8% ஓட்டு வாங்கிய விஜயகாந்த் எம்எல்ஏ .. 2% வாங்கிய கமல்ஹாசன் எம்.பி.! மூளைக்காரர்தான் போங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது அரசியல் கட்சியை 2018 பிப்ரவரி 21ஆம் தேதி மதுரையில் தொடங்கினார். கட்சித் தொடங்கி 7 வருடங்களில் எம்.பி.யாகி அசத்தியுள்ளார் அவர்.

கமல்ஹாசன் தனது கட்சியை 2018இல் தொடங்கிய பிறகு, 2019 லோக்சபா தேர்தலில் 37 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2021 சட்டமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசனிடம் சிறிய வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதேநேரம், அவரது கட்சி பிற தொகுதிகளில் கடும் தோல்வியை சந்தித்தது.

Kamal Haasan Rajya Sabha Vijayakanth

தமிழகத்தைச் சேர்ந்த பல ஜாம்பவான் நடிகர், நடிகைகள் கட்சித் தொடங்கியுள்ளனர். சிலர் சறுக்கினர், சிலர் சாதித்தனர்.

சிவாஜி கணேசன் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1988-1989 ஆம் ஆண்டு தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியைத் தொடங்கினார். இக்கட்சியின் சின்னம் ஏணி ஆகும். இந்த கட்சி ஒரே ஆண்டில் ஜனதா தளம் கட்சியுடன் இணைக்கப்பட்டது. சிவாஜி கணேசன் இந்திய தேசிய காங்கிரஸின் தமிழ்நாடு பிரிவில் ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு தனது கட்சியைத் தொடங்கினார்.

Kamal Haasan Rajya Sabha Vijayakanth

எம்.ஜி. ராமச்சந்திரன் - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை 1972இல் தொடங்கிய பிறகு, 1977 சட்டமன்றத் தேர்தலில் 130 தொகுதிகளில் வெற்றி பெற்று முதலமைச்சரானார்.

Kamal Haasan Rajya Sabha Vijayakanth

ஜெயலலிதா - அ.இ.அ.தி.மு.க தலைவராக இருந்து பல முறை முதலமைச்சராகவும், முன்னதாக, நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.

Kamal Haasan Rajya Sabha Vijayakanth

விஜயகாந்த்- கட்சி தொடங்கிய ஓராண்டு கழித்து 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக எம்.எல்.ஏ ஆனார். இந்த தேர்தலில் தேமுதிக 232 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது, ஆனால் விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றார். 2006 தேர்தலில் தேமுதிக 8.38 சதவீத வாக்குகளைப் பெற்றது. மொத்தமாக 27 லட்சத்து 64 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன. இது தமிழக அரசியலில் மூன்றாவது சக்தியாக விஜயகாந்த் உருவெடுப்பதைக் காட்டியது.

Kamal Haasan Rajya Sabha Vijayakanth

மக்கள் நீதி மய்யம்- அதேநேரம், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தனது முதலாவது சட்டசபை தேர்தலை 2021ல் எதிர்கொண்டு, மொத்தமாக 12,10,667 வாக்குகளைப் பெற்றது, இது மொத்த வாக்குகளில் 2.62 சதவீதமாகும். கட்சி 183 தொகுதிகளில் போட்டியிட்டது ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. விஜயகாந்த் அளவுக்கு கமலுக்கு செல்வாக்கு இல்லை என்பதை இது நிரூபித்தது. ஆனால், தனது இந்த வாக்கு சதவீதத்தை காட்டியே திமுகவிடம் சீட் பெற்று ஈஸியாக எம்.பி.யாகிவிட்டார் கமல் என்றால் அவர் விஜயகாந்த்தைவிட அரசியலில் பிழைக்கத் தெரிந்த புத்திசாலிதானே. மூளைக்காரர்தானே.

Kamal Haasan Rajya Sabha Vijayakanth

தற்போதைய நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ், விசிக, பாமக போன்ற கட்சிகளின் எம்.பி.க்கள் உள்ளனர்.கமல்ஹாசனின் ராஜ்யசபா நியமனம் தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது, அவர் தனது கட்சியை தொடங்கி 7 ஆண்டுகள் கழித்து மத்திய அரசியலில் நுழைகிறார். அவர் நாடாளுமன்றத்தில் என்ன பேசுவார், எப்படி பேசுவார், புரியும்படியாக பேசுவாரா, அல்லது தனது தனித்த பாணியில் பேசுவாரா என்பதெல்லாம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+