சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேசியது தப்பில்லை! சிலைக்கு கீழ் எழுதியிருப்பதுதான் தப்பு! கணீர் கனல் கண்ணன்! போலீஸ் மீதும் அட்டாக்!

Google Oneindia Tamil News

சென்னை : ஸ்ரீரங்கம் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என பேசியதாக கனல் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அவர் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவில் தான் பேசியது சட்டத்திற்கு புறம்பானது இல்லை எனவும் சிலைக்கு கீழே எழுதப்பட்டிருக்கும் வரிகள் தான் சட்டத்திற்கு புறம்பானவை எனக் கூறி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்து முன்னணி நடத்திய நிகழ்ச்சியில் பேசிய சினிமா ஸ்டண்ட் இயக்குனரும், இந்து முன்னணி பிரமுகருமான கனல் கண்ணன்,"ஸ்ரீரங்கத்தில் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்" என கூறியிருந்தார்.

கனல் கண்ணனின் இந்த பேச்சினுடைய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனல் கண்ணன் மீது புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீரங்கம் பெரியார் சிலை கூட பெருமாளை மனதுக்குள் வழிபடுவதாகவே நினைக்கிறேன்.. சொன்னது டிடிவி தினகரன்ஸ்ரீரங்கம் பெரியார் சிலை கூட பெருமாளை மனதுக்குள் வழிபடுவதாகவே நினைக்கிறேன்.. சொன்னது டிடிவி தினகரன்

கனல் கண்ணன்

கனல் கண்ணன்

இது தொடர்பாக திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில், கனல் கண்ணன் மீது கலகம் செய்யத் தூண்டுதல், அவதூறு செய்தி மூலம் பொதுமக்களிடையே விரோதத்தைத் தூண்டுவது ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கனல் கண்ணன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கொச்சைப்படுத்தும் வாசகங்கள்

கொச்சைப்படுத்தும் வாசகங்கள்

கனல் கண்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில்," தினமும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் தரிசிக்க வரும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வாசலில், கடவுளை கொச்சைப்படுத்தும் வகையிலான வாசகங்களுடன் வைக்கப்பட்டிருக்கும் சிலையும், அந்த வாசகங்களும் பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாலேயே அதை இடிக்க வேண்டுமெனப் பேசினேன்.

 புறம்பானது ஏதும் இல்லை

புறம்பானது ஏதும் இல்லை

தான் பேசியது இந்த நாட்டின் சட்டத்திற்குப் புறம்பானது ஏதும் இல்லை, சிலையிலிருந்த வாசகங்கள் தான் இந்தியத் தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டியது. கோவிலின் முன் அந்த சிலையை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, துரதிருஷ்டவசமாக தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

Recommended Video

    Kanal Kannan பேசியது தவறென்றால் இதுவும் தவறுதான் | Annamalai Pressmeet *Politics
    நடவடிக்கை இல்லை

    நடவடிக்கை இல்லை

    சமீப காலமாக இந்து மத கடவுள்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு எதிராகப் பல வீடியோ பதிவுகள் பதிவிடப்படுகிறது. அவை தொடர்பாகத் தனி நபர்களும், அமைப்புகளும் புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால் என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கில் என்னை கைது செய்ய வாய்ப்பிருப்பதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும்" என அந்த மனுவில் கனல் கண்ணன் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

    English summary
    While a case has been registered against Kanal Kannan for talking about breaking the statue of Srirangam Periyar, it has been reported that in the anticipatory bail petition filed by him, his words are not illegal and the lines written below the statue are illegal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X