கிளாம்பாக்கம்.. சென்னையின் வரப்பிரசாதம்.. கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் பாயும் வெளிச்சம்.. மகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கம் பஸ் நிலையம் விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதுகுறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

வண்டலூர் அருகே சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையத்தின் இறுதிக்கட்ட பணிகள் இத்தனை நாளும் நடந்து கொண்டிருந்த நிலையில், கடந்த ஜுன் மாதமே, "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" என்ற பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவிருந்தது.

கட்டுமான பணிகள்: ஆனால், நடைமுறை சிக்கல்கள் இங்கு கிளம்பியதால், இதை திறந்து வைப்பது ஒத்திவைக்கப்பட்டது. காரணம், மழை பெய்தாலே, இந்த பஸ் ஸ்டாண்டு பகுதியில், மழைநீர் தேங்குவது, மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது..

Kilambakkam Bus Terminus and and Kilambakkam Bus Stand getting ready to open Minister Sekar babu inspection

கட்டுமான பணிகளின்போது, இந்த சிக்கல் தெரியாமல் இருந்த நிலையில், சென்னையில் பெய்த கோடை மழையால், பஸ் ஸ்டாண்டு பகுதி முழுவதுமே நீரில் மிதந்தது.. அதனால், தேங்கி நிற்கும் நீரை மறுபுறம் கொண்டு செல்ல ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே குழாய் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டனர்.

அதேபோல, பஸ்கள், எளிதாக சென்று வரும் வகையில் கிளாம்பாக்கத்தை சுற்றி சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டது.. மேலும், பஸ்நிலைய மேற்கூரை பணிகள், பயணிகள் வந்து தங்குவதற்கான தங்குமிடம், உணவகம், கடைகள் பணிகளும் ஆரம்பமாயின. இந்த பணிகள் எல்லாமே இந்த மாதத்திற்குள் முடித்துவிட முடியாது என்பதால்தான், கிளாம்பாக்கம் பஸ்நிலைய திறப்பு தள்ளிப்போகும் என்று அதிகாரிகள் கூறியிருந்தனர்.

விரைவில் திறப்பு: இப்போது, இந்த பணிகள் கிட்டத்தட்ட முடியும் நிலைக்கு வந்துவிட்டதாக தெரிகிறது. கடந்த வாரம், அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சிஎம்டிஏ கூட்டம் நடைபெற்றது.

இதில், ஜிஎஸ்டி சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.. அதன்படி, ஜிஎஸ்டி சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் இந்த பணிகள் முழுவதுமாக நிறைவுபெறும் என்றும் சிஎம்டிஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கிளாம்பாக்கம்: கிளாம்பாக்கத்தில், 99 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளதாம்.. பூங்கா அமைத்தல் உள்ளிட்ட மீதம் உள்ள 1% இறுதிகட்ட பணிகள் மட்டுமே நடந்து வருவதாக சொல்கிறார்கள். இந்நிலையில், இதன் இறுதிகட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக, மீண்டும் அதிகாரிகளுடன் கிளாம்பாக்கம் வந்திருந்தார் அமைச்சர் சேகர் பாபு..1

அப்போது பேருந்து நிலைய நுழைவாயில் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் பெயர் பொருத்தும் பணிகள், பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் பேருந்து நிலையத்திற்குள் கார், மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடங்கள், பயணிகள் தங்கும் அறைகள் போன்றவைகளை ஆய்வு செய்தார்.. மேலும், பொதுமக்கள் வசதிக்காக பஸ் ஸ்டாண்டுக்குள் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளிடமும் அமைச்சர் கேட்டறிந்தார்.

மின்விளக்குகள்: அப்போது, கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் வெளிச்சம் குறைவாக இருப்பதுபோல தெரிந்தது. அதனால், பஸ் ஸ்டாண்டில் அதிக வெளிச்சம் தேவையாக இருப்பதால் கூடுதலாக மின்விளக்குகளை அமைக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர் பாபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மிக விரைவில் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்காக விழா மேடை அமைக்கும் இடத்தையும், அமைச்சர் சேகர் பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பஸ்கள், சென்னைக்குள் வருவதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

வரப்பிரசாதம்: இந்த நெரிசலை குறைப்பதற்காகவும், சென்னை கோயம்பேடு மற்றும் சென்னை-திருச்சி, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிமையாக பயணம் மேற்கொள்வதற்காகவே கிளாம்பாக்கத்தில் இந்த புதிய முனையம் கட்டப்பட்டு வரும்நிலையில், சென்னைவாசிகளுக்கு வரப்பிரசாதமாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+