு சிக்கல் காரணமாக முதல் நாளில் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படாத நிலையில் மணி ஆர்டர் மூலமும் பணம் வழங்கப்பட்டது.
இனி மாதம்தோறும் 15ஆம் தேதி உரிமைத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகையின் இரண்டாவது மாத உரிமைத்தொகை, அதாவது அக்டோபர் மாதத்திற்கான உரிமைத்தொகை இந்த மாதம் 14 ஆம் தேதியே குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு அண்மையில் தெரிவித்து இருந்தது.
15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒருநாள் முன்னதாகவே மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, இன்று வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் பணி துவங்கியுள்ளது. இன்று இரவுக்குள் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து மகளிரின் வங்கி கணக்கிலும் பணம் வரவு வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பணம் வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி பார்த்ததும் மகளிர் பலரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!












Click it and Unblock the Notifications