பல உயிரை பலி கொடுத்து..தமிழகத்துடன் இணைந்த கன்னியாகுமரி! 70 ஆண்டுகள் நிறைவு.. மறக்கப்பட கூடாத வரலாறு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் தமிழ்நாடு நாளை மட்டும் அல்ல தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் கன்னியாகுமரியில் அப்பகுதி மக்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அதற்கு காரணம் கன்னியாகுமரி தமிழகத்தோடு இணைந்தது இன்று தான். சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் என்பது போல கன்னியாகுமரி எளிதில் தமிழகத்துடன் இணைந்து விடவில்லை. பலபேரின் உயிரை காவு கொடுத்த பிறகு தான் கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைந்தது. என்ன நடந்தது? என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.

முக்கடல் சங்கமிக்கும் கடற்கரை, வானுயற நிற்கும் திருவள்ளுவர் சிலை, ஆன்மீகத்துக்கு அடையாளமாக விவேகானந்தர் பாறை என பல பெருமைகளுக்கு சொந்தமானது கன்னியாகுமரி. தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டம்.

Kanyakumari Tamil Nadu Marshall Nesamony

கன்னியாகுமரி இன்று தமிழகத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால் இந்த மண்ணை தமிழகத்தோடு தான் இணைப்போம் என நடந்த போராட்டங்களும், அதில் உயிர் நீத்த தியாகிகளையும் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள் குமரி மக்கள்.

அடக்குமுறை, துப்பாக்கிச் சூடு, சிறைவாசம் என பல போராட்டங்களை கடந்துதான் 70 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைந்தது.

1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. அதற்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தப் பகுதி, பல்வேறு சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளைச் சந்தித்து வந்தது. குறிப்பாக, அங்கிருந்த தமிழர்கள் மொழி, சாதி, சமூக உரிமைகள் எனப் பல வகைகளில் பாதிக்கப்பட்டதாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த இணைப்புக்காக நடைபெற்ற போராட்டம் ஒரே நாளில் உருவானதல்ல. பல ஆண்டுகளாகத் தொடர்ந்த போராட்டங்கள், தலைவர்களின் தியாகம், பொதுமக்களின் எழுச்சி எனப் பல கட்டங்களைக் கடந்து தான் அந்த வெற்றியே கிட்டியது.

1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது நவம்பர் 1ஆம் தேதி குமரி மாவட்டம் தமிழகத்தோடு சேர்ந்து கொண்டது. அதற்கு முன்பு இந்த பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. சாதி, சமூக, அரசியல் பிரச்சனைகளை சந்தித்து அங்கிருந்த மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்ததாக வரலாற்று பதிவுகள் சொல்லுகின்றன. தமிழகத்தோடு இணைவதற்கான இந்த போராட்டம் ஒரே நாளில் தொடங்கி விடவில்லை.

பல ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டங்கள், பலரின் தியாகம், பொதுமக்களின் எழுச்சி என பல கட்டங்களை கடந்து தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த காலத்தில் சாதிய பாகுபாடுகள் மிகக் கடுமையாக இருந்தது. சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் தங்களின் அதிகாரங்களையும் நிலங்களையும் காப்பாற்றிக்கொள்ள எளிய மக்கள் மீது பல்வேறு அடக்குமுறைகளை கையாண்டனர்.

முலைவரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் பொதுமக்கள் மீது திணிக்கப்பட்டது. குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியக் கூட தடைகள் இருந்தது. இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிராக பல சமூக சீர்திருத்தவாதிகள் குரல் கொடுத்தனர்.முத்துக்குட்டி சுவாமி, நாராயணகுரு, அய்யங்காளி ஆகியோர் சமூகத்தின் ஏற்றத்தாழ்வுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

முத்துக்குட்டி, சுவாமி தோப்பில் சமத்துவ கிணறு அமைத்து சாதி வேறுபாடுகளை கடந்து அனைவரும் தண்ணீர் எடுக்க வழி வகுத்தார். சமூகத்தில் கொடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக ஒரு குரல் கொடுத்த அதுதான் குமரியில் எழுந்த முதல் குரல். அதற்குப் பின்னர் அரசியல் உரிமைக்கான போராட்டமாகவும் அது மாறியது.

குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற தொடங்கியது. இந்த போராட்டத்தை முன்னெடுத்தவர் தான் தற்போது அப்பகுதி மக்கள் குலதெய்வமாக வணங்கும் மார்சல் மேசமணி. கன்னியாகுமரி முதல் காசர்கோடு வரை மலையாளம் பேசும் மக்களை ஒன்றிணைத்து ஐக்கிய கேரளம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கேரளாவில் எழுந்தது.

இதற்காக டி கே நாராயண பிள்ளை, பொன்னரை ஸ்ரீதர், கேளப்பன், ஐயப்பன், பனம்பள்ளி கோவிந்தமேனன் உள்ளிட்டோர் போராடினர். தமிழகத்தில் சிலம்பு செல்வர் மாபொ சி என அழைக்கப்படும் ம.பொ.சிவஞானம் உள்ளிட்டோர் தமிழர் பகுதிகளை பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்தனர்.

