மைதானத்தில் சண்டையிட தயாராகிவிட்டு.. சண்டையிட மாட்டேன் என சொல்வது சரியல்ல!- ரஜினிக்கு கமல் அட்வைஸ்!
சென்னை: மைதானத்தில் சண்டையிட தயாராகிவிட்டு பிறகு சண்டையிட மாட்டேன் என சொல்வது சரியல்ல என ரஜினிக்கு கமல் அறிவுரை வழங்கியுள்ளார்.
சென்னை ஆர் ஏ புரத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசனின் பேச்சுதான் இன்றைய ஹாட்டாப்பிக். இது வரை எத்தனையோ கூட்டங்கள், நிகழ்ச்சிகள், விழாக்களில் அவர் பேசியிருந்தாலும் இதுபோல் யாரையும் விமர்சனம் செய்து பேசியதில்லை.

அந்த அளவுக்கு ஸ்டாலின், ரஜினிகாந்த்தை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். அவர் கூறுகையில் திமுகவை விமர்சனம் செய்து பேசுவதற்கு அவர்கள்தான் காரணம். திமுகவை நேரடியாக விமர்சிக்கிறேன்.
கூட்டணியில் இடம்பெற முடியாததால் திமுகவை விமர்சிக்கவில்லை. அரசியல் கட்சி தொடங்கிவிட்டு தேர்தலில் போட்டியிட மாட்டேன் என சொல்வது நல்லதல்ல. மைதானத்தில் சண்டையிட தயாராகிவிட்டு சண்டையிட மாட்டேன் என சொல்வது சரியல்ல என கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.
ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை தொடங்கிய ரஜினிகாந்த், வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்க போவதில்லை என்றும் ரஜினி, மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications