ஒரு மந்தையில் இருந்து பிரிந்த 3 ஆடுகள்.. கொங்கில் நேருக்கு நேர் நிற்கும் செ.பா., எஸ்.பி.வி., செங்ஸ்!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலம் முக்கிய பங்கை வகிக்க போகிறது. அதிமுக தரப்பில் எஸ்பி வேலுமணி, திமுக தரப்பில் செந்தில் பாலாஜி, தவெக தரப்பில் செங்கோட்டையன் என மூன்று முக்கிய புள்ளிகள் கொங்கு மண்டல பொறுப்பாளர்களாக அந்தந்த கட்சிகளில் இருக்கின்றனர். ஆனால் ஒரு காலத்தில் இவர்கள் மூன்று பேருமே அதிமுகவில் தான் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காலப்போக்கில் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் தற்போது எதிரெதிர் அணியில் நின்றிருப்பதால் கொங்கு மண்டல அரசியல் சூடு பிடித்திருக்கிறது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலையை துவக்கி விட்டன. முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் என தேர்தல் பிரச்சாரங்களிலும், மக்கள் சந்திப்புகளிலும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க கொங்கு மண்டலத்தை இந்த முறை கைப்பற்ற போவது யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம் என கொங்கு பகுதி முழுவதும் குறிப்பிட்ட சமுதாயத்தினரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது.

கொங்கு அரசியல்
கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை இதுவரை அதிமுக தான் வலுவாக இருந்தது என சொல்லலாம். குறிப்பாக கோவை மாவட்டம் அதிமுகவுக்கு எப்போதுமே சாதகமான பகுதி. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக ஆதிக்கம் செலுத்தியபோதும் கோவையில் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை. ஒட்டுமொத்தமாக பத்து தொகுதிகளையும் அதிமுகவை கைப்பற்றியது.
கோவை பகுதி
அப்போது கரூரில் செந்தில் பாலாஜி, ஈரோட்டில் செங்கோட்டையன், கோவையில் எஸ்பி வேலுமணி, நாமக்கல்லில் தங்கமணி என பலரும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இதில் செந்தில் பாலாஜி மட்டும் திமுக தரப்பில் இருந்தார். ஆனால் அவர் அதிமுகவில் தான் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட செங்கோட்டையனின் அடிப்படை உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது.
செங்கோட்டையன்
தொடர்ந்து பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார். அவருக்கு நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும், கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் பதவியும் வழங்கப்பட்டு இருக்கிறது. கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலங்களை பொருத்தவரை அதிமுகவில் எஸ்பி வேலுமணியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. கோவையின் பொறுப்பாளராகவும் இருக்கிறார். இந்த நிலையில் இந்த முறை கொங்கு மண்டலத்தில் கோட்டை விட்டு விடக்கூடாது என்பதற்காக செந்தில் பாலாஜியை திமுக களம் இறக்கி இருக்கிறது.
செந்தில் பாலாஜி
கோவையின் பொறுப்பு அமைச்சராகவும் அவர் இருந்திருக்கிறார். தற்போது பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் கரூரை விட கோவையிலேயே கவனம் செலுத்தி வருகிறார் செந்தில் பாலாஜி என்கிற திமுக உடன் பிறப்புகள். ஏற்கனவே எஸ்பி வேலுமணி கொங்கு மண்டலத்தில் தேர்தல் வேலைகளை துவக்கி விட்ட நிலையில் அதைவிட ஒரு படி முன்னதாக பல்வேறு மாநாடுகளையும் அங்கே நடத்திவிட்டார் செந்தில் பாலாஜி. இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள செங்கோட்டையனக்கு கோவை ஈரோடு பகுதிகளில் நேற்று பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொங்கு மண்டலம்
ஒட்டுமொத்தமாக விஜய் ரசிகர்கள் திரண்டு வந்து செங்கோட்டையனை வரவேற்றது தொலைக்காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் ஒரு மந்தையிலிருந்து பிரிந்த மூன்று ஆடுகள் போல அதிமுகவில் மிகப் பிரபலமாக இருந்த எஸ்பி வேலுமணி, செந்தில் பாலாஜி, செங்கோட்டையன் ஆகியோர் 2026 சட்டமன்றத் தேர்தலில் எதிர் எதிர் அணியில் இருக்கின்றனர். இதில் கொங்கு மண்டலத்தில் வெற்றியை சுவைக்க போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications