மு.க.ஸ்டாலின் அரசுடன் இணைந்து செயல்படுவோம்.. வாருங்கள்.. குஷ்பு அழைப்பு!
சென்னை: கோவிட் ஒழிப்புப் போரில் தமிழக அரசுடன் இணைந்து அனைவரும் செயல்பட வேண்டும் என்று நடிகையும், பாஜக உறுப்பினருமான குஷ்பு கோரிக்கை விடுத்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனிடம் தோல்வியுற்றார் குஷ்பு. இருப்பினும் தேர்தலில் வென்ற திமுகவுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, மு.க.ஸ்டாலினுக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது அரசுடன் பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் குஷ்பு. இதுதொடர்பாக அவர் ஒரு ட்வீட் போட்டுள்ளார்..
அதில், தமிழக மக்கள் அனைவரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து இணைந்து செயல்பட வேண்டும். கொரோனோவுக்கு எதிரான போரில் அரசால் மட்டும் எல்லாவற்றையும் செய்ய முடியாது. மக்களின் பங்கும் முக்கியமானது. நம்மால் முடிந்த ஒத்துழைப்பை நாம் அளிப்போம். சிறு துளி பெருவெள்ளமாகும் என்று கும்பிட்ட கை போட்ட ஸ்மைலியுடன் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
I urge people of TN to please help the Govt of Shri @mkstalin Avl to fight #covid19 Remember it cannot be done alone by the govt, we play a vital role too. Let's do our bit. Every drop makes an ocean. 🙏🙏🙏
— KhushbuSundar ❤️ (@khushsundar) May 8, 2021
ஒரு பக்கம் பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம், அரசை நக்கலடித்துக் கொண்டுள்ள நிலையில், குஷ்புவின் இந்த பொறுப்பான ட்வீட் அனைவரது பாராட்டுக்களையும் கவர்ந்துள்ளது. பொறுப்பான முறையில் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள குஷ்புவை பாராட்டுவதாக பலரும் அவரது ட்வீட்டில் வந்து கூறிக் கொண்டுள்ளனர்.
-
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications