திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி
சென்னை: என்னதான் மாவட்டத்தின் தலைநகரம் என்றாலும் சென்னையில் இருந்து 42 கிலோ மீட்டர் தள்ளியிருந்தாலும், எல்லா ரயில்களும் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நிற்பது இல்லை.. அதற்கு பதிலாக காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை என மூன்று நகரங்களுக்கும் பொதுவான இடமான அரக்கோணத்தில் ரயில் நிற்கிறது. இந்நிலையில் திருவள்ளூர் ரயில் பயணிகளின் பல ஆண்டுகால கோரிக்கையை ஏற்று, வண்டி எண் 12675 சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் கோவை எக்ஸ்பிரஸ் ரயில், இன்று முதல் சோதனை அடிப்படையில் திருவள்ளூரில் நின்று செல்லத் தொடங்கியுள்ளது. இதை பார்த்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவள்ளூர் ரயில் நிலையம் 'NSG-4' என்ற அந்தஸ்து கொண்ட பெரிய நிலையமாகும். இங்கு மொத்தம் 6 நடைமேடைகள் உள்ளன. தினசரி சுமார் 1 லட்சம் முதல் 1.5 லட்சம் பயணிகள் இந்த நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர். சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் செல்லும் பாதையில் இது ஒரு மிக முக்கியமான 'ஜங்ஷன்' போன்ற செயல்பாட்டில் இருக்கிறது. சென்னை சென்ட்ரல்/கடற்கரை - அரக்கோணம்/திருத்தணி தடத்தில் இயங்கும் அனைத்து மின்சார ரயில்களும் (சுமார் 150-க்கும் மேற்பட்ட சேவைகள்) இங்கு நின்று செல்கின்றன.

அதேபோல் 20 முதல் 25 ஜோடி விரைவு ரயில்கள் இங்கு நின்று செல்கின்றன. குறிப்பாக சப்தகிரி எக்ஸ்பிரஸ், திருப்பதி எக்ஸ்பிரஸ், லால்பாக் எக்ஸ்பிரஸ் போன்றவை நின்று செல்கின்றன. தாம்பரம் போல் திருவள்ளூர் ஒரு பெரிய நகரம் என்றாலும், பல முக்கியமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் இங்கு நிற்காமல் சென்று வருகின்றன. சில தொழில்நுட்ப மற்றும் நிர்வாகக் காரணங்கள் காரணமாக நிற்காமலேயே செல்கின்றன. திருவள்ளூர், சென்னை சென்ட்ரலில் இருந்து சுமார் 42 கி.மீ தொலைவில் மட்டுமே உள்ளது.
பொதுவாக நீண்ட தூர ரயில்கள் கிளம்பும் இடத்திலிருந்து குறைந்தபட்சம் 50-80 கி.மீ தூரத்திற்குள் நிறுத்தம் வழங்கப்படாது. தாம்பரம் மட்டுமே விதிவிலக்காக 26 கிலோ மீட்டர் தூரத்திலேயே இருக்கிறது. காரணம் தாம்பரம் மிகப்பெரிய ரயில் முனையம். தென்சென்னையின் முக்கியான ரயில் நிலையம் என்பதால் நிற்கிறது. ஆனால் திருவள்ளூர் என்பது சென்னையின் புறநகர் பகுதி என்பதுடன் மக்கள் நெருக்கமும் அதிகமாக இல்லை..
அதுமட்டுமல்ல.. திருவள்ளூருக்கு மிக அருகிலேயே (சுமார் 27 கி.மீ) அரக்கோணம் ஜங்ஷன் உள்ளது. அரக்கோணத்திற்கு அருகில் தான் காஞ்சிபுரம், திருத்தணி, ராணிப்பேட்டை உள்ளது. அரக்கோணத்தில் ரயில் நிற்க காஞ்சிபுரம் முக்கிய காரணமாக உள்ளத. அங்கு அனைத்து முக்கியமான ரயில்களும் நிற்பதால், மிக நெருக்கமான தூரத்தில் மீண்டும் ஒரு நிறுத்தம் வழங்கினால் ரயிலின் வேகம் மற்றும் நேரம் பாதிக்கப்படும் என ரயில்வே கருதுகிறது.
திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு 10-15 நிமிடங்களுக்கு ஒரு மின்சார ரயில் இருப்பதால், பயணிகள் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணமும் ஒரு காரணமாக இருககிறது. அதேபோல் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் நன்றாகவே உள்ளன. ஆனால் ஒரு 'முக்கியமான எக்ஸ்பிரஸ் ஸ்டேஷன்' என்ற அளவில் சில குறைபாடுகள் உள்ளன. குறிப்பாக இங்குள்ள சில நடைமேடைகள் 24 பெட்டிகள் கொண்ட பெரிய எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்தும் அளவிற்கு முழுமையான நீளம் கொண்டிருக்கவில்லை (குறிப்பாக நடைமேடை 1 மற்றும் 2). லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் வசதிகளுக்கான பணிகள் நடந்து வந்தாலும், மற்ற பெரிய நிலையங்களுடன் ஒப்பிடுகையில் இது சற்று பின்தங்கியே இருக்கிறது.
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் நிற்காமலேயே சென்று வருகிறது.. அங்கு நின்று சென்றால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் அந்த ரயில் நின்று செல்ல வேண்டும் என்பது திருவள்ளூர் மக்களின் பல ஆண்டு ஏக்கமாகவே இருந்தது. அந்த கனவு நிறைவேறி உள்ளது. இன்று காலை இந்த ரயில் திருவள்ளூர் வந்தடைந்தபோது, பொதுமக்கள் மற்றும் பயணிகள் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக வரவேற்றார்கள்.
சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 06:10க்கு புறப்படும் ரயில் திருவள்ளூர் வந்தடையும் நேரம்: காலை 06:43 ஆகும், திருவள்ளூரில் 2 நிமிடம் நிற்கும். மறுபடியும் புறப்படும் நேரம்: காலை 06:45 ஆகும். திருவள்ளூர் நிறுத்தத்தின் காரணமாக, இந்த ரயில் அடுத்து வரும் நிலையங்களுக்குச் செல்லும் நேரத்தில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அரக்கோணத்தில் காலை 07:08 மணிக்கு வந்து 07:10 மணிக்கு புறப்படும். வாலாஜா ரோட்டில் காலை 07:35 மணிக்கு வந்து 07:37 மணிக்கு புறப்படும். காட்பாடியில் காலை 08:03 மணிக்கு வந்து 08:05 மணிக்கு புறப்படும். ஆம்பூரில் காலை 08:43 மணிக்கு வந்து 08:45 மணிக்கு புறப்படும். கோவை போன்ற முக்கிய நகரங்களுக்கு நேரடியாகச் செல்ல இனி அரக்கோணம் வரை அலைய வேண்டியதில்லை என்பது திருவள்ளூர் மக்களுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய நிம்மதியாகும்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications