Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் தொகுதி பங்கீடு உள்ளிட்டவை கிட்டத்தட்ட நிறைவு அடைந்து விட்டது. திமுக அதிமுக வேட்பாளர்களை அறிவிக்க இருக்கும் நிலையில், திமுகவின் ஒரு கோரிக்கை குரல் அடிக்கடி ஒலித்து வருகிறது. அது மாநில அரசியலுக்கு கனிமொழி திரும்ப வேண்டும் என்பதுதான். இந்த நிலையில் நெல்லையில் கனிமொழி போட்டியிடலாம் என ஒரு தகவல் உலாவுகிறது.

தமிழகத்தில் வாரிசுகள் அரசியலுக்கு வருவதும், அரசாள்வதும் புதிதல்ல. அப்படி கலைஞரின் வாரிசாக தமிழக அரசியலில் களம் புகுந்தவர் தான் கனிமொழி. தனது தந்தை அண்ணன்கள் என அனைவரும் அரசியலில் கோலோச்சிய நிலையில் இலக்கிய உலகில் இருந்து அரசியல் உலகுக்கு வந்தவர்தான் கனிமொழி.

கருணாநிதி ராசாத்தி அம்மாவின் மகளான கனிமொழி திமுகவின் மகளிர் அணியில் இணைந்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். தற்போது திமுக துணை பொது செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் அவர் 2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றனர்.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 DMK

2026 சட்டமன்ற தேர்தல்

அந்த வகையில் திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்ட போது 65க்கும் மேற்பட்ட தொகுதிகளில் கனிமொழி போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தனர். குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய தொகுதிகளில் கனிமொழி போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தனர். ஆனால் வேட்பாளர்களுக்கான நேர்காணலில் கனிமொழி கலந்து கொள்ளவில்லை.

கனிமொழி

அதே நேரத்தில் நேர்காணலில் கலந்து கொள்ளாவிட்டாலும் கனிமொழி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர். எம்பியாக இருந்து டெல்லி அரசியலை கவனித்து வரும் அவர் மாநில அரசியலுக்கு திரும்ப வேண்டும். குறிப்பாக, தென் மாவட்ட அரசியல் முகமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரது ஆதரவாளர்களின் எண்ணம். இந்த நிலையில் நெல்லை தொகுதியில் கனிமொழி போட்டியிடலாம் என ஒரு தகவல் உலாவி வருகிறது.

நெல்லையில் போட்டி

அது உண்மையாக இருக்குமோ என்பதைப்போல அறிவாலய வட்டாரங்களிலும் தென் மாவட்டங்களிலும் கனிமொழியின் ஆதரவாளர்கள் சமூக வலைதள பதிவுகளையும் போஸ்டர்களையும் வெளியிட்டு வருகின்றனர். அதே நேரத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் கனிமொழி போட்டியிடுவது சற்று சிரமம் தான் என்கின்றனர் திமுகவினர். மிகப்பெரும் பழுத்த அனுபவம் கொண்டவரான முரசொலி மாறன், அவரது காலத்தில் டெல்லி அரசியலை தான் கவனித்து வந்தார். அதற்கு பிறகு டிஆர் பாலு இருக்கிறார்.

தமிழ்நாடு vs டெல்லி

இந்த நிலையில் டெல்லி அரசியலை கவனித்துக் கொள்ள கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வேண்டும் என்பதுதான் திமுக தலைமையின் எண்ணம். அதனால் தான் கனிமொழியை களம் இறக்கினார்கள். மேலும் காங்கிரஸ் திமுக கூட்டணி பிரச்சனை வந்தபோது கனிமொழி தான் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு கூட்டணியை சிக்கல் இன்றி முடித்து வைத்தார் கனிமொழி.

திமுக தலைமை

எனவே அதையே அவர் தொடர வேண்டும் என திமுக தலைமை நினைக்கிறது. அது மட்டும் இல்லாமல் திமுக தலைமையின் குடும்பத்திலிருந்து அடுத்த வாரிசுகள் தயாராகி வரும் நிலையில் கனிமொழியின் வருகை அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என்பதால் மாநில அரசியலுக்கு அவர் வருவதை விரும்பவில்லை எனவும் சொல்லப்படுகிறது. கனிமொழி தமிழக அரசியலுக்கு திரும்புவாரா? அல்லது டெல்லியை மட்டும் கவனித்துக் கொள்வாரா? என்பது இன்னும் சில தினங்களில் தெரிய வந்துவிடும் என்கின்றனர் திமுக உடன்பிறப்புகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+