சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எழுதுகோல் தான் எனது செங்கோல்! நாளை கருணாநிதி சிலை திறப்பு விழா! சிறிய பிளாஷ்பேக்!

Google Oneindia Tamil News

சென்னை: எழுதுகோலையே தனது செங்கோலாக கருதி வாழ்ந்து மறைந்த கருணாநிதியின் சிலை திறப்பு விழா நாளை சென்னையில் நடைபெறுகிறது.

அரசியல் தலைவராக மட்டும் அறியப்படும் கருணாநிதி கலைத்துறையில் ஆற்றியுள்ள பணிகள் ஏராளம் ஏராளம்.

”பாரத் மாதா கி ஜே.. வந்தே மாதரம்” - 3 முறை முழங்கிவிட்டு சென்னையில் உரையை நிறைவு செய்த மோடி ”பாரத் மாதா கி ஜே.. வந்தே மாதரம்” - 3 முறை முழங்கிவிட்டு சென்னையில் உரையை நிறைவு செய்த மோடி

அதன் விவரம் வருமாறு;

75 திரைப்படங்கள்

75 திரைப்படங்கள்

கலைத்துறையில் கருணாநிதி ஆற்றியுள்ள பணி அளவிடர்க்கரியது. 75க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளதோடு, ஆட்சிப்பணி என்பது இடையில் வருவதும் போவதும் ஆகும். எழுத்துப்பணியான எனது செங்கோல், என்றைக்கும் நிலையானது என்று குறிப்பிட்டு, பல்வேறு நாவல்கள், நாடகங்கள், சிறுகதைகள், கவிதைத் தொகுதிகள், உரைநூல்கள், கட்டுரைகள் எழுதி சாதனை படைத்தவர்.

உரை நூல்கள்

உரை நூல்கள்

இவற்றில் முக்கியமான உரைநூல்கள் திருக்குறள் உரை, சங்கத்தமிழ், தொல்காப்பிய பூங்கா, இலக்கிய மறுபடைப்புகள், குறளோவியம், சிலப்பதிகாரம், நாடகக் காப்பியம், தாய், பூம்புகார் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. தனது வாழ்க்கை வரலாற்றை தமிழக மக்கள் அறியும் வகையில் 'நெஞ்சுக்கு நீதி' என்ற தலைப்பில் முரசொலி மற்றும் குங்குமம் இதழ்களில் தொடர் கட்டுரையாக எழுதினார். பின்னர் 'நெஞ்சுக்கு நீதி' ஆறு பாகங்கள் கொண்ட நூலாக வெளியிடப்பட்டது.

நாடகத்துறை

நாடகத்துறை

நாடகத் துறையில் சிறந்த விளங்கிய கருணாநிதி அனார்கலி, உதயசூரியன், உன்னைத்தான் தம்பி, இளைஞன் குரல், காகிதப் பூ, சிலப்பதிகாரம், சேரன் செங்குட்டுவன், தூக்குமேடை, நச்சுக் கோப்பை, மணிமகுடம், மகான் பெற்ற மகன், வாழமுடியாதவர்கள் போன்ற அற்புதமான நாடகங்களைப் படைத்தார்.

வரலாற்று புனைவு

வரலாற்று புனைவு

வரலாற்றுப் புனைவுகளில் ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டிச் சிங்கம், பாயும் புலி பண்டாரக வன்னியன், பொன்னர் சங்கர் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க புனைவுகளையும், புதினங்களில் அரும்பு, ரத்தக் கண்ணீர், திராவிட பண்ணை, ஒரே ரத்தம், புதையல், வான்கோழி, சுருளிமலை, வெள்ளிக்கிழமை ஆகிய பல புதினங்களை கருணாநிதி படைத்தார்.

 சிறுகதைகள்

சிறுகதைகள்

சிறுகதைத் தொகுதிகளில் ஒரு மரம் பூத்தது, கிழவன் கனவு, நெருப்பு, தாய்மை, நளாயினி, பழக்கூடை, பிள்ளையோ பிள்ளை, முடியாத தொடர்கதை ஆகிய சிறப்பானத் தொகுதிகளை படைத்தார். கவிதைத் தொகுதிகளில் அண்ணா கவியரங்கம், கலைஞரின் கவிதைகள், கவிதையல்ல, கவிதை மழை, காலப்பேழையும் கவிதைச் சாவியும், முத்தாரம், வாழ்வெனும் பாதையில் போன்ற கவிதைத் தொகுதிகளை கருணாநிதி படைத்தார்.

English summary
Karunanidhi statue opening ceremony in Chennai:எழுதுகோலையே தனது செங்கோலாக கருதி வாழ்ந்து ம்றைந்த கருணாநிதியின் சிலை திறப்பு விழா நாளை சென்னையில் நடைபெறுகிறது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X