சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்முறையாக கருணாநிதி இல்லாத நேர்காணல்.. முதல்முறையாக பங்கேற்ற கனிமொழி.. இன்னும் சுவாரஸ்யங்கள் இதோ

Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி முதல்முறையாக நேர்காணலில் பங்கேற்றுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது. தேர்தல் நடைபெற இன்னும் குறுகிய காலமே உள்ளதால் கட்சியினர் அனல்பறக்கும் பிரசாரங்களை நடத்தி வருகின்றனர்.

கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிந்து சில கட்சிகள் பிரசாரங்களையும் தொகுதி பங்கீடுகளையும் தொடங்கிவிட்டன.

20 தொகுதிகள்

20 தொகுதிகள்

மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு செய்தது போக மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளர் நேர்காணல் நேற்று முதல் அண்ணா அறிவாலயத்தில் நடந்து வருகிறது.

தூத்துக்குடிக்கு என்ன செய்வீங்க.. சொல்லுங்க.. கனிமொழியிடம் இன்டர்வியூ நடத்திய ஸ்டாலின்! தூத்துக்குடிக்கு என்ன செய்வீங்க.. சொல்லுங்க.. கனிமொழியிடம் இன்டர்வியூ நடத்திய ஸ்டாலின்!

முதல்முறை

முதல்முறை

இதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடவுள்ளதாக கூறும் கனிமொழி இந்த நிலையில் முதல் முறையாக இந்த நேர்காணலில் பங்கேற்றுள்ளார்.

இதுதான் முதல் முறை

இதுதான் முதல் முறை

முதல்முறையாக நேர்காணலில் பங்கேற்றுள்ள கனிமொழி, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதும் இதுவே முதல் முறை. இதுவரை மாநிலங்களவை உறுப்பினராகவே அவர் இருந்து வந்தார்.

கருணாநிதி இல்லை

கருணாநிதி இல்லை

இந்த நேர்காணலின் இன்னொரு வருத்தம் என்னவென்றால் சட்டசபை தேர்தல் ஆகட்டும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகட்டும், உள்ளாட்சி தேர்தல் ஆகட்டும். இதற்கெல்லாம் வேட்பாளர் நேர்காணல் என்றாலே அதை கருணாநிதிதான் நடத்தி வைப்பார்.

கனிமொழி

கனிமொழி

ஆனால் இந்த முறையோ கருணாநிதி இல்லை. அவருக்கு பதிலாக திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் நேர்காணல் செய்து வருகிறார். தந்தைக்கு பதிலாக அண்ணன் முன்பு நேர்காணலை கனிமொழி சந்தித்து வருகிறார்.

English summary
DMK Rajyasabha MP Kanimozhi first time participates in Loksabha Candidate Interview.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X