இந்த போராட்டத்தில் சிதம்பரம் பிள்ளை, வேலாயுதப் பெருமாள் பிள்ளை, நாகலிங்கம், ஸ்ரீதாஸ், ஷாம் நந்தனி, தாமரைக்குளம் வேலாயுதம், காந்தி ,ராமன், கடுக்கரை வேலப்பன், ராம், டிஎஸ் மணி, கொச்சுமணி, ஸ்ரீ சங்கர் உள்ளிட்டோர் தீவிரமாக பங்கேற்றனர். நேசமணி தலைமையில் போராட்டம் தீவிரமானது. ரசாக், சிதம்பரம், நாடார், பி எஸ் மணி, குஞ்சன் நாடார், தனுலிங்க நாடார், பொன்னப்ப நாடார் உள்ளிட்ட பலரும் களத்தில் களப்போராளிகளாக போராடினர்.

இந்த போராட்டத்தின் முக்கியமான கட்டம் மொழிவாரி மாநிலம் பிரிப்பது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று 1948 ஆம் ஆண்டு குமரியில் மாங்காடு பகுதியில் உரிமை மீட்பு போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் மாங்காடு தேவசகாயம், ஐயங்குளம் செல்லம் ஆகியோர் உயிரிழந்தனர்.

இதற்கிடையே பீர்மேடு, மூணாறு, தேவிகுளம் உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வசித்த பகுதிகளிலும் போராட்டம் பரவியது. அந்தப் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என மார்சல் நேசமணி தலைமையிலான போராட்டக்காரர்கள் களமிறங்கினர். மூனாறு பகுதியில் எஸ் எஸ் சர்மா, குப்புசாமி, தேவியப்பன் உள்ளிட்டோர் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதை அடுத்து 1954 ஜூலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அங்கு பயணம் சென்ற நேசமணி, அப்துல் ரசாக், சிதம்பரநாதன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

1954 ஆகஸ்ட் 16ம் தேதியை விடுதலை தினமாக திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் அறிவித்தது. அன்றைய தினம் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. மார்த்தாண்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையின நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தேம்பனூர் பொன்னையன், மேக்கன்கரை ராமையன், மணலி எம். பாலையன், தொடுவெட்டி பப்பு பணிக்கர் ஆகியோர் உயிரிழந்தனர். இதைப்போல் புதுக்கடையில் நடந்த துப்பாக்கி சூட்டில் புதுக்கடை அருளப்பன், கிள்ளியூர் முத்துசாமி, தோட்டவரம் குமரன், புதுக்கடை செல்லப்ப பிள்ளை, தேங்காய் பட்டினம் பீர்முகமது ஆகியோர் உயிரிழந்தனர்.

மார்த்தாண்டம், புதுக்கடை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடுகளில் மொத்தம் 9 பேர் உயிரிழந்ததாக இந்தப் போராட்டத்தின் வரலாற்றுப் பதிவுகள் குறிப்பிடுகின்றன. இதுபோன்ற உயிரிழப்புகளும், அடக்குமுறைகளும் போராட்டத்தை முடக்கிவிடவில்லை. மாறாக, தமிழர் பகுதிகளைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மேலும் வலுப்படுத்தின.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் 9 தாலுகாக்களைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் முக்கியக் கோரிக்கையாக இருந்தது. இதில் தேவிகுளம், பீர்மேடு உள்ளிட்ட பகுதிகளும் இடம்பெற்றிருந்தன. ஆனால், இறுதியில் குமரி மாவட்டத்தின் நான்கு தாலுகாக்களும், செங்கோட்டை தாலுகாவும் மட்டுமே தமிழகத்துடன் இணைக்கப்பட்டன. தேவிகுளம், பீர்மேடு உள்ளிட்ட பகுதிகள் கேரளத்திலேயே தொடர்ந்தன.

1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைப்பின் அடிப்படையில் குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. பல ஆண்டுகளாகத் தொடர்ந்த போராட்டத்துக்குக் கிடைத்த முக்கியமான வெற்றியாக இது அமைந்தது. குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த நாளான நவம்பர் 1-ம் தேதி ஆண்டுதோறும் குமரி இணைப்பு தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்படுகிறது.

நாகர்கோவிலில் குமரி இணைப்புப் போராட்டத்தை முன்னெடுத்த மார்ஷல் நேசமணிக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மாவட்ட நிர்வாகம் சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பிலும் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. அதேபோல், குமரி இணைப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் நினைவுத் தூணும் அமைக்கப்பட்டது.

இன்று குமரி மாவட்டம் தமிழகத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்குப் பின்னால் பலரது தியாகமும், நீண்டகாலப் போராட்டமும் இருக்கிறது. அந்த வரலாற்றை நினைவுகூர்வதுடன், போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவுகளையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது அவசியம்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+