“கைக்குழந்தையுடன் TVK எம்.எல்.ஏ பல்லவி.. விஜய் அறிவுரை வழங்க வேண்டும்” - கார்த்தி சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தவெக எம்.எல்.ஏ பல்லவி கைக்குழந்தையைத் தொடர்ந்து பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வது என்பது அரசியல் ரீதியான வெளிச்சம் தேடும் நடவடிக்கையாகவே தோன்றுகிறது. இது குறித்து விஜய், அவருக்குத் தகுந்த அறிவுரை வழங்கவேண்டும்" என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னை திரு.வி.க நகர் தொகுதி தவெக எம்.எல்.ஏ பல்லவிக்கு சட்டமன்றத் தேர்தல் முடிந்த கையோடு குழந்தை பிறந்தது. தேர்தல் பிரச்சாரத்தின்போது கர்ப்பிணியாக இருந்தார் பல்லவி. அவர் தேர்தலில் வெற்றி பெற்று திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தனது மகனுக்கு தமிழன் வெற்றி கொண்டான் (TVK) என பெயர் சூட்டியுள்ளார் பல்லவி.

Karti Chidambaram Criticises TVK MLA Pallavi for Bringing Infant to Public Events

இதனைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ பல்லவி எங்கு சென்றாலும் தனது குழந்தையையும் தூக்கிச் செல்கிறார். எம்.எல்.ஏ பல்லவி சட்டமன்றக் கூட்டத்தொடர், பட்ஜெட் தாக்கல், சிங்கப் பெண் அதிரடி சிறப்புப்படை திட்டத் தொடக்க விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும், தனது கைக்குழந்தையுடன் பங்கேற்றிருந்தார்.

அதிக கூட்டம் உள்ள இடங்களுக்குச் செல்லும்போதும் தனது கைக்குழந்தையுடனே செல்கிறார் பல்லவி. அண்மையில் மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது முதல்வர் விஜய்யை நேரில் காண திரண்டிருந்த கூட்டத்திற்கு குழந்தையுடன் சிக்கிக் கொண்டார் பல்லவி. இதனால் அவரை ஒரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சென்னை ஐ.ஐ.டியில் பிரதமர் நரேந்திர மோடியும், முதலமைச்சர் விஜய்யும் பங்கேற்ற நிகழ்ச்சிக்கும் தனது கைக்குழந்தையுடன் எம்.எல்.ஏ பல்லவி வந்திருந்தார். அவரது குழந்தையை நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த நடிகை கஸ்துரி தூக்கி கொஞ்சியதும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். "கைக்குழந்தையைத் தொடர்ந்து பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வது என்பது அரசியல் ரீதியான வெளிச்சம் தேடும் நடவடிக்கையாகவே தோன்றுகிறது. இதுகுறித்து விஜய், அவருக்குத் தகுந்த அறிவுரை வழங்குவார் என்று நம்புகிறேன்" என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பணியிடத்தில் குழந்தைப் பராமரிப்பு மையங்கள், மகப்பேறு மற்றும் தந்தைக்கான விடுப்பு போன்ற குடும்பநலன் சார்ந்த கொள்கைகளை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். இருப்பினும், கைக்குழந்தையைத் தொடர்ந்து பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வது என்பது அரசியல் ரீதியான வெளிச்சம் தேடும் நடவடிக்கையாகவே தோன்றுகிறது. இது குறித்து விஜய், அவருக்குத் தகுந்த அறிவுரை வழங்குவார் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

தவெக எம்.எல்.ஏ பல்லவி, எங்கு சென்றாலும் தன் கைக்குழந்தையை தூக்கிச் செல்வதை பலரும் விமர்சித்து வரும் சூழலில், தவெக கூட்டணி அரசில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பியே விமர்சித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+