கை நடுங்குது.. வீட்டில் எவ்வளவு பிரச்சனை தெரியுமா.. டாஸ்மாக் கடை மூடலால் மது பிரியர்கள் புலம்பல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களுக்கு ரூ.10 ரூபாய் திரும்ப கொடுக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகளைத் திறக்காமல் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திடீரென கடையை மூடுவதால், மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் வழக்கமாக 12 மணிக்கு திறக்கப்படும். ஆனால் இன்று மதியம் 1 மணியாகியும் கூட ஏராளமான கடைகள் திறக்கப்படாமல் மூடியே இருந்தது. இதுகுறித்து விசாரிக்கையில், இன்று முதல் காலி பாட்டில்களுக்கு ரூ.10 திரும்ப கொடுக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.

TASMAC

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் கடைகளை திறக்காமல் ஊழியர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட மேலாளர்கள் அலுவலகம், முதுநிலை மேலாளர் அலுவலகம் முன் கூடினார்கள். அதேபோல் காலி பாட்டில்களை திரும்ப பெறுவதற்கான எந்த வசதியும் செய்து தராமல் அதற்கான கால அவகாசம் கொடுக்கப்படாமல் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டால், கடைகள் திறக்கப்படவில்லை.

இதனிடையே மதுபானம் வாங்க வந்த மது பிரியர்கள் ஆங்காங்க கடைகளுக்கு முன்பு நிற்க தொடங்கிவிட்டனர். இங்கு தான் கடை மூடி இருக்கிறது, வேறு இடத்தில் திறந்திருக்கும் என்று சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு கட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடையை உடனே திறக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

இதுகுறித்து மது பிரியர் ஒருவர் பேசுகையில், மக்களாட்சி என்பது மக்களுக்காக கஷ்டப்பட வேண்டும். எதுமே சொல்லாமல் கடையை மூடினால் நாங்கள் என்ன செய்ய முடியும்.. நாங்கள் குடிக்க தான் செய்வோம்.. திடீரென்று மூடினால் என்ன செய்வது? வீட்டில் எவ்வளவு பிரச்சனை தெரியுமா? ஆணாக எவ்வளவு கஷ்டப்படுகிறோம் தெரியுமா? கை, கால் ஆடுகிறது என்றார்.

தொடர்ந்து மீன் விற்கும் தொழிலாளி ஒருவர், காலையில் இருந்து மீன் விற்று உழைத்துள்ளோம். குடி இல்லாமல் உடம்பு வலி வரும்.. குடித்தால் போய் சாப்பிட்டுவிட்டு தூங்கிவிடுவோம்.. எத்தனை மணிக்கு திறப்பார்கள் என்று தெரியவில்லை. கை நடுங்குகிறது.. வண்டி கூட ஓட்ட முடியவில்லை.. வெயிலில் மீன் விற்கும் எங்களுக்கு தான் கஷ்டம் தெரியும்.. ஏற்கனவே பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வாங்குகிறார்கள்.

கடை மூடுவது தொடர்ந்த எந்த தகவலும் இல்லை. திடீரென்று மூடுவதால் பக்கென்று இருக்கிறது. தூக்கமே வராது.. தூக்கத்திற்காக தான் நாங்களே குடித்து கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை என்பதால் மதியம் முதலே ஆயிரக்கணக்கானோர் டாஸ்மாக் கடை முன்பு திரண்டுவிட்டு கடை திறக்கப்படாததால் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+