ஓபிஎஸ் தான் ஒற்றை தலைமை! எடப்பாடியை ஏற்கவில்லை..! கொங்கிலிருந்து முதல் சப்போர்ட்! ஆதரவளித்த தனியரசு!
சென்னை : எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையாக உருவெடுப்பது அதிமுகவுக்கு நல்லதல்ல எனவும், அதிமுகவில் ஒற்றைத் தலைமை வருவது என்றால் அது ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தான் வர வேண்டும் என கொங்கு இளைஞர் பேரவை நிறுவனரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தனியரசு கூறியுள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வந்த நிலையில் கூட்டத்திற்கு வெளியே சாலையில் காத்திருந்த தொண்டர்களுக்கும் திடீர் மோதல் வெடித்தது. அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என தொண்டர்கள் இரு தரப்பினர் பிரிந்து முழக்கமிட்டனர்.
அதோடு நில்லாமல் ஜெயக்குமாரும் தன் பங்கிற்கு கொளுத்திப் போட விவகாரம் மேலும் பெரிதானது. இதனையடுத்து சென்னை உள்ளிட்ட பல இடங்களில் போஸ்டர்கள் முளைக்க, ஓபிஎஸ் இபிஎஸ் இடையே ஒற்றைத் தலைமை தொடர்பாக மோதல் இருப்பது வெட்டவெளிச்சமாகியது..

அதிமுகவில் மோதல்
இதனையடுத்து இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையாக உருவெடுப்பது அதிமுகவுக்கு நல்லதல்ல என்று கொங்கு இளைஞர் பேரவை நிறுவனரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தனியரசு கூறியுள்ளார். சென்னை பசுமை வழிச் சாலையிலுள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரை கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு இன்று நேரில் சந்தித்து ஆதரவளித்தார். சிறிது நேரம் உரையாடிய பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களையும் சந்தித்தார்.

தனியரசு ஆதரவு
அப்போது பேசிய அவர்," அதிமுகவின் தோழமை என்பதால் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளேன். எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையாக உருவெடுப்பது அதிமுகவுக்கு நல்லதல்ல. அதிமுகவில் ஒற்றைத் தலைமை வருவது என்றால் அது ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தான் வர வேண்டும். அதிமுகவின் முழு அதிகாரத்தையும் ஓ.பன்னீர்செல்வம் தன்வசப்படுத்தி வேண்டும்.

எடப்பாடி பழனிசாமியை ஏற்கவில்லை
இந்த முறை பணிந்து போகக்கூடாது என்று ஓ.பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தி உள்ளேன். ஒற்றைத் தலைமை பிரச்சனையில் வீட்டுக் கொடுக்க மாட்டேன் என்று ஓபிஎஸ் உறுதி அளித்துள்ளார். 40 மாவட்டச் செயலாளர்களில் ஒரு சில நிர்வாகிகளை தவிர வேறு யாரும் எடப்பாடி பழனிசாமியை ஏற்கவில்லை. யாரையும் அரவணைத்துச் செல்லாத தலைவராக எடப்பாடி பழனிசாமியை பார்க்கின்றனர்

சசிகலா, டிடிவி தினகரன் இணைவார்கள்
ஓ.பி.எஸ் தலைமை ஏற்றால் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவினர் இணைவார்கள். மாவட்ட செயலாளர்கள் மட்டுமே இபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ் பக்கம் உள்ளனர். அவர் தலைமையில் மக்களவை தேர்தல், சட்டசபை தேர்தலில் தோல்வியே கிடைத்தது, எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் செல்வாக்கும் இல்லை " என தனியரசு கூறினார்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications