Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் தோற்றுப்போன அரசியல்வாதியா? 20 ஆண்டுகளுக்கு முன் வந்திருந்தால்.. கமல்ஹாசன் 'நச்' பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் தோல்வி அடைந்த அரசியல்வாதி என பலரும் விமர்சிக்கின்றனர். ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வரத் தவறியதைத்தான் என்னுடைய தோல்வியாக நான் பார்க்கிறேன்.. அப்படி வந்திருந்தால், நான் பேசும் பேச்சும், இருக்கும் இடமும் வேறாக இருந்திருக்கும் என்று மக்கள் நீதி மய்யத்தின் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் இந்தாண்டு ராஜ்யசபா எம்பியாக தேர்வாகுவார் என்று கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலின் போது திமுகஉடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ராஜ்யசபா சீட் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு திமுக வழங்கும் என தெரிகிறது. அதேபோல் வரும் 2026ம்ஆண்டு சட்டசபை தேர்தலிலும் திமுக கணிசமான இடங்களை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kamal Haasan Makkal Needhi Maiam politics

2021ம் ஆண்டு தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், அந்த கட்சியில் இருந்து பலரும் விலகி மாற்றுக்கட்சியில் இணைந்தனர். அதன்பின்னர் சோர்ந்து இருந்த கமல்ஹாசன், 2024 லோக்சபா தேர்தலில் திமுக உடன் கூட்டணி அமைத்தார். அதன்பின்னர் திமுகவுக்கு ஆதரவாக அரசியலை முன்னெடுத்து வருகிறார்.அந்த வகையில் திமுக கூட்டணிகள் இந்தி எதிர்ப்புக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், கமல்ஹாசனும் இந்திக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்று வரும் மக்கள் நீதி மய்யத்தின் 8 ஆம் ஆண்டு விழாவில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார். அப்போது அவர் கூறும் போது, "நான் ஏதாவது பேசினால், தோற்றுப்போன அரசியல்வாதி என விமர்சிக்கின்றனர். ஆனால் நான் 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். அப்படி வரத்தவறியதைத்தான் என்னுடைய தோல்வியாக நான் பார்க்கிறேன். அப்படி வந்திருந்தால், நான் பேசும் பேச்சும், இருக்கும் இடமும் வேறாக இருந்திருக்கும். ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் எனபது வேறு என்பதை என்பதை என் அனுபவத்தில் இப்போது நான் புரிந்து கொண்டேன்.

நாம் எல்லோரையும் தமிழ் மொழி தான். தன்னம்பிக்கையுடன் நாம் உயிர்த்திருக்க தமிழக மக்களே காரணம். மொழிக்காக உயிரை விட்டவர்கள் தமிழர்கள். எந்த மொழி வேண்டும், எந்த மொழி வேண்டாம் என்பது தமிழர்களுக்கு தெரியும். நிதி தராத மத்திய அரசு என்பதை, நாளைய வரலாறு சொல்லும். எனக்கு, எந்தளவு காந்தியை பிடிக்குமோ, அந்தளவு பெரியாரையும் பிடிக்கும்.

இந்த ஆண்டு, நாடாளுமன்றத்தில் நமது குரல் ஒலிக்கும். அடுத்த ஆண்டு சட்டசபையில் ஒலிக்கும். அதற்கு கட்டியம் கூறுவது தான் மக்கள் நீதி மய்யம் கட்சியின் இந்த விழா. ஒவ்வொரு ஆண்டும் நாம் கொண்டாடிக் கொண்டே இருக்கலாம். ஆனால் இவையெல்லாம் முக்கியமான தருணங்கள் ஆகும். இவை தான் நாம் ஏறி வந்த படிக்கட்டுகள் ஆகும். மக்கள் நீதி மய்யத்தில் மாணவர்கள் பலரும் இணைந்து கொண்டிருக்கிறார்கள். அதன் பொருள் என்ன தெரியுமா? மாணவர்கள் நம்முடன் இணைந்து விட்டால் நான் சொன்ன 'நாளை நமதே' என்பதன் அர்த்தம் புரியும் " இவ்வாறு கமல்ஹாசன் விழாவில் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+