ஏடாகூடமாக மாறிய ஆன்லைன் நட்பு.. பெரியமேடு லாட்ஜுக்கு அழைத்த இளைஞர்.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
சென்னை: சென்னை பெரியமேடு லாட்ஜிற்கு இளம்பெண்ணை மிரட்டி வரவழைத்து இரு முறை உல்லாசம் அனுபவித்த குமரி வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். மோஜ் செயலி மூலமாக அறிமுகமான பி.காம் பட்டதாரி இளம்பெண்ணை தன் ஆசை வலையில் வீழ்த்தி, வீடியோ காலில் பேசும் போது ஆபாசமாக படம் எடுத்துள்ளார்.
பின்னர் இந்த படங்களை உனது தாய்க்கு அனுப்பி விடுவேன் என மிரட்டி மிரட்டியே இருமுறை லாட்ஜிற்கு வரவைத்து பாலியல் உறவு வைத்துள்ளார். 3 வது முறையாக அழைத்த போது இளம்பெண் வராததால் ஆபாச படங்களை பெண்ணின் தாய்க்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து போலீசில் புகார் கொடுத்த நிலையில் குமரியை சேர்ந்த அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோஜ் செயலியில் இளம்பெண் அறிமுகம்
சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த இளம்பெண் பி.காம் படித்து முடித்துள்ளார். வீட்டில் இருந்த இந்த இளம்பெண்ணுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மோஜ் செயலி மூலம் லிபின் ராஜ் என்ற இளைஞர் அறிமுகம் ஆகி உள்ளார். முதலில் நண்பர்களாக இருவரும் பழகி வந்தனர்.
உன் புகைப்படத்தை அனுப்பு
செல்போன் எண்ணை மாற்றிக்கொண்டு இருவரும் தினமும் பேசி வந்தனர். நாளடைவில் லிபின் ராஜ் நைசாக இளம்பெண்ணுக்கு காதல் வலை வீசியுள்ளார். இதற்காக தினமும் போன் செய்து ஆசை வார்த்தைகளை அள்ளி விட்டுள்ளார். இதில் மயங்கிய இளம்பெண்ணிடம் நைசாக உன் புகைப்படத்தை அனுப்பு என்று கேட்டுள்ளார்.
அவரும் அனுப்பி இருக்கிறார். பிறகு வீடியோ காலிலும் பேச தொடங்கினார். அடிக்கடி இப்படி வீடியோ காலில் பேச ஆரம்பித்த லிபின் ராஜ், இளம்பெண்ணை ஆபாசமாக புகைப்படம் எடுத்து வைத்துள்ளார். மேலும் சில நேரங்களில் ஆபாசமாக வீடியோவையும் பதிவு செய்துள்ளார். 2 மாதங்கள் ஆன நிலையில் ஒரு நாள் திடீரென அந்த வாலிபர் இளம்பெண்ணுக்கு போன் செய்து மிரட்ட தொடங்கினார்.
பெரியமேடு லாட்ஜுக்கு வா
நான் உன்னை ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்து வைத்து இருக்கிறேன். இதனை உன் தாய்க்கு அனுப்பாமல் இருக்க வேண்டும் எனில் நான் சொல்வதை நீ கேட்க வேண்டும் என கூறியிருக்கிறார். இதன்படி சென்னை பெரியமேடில் உள்ள லாட்ஜுக்கு வருமாறு அழைத்துள்ளார். முடியாது என சொன்னால் வீடியோ, புகைப்படம் உன் தாய்க்கு சென்றுவிடும் என்று கூறியுள்ளார்.
இதனால் பயந்து போன இளம்பெண் லிபின் ராஜ் கூறியபடி லாட்ஜுக்கு சென்றுள்ளார். அங்கு இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி லிபின் ராஜ் உல்லாசம் அனுபவித்துள்ளார். பின்னர் மீண்டும் கடந்த மாதம் இதே போல் மிரட்டி அதே பெரியமேடு லாட்ஜுக்கு வா என்று அழைத்துள்ளார். இல்லையெனில் என பழைய மிரட்டல்களை விடுத்தார்.
3-வது முறையாக அழைத்துள்ளார்
இதன்படி இரண்டாவது முறையாக மீண்டும் இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து இருக்கிறார். இந்த நிலையில் தான் மீண்டும் 3-வது முறையாக இளம்பெண்ணை லாட்ஜுக்கு அழைத்துள்ளார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு செல்போனில் தொடர்புகொண்டு இந்த ஒரு முறை மட்டும் வா என்று கூறியிருக்கிறார். அப்போது இளம்பெண் என் பாட்டி இறந்து 3 நாட்கள் தான் ஆகிறது. எனவே என்னால் வர முடியாது என கூறியிருக்கிறார்.
குமரி ஆட்டோ டிரைவர்
என்ன நான் விளையாடுகிறேன் என்று நினைத்தாயா என்று கூறி அவரது ஆபாச படம், வீடியோக்களை பெண்ணின் தாயின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார். இதை பார்த்து அதிர்ந்து போன அவர் மகளிடம் கேட்டுள்ளார். இது பற்றி அவர் கூறியதும் உடனே போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து மோசடி, பாலியல் வன்கொடுமை, மிரட்டல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வாலிபரது சொந்த ஊர் குமரி மாவட்டம் என்பதும், ஆட்டோ டிரைவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் லிபின் ராஜை அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications