"காவல்துறையை நிர்வகிக்கத் தெரிந்த ஒருவரிடம் முதல்வர் விஜய் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்” - கனிமொழி
சென்னை: "முதலமைச்சர் விஜய் மக்கள் மீது கருணை காட்டி, காவல்துறையை நிர்வகிக்கத் தெரிந்த ஒருவரிடம் அதன் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்" என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள், கொலை, கொள்ளைகள் உட்பட பல்வேறு குற்றச் சம்பவங்கள் நாள்தோறும் நடந்தேறி வருகின்றன. சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வருகின்றன.

இந்நிலையில் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நேற்றைய தினம் தூத்துக்குடி கந்தன் காலனியில், வீட்டில் தனியாக இருந்த சசிகலா என்ற பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். நான்கு நாட்களில் ஏழு கொலைகள் எனத் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். 'முத்துநகரம்' என்று அழைக்கப்படும் தூத்துக்குடியை, 'கொலை நகரம்' என்று அழைக்கும் நிலைக்குக் கொண்டு செல்கிறது தவெக அரசு.
மீண்டும் சொல்கிறேன்... முதலமைச்சர் விஜய் மக்கள் மீது கருணை காட்டி, காவல்துறையை நிர்வகிக்கத் தெரிந்த ஒருவரிடம் அதன் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.



Click it and Unblock the Notifications
