ஓரடி முன்னால்.. ஈரடி பின்னால் போகும் தவெக அரசு! வளர்ச்சியில் பின்தங்கும் தமிழகம்! விஜய் செயலால் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட முக்கியமான திட்டங்கள், தற்போது தவெக ஆட்சியில் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் மாநிலத்தின் வளர்ச்சி பின்னோக்கி தள்ளப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

மாநிலத்தில் வளர்ச்சி என்பது இரண்டு வகையாக பார்க்கலாம். ஒன்று கேரளா மாதிரி அடித்தளத்திலிருந்து வளர்ச்சியடைவது. இரண்டாவது முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் வளர்ச்சியை சாத்தியப்படுத்த நினைப்பது. தமிழ்நாடு இரண்டாவது பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை, தவெக அரசு முடக்கியிருப்பதன் மூலம் தமிழகம், வளர்ச்சி பாதையிலிருந்து விலகியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

TVK government

விமான நிலைய திட்டம் ரத்து

முதல் விஷயம் பரந்தூரிலிருந்து தொடங்கியது. பரந்தூர் விமான நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்தார். இதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றனர். மக்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கிறது என்று பாராட்டினர். ஆனால், அதே நேரம் இன்று வரை இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடம் இறுதியாகவில்லை.

மாற்று இடம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை

சென்னை விமான நிலையத்தின் செயல்பாட்டு திறன் இன்னும் கொஞ்ச மாதங்களில் முழு உச்சத்தை எட்டிவிடும். அதன் பின்னர் பயணிகளை கையாளவும், சரக்குகளை ஏற்றி இறக்கவும் சென்னை விமான நிலைத்தை நம்பியிருக்க முடியாது. எனவே உடனடியாக இன்னொரு விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும். இந்த அவசர நிலையை விஜய்க்கு தெரியுமா? அப்படி தெரிந்திருக்கிறது எனில், இன்னொரு விமான நிலையத்தை அமைக்க ஏன் இப்போது வரை இடம் தேர்வு செய்யப்படாமல் இருக்கிறது? என்று பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

ஈசிஆர் காரிடார் என்ன ஆச்சு?

பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்பட்டதால், அங்கு திட்டமிடப்பட்ட ஏரோசிட்டி மற்றும் மெட்ரோ நீட்டிப்பு பணிகளும் முடங்கியுள்ளன. அதேபோல முந்தைய அரசால் அறிவிக்கப்பட்ட உலகளாவிய விளையாட்டு நகரம் திட்டம், கிண்டி-வேளச்சேரி மேம்பாலம் மற்றும் ஈசிஆர் காரிடார் ஆகிய திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

கடைசி கட்ட டெண்டர் ரத்து

ஓசூர் டைடல் பார்க் திட்டம் சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டு டெண்டர் நிலைகளில் தேக்கமடைந்துள்ளது. ஓசூர் அறிவுசார் காரிடார் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதான திட்டத்திற்கு ஏலதாரர்கள் யாரும் முன்வராததால் அதுவும் முடங்கியிருக்கிறது. சென்னை புறவழிச் சாலை கடைசி கட்ட டெண்டரும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. 1,000 ஏசி எலக்ட்ரிக் பஸ்கள் மற்றும் சிஎம்ஆர்எல் மினி பஸ்களுக்கான டெண்டர் கோரல்களில் தேக்க நிலை ஏற்பட்டிருக்கிறது.

இப்படி கடந்த ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட பல திட்டங்கள் அப்படியே தேக்க நிலையிலேயே இருப்பது, திட்டங்களைத்து ரத்து செய்வது என்பது திமுகவை பழிதீர்க்கும் நடவடிக்கையாக தவெக அரசு பார்க்கலாம். ஆனால், இது மாநிலத்தின் வளர்ச்சியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் உண்மை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+