கோவை செல்வராஜ் எந்தக் கட்சி.. அதிமுக என்றால் நாங்கள் தான்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!
சென்னை: தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில் கோவை செல்வராஜ் எந்தக் கட்சி சார்பாக கலந்துகொண்டார் என்று தெரியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி நாளை மறுநாள் முதல் தொடங்குகிறது. 2023 மார்ச் 31ம் தேதிக்குள் இப்பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

இதற்கென 6 பி என்ற படிவமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு தொடர்பாக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி தமிழக தேர்தல் ஆணையம் சார்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக அனைத்து கட்சிகளுடனான தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் கோவை செல்வராஜூம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஜெயக்குமார் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஜெயக்குமார் வந்தபோது, அதிமுக பெயர்ப்பலகை முன்னிலையில் 3 இருக்கைகள் போடப்பட்டிருந்தது. அதில் ஒரு இருக்கையில் கோவை செல்வராஜ் அமர்ந்திருந்தார். அவர் முன் அதிமுக பெயர்ப்பலகை வைக்கப்பட்டிருந்தது. அப்போது வந்த ஜெயக்குமார், இருக்கையில் அமர்வதற்கு முன் பெயர்ப்பலகையை கையில் எடுத்து நைசாக தன் பக்கத்தில் வைத்துக்கொண்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் கோவை செல்வராஜ் அமைதியாக அமர்ந்திருந்ததால், எவ்வித சலசலப்பும் ஏற்படவில்லை.
தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர் நீக்கம், ஒரே நபருக்கு இரு வாக்குகள் என பல்வேறு குளறுபடிகள் இருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்க வலியுறுத்தினோம். இதனால் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆதரவளித்தோம்.
அதிமுக சார்பாக பொன்னாச்சி ஜெயராமனும், நானும் மட்டுமே பங்கேற்றோம். கோவை செல்வராஜ் எந்தக் கட்சி சார்பாக பங்கேற்றார் என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications