சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒன்றிய அரசு.. திமுகவுக்கு எதிராக குஷ்பு கொந்தளிப்பு.. இனி "இப்படி சொல்லுங்க.." ஐடியாவை பாருங்க

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவினர் மத்திய அரசை, ஒன்றிய அரசு என அழைக்கத் தொடங்கியுள்ளது, பாஜகவில் இணைந்துள்ள குஷ்புவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    DMK-வின் Ondriya Arasu-க்கு Khushbu பதிலடி | DMK vs BJP | Oneindia Tamil

    எனவே, இதற்கு மாற்றாக இந்தியாவை வேற லெவலில் அழைக்க ஐடியா தந்துள்ளார் குஷ்பு.

    மேலும், தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்று திட்டவட்டமாக தெரிவித்து டுவிட்டரில் கொந்தளித்துள்ளார் பாஜக பிரமுகரும், நடிகையுமான குஷ்பு.

    எம்எல்ஏ ஆகியிருக்கணும்.. எல்லாம் நேரம்தான் - செல்பி போட்டு ஆறுதல் படும் குஷ்பு எம்எல்ஏ ஆகியிருக்கணும்.. எல்லாம் நேரம்தான் - செல்பி போட்டு ஆறுதல் படும் குஷ்பு

    ஒன்றிய அரசு

    ஒன்றிய அரசு

    தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தப்பின்னர் பல்வேறு பழைய நடைமுறைகளை மாற்றத் தொடங்கியுள்ளது. இதுவரை தமிழ்நாட்டை ஆட்சிசெய்தவர்கள், எப்போதும் மத்திய அரசு என்று தான் குறிப்பிட்டு வந்தனர். ஆனால், முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் வெளியிடும் அனைத்து அறிக்கைகளிலும் மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என்று குறிப்பிடுகிறார்.

    பரவலாகும் வார்த்தை

    பரவலாகும் வார்த்தை

    இதைத்தொடர்ந்து, அனைத்து திமுக அமைச்சர்களும், எம்எல்ஏக்களும், திமுகவினரும், திமுக அனுதாபிகளும், மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே அழைத்து வருகின்றனர். ஊடகங்களில் இப்படித்தான் குறிப்பிடுகிறார்கள். கூட்டணியிலுள்ள சில அரசியல் கட்சிகளும் ஒன்றிய அரசு என குறிப்பிட்டு வருகின்றனர்.

    பாஜகவினர் கோபம்

    பாஜகவினர் கோபம்

    அதே நேரத்தில், ஒன்றிய அரசு என்ற இந்த சொல்லாடல் இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும் இதில் பயங்கர சதியுடன் கூடிய நோக்கம் இருப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். தேசிய விசாரணை ஏஜென்சி இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று கூட ஒரு பாஜக பிரமுகர் கோரிக்கை விடுத்தார்.

    குஷ்பு கொந்தளிப்பு

    குஷ்பு கொந்தளிப்பு

    இந்நிலையில், குஷ்புவும் இந்த சொல்லாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது பல்வேறு ட்விட்டர் பதிவில் இது தொடர்பாக வரிசையாக கருத்து கூறுகையில், மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதில் பெருமிதம் கொள்கிறவர்கள், மத்திய அரசின் ஒரு பகுதியாக இருந்து அதிகபட்ச நலன்களை பெற்றவர்கள். துரதிர்ஷ்டவசமாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் இருந்து நாட்டை ஆட்சி செய்தவர்களும் இப்படி அழைக்கிறார்கள் என்றுள்ளார் குஷ்பு.

    இந்தியப் பேரரசு

    இந்தியப் பேரரசு

    Tamilnadu was, is and will always be part of INDIA.. வாழ்க பாரத தேசம் வாழ்க தமிழகம். #Jaihind. இவ்வாறு ஒரு பதிவில் கூறியுள்ளார். மேலும், இந்தியப்_பேரரசு என்பதே, இந்திய ஒன்றியம் என்று அழைப்பவர்களுக்கு இனி நம் பதில். இவ்வாறு ஒருநெட்டிசன் கூறிய பதிவை ரீடுவிட் செய்துள்ளார். அதாவது, இந்திய பேரரசு என அழைப்போம் என அழைப்பு விடுத்துள்ளார் குஷ்பு. இதற்கு ஆதரவு கிடைக்குமா? அல்லது ஒன்றியம் என்ற வார்த்தை சரியானதா, உங்கள் கருத்து என்ன?

    English summary
    The DMK has started calling the central government as Union government or ondriya arasu, which irks Khushbu Sundar, who has joined the BJP last year. So, Khushbu has come up with an idea to take India to another level as an alternative.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X