சீட்டா.. வேண்டவே வேண்டாம்.. ஓடும் பாஜக நிர்வாகிகள்.. வரிசைகட்டிய அதிமுக தலைகள்.. என்ன நடக்கிறது?
சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறிய நிலையில் அதிமுக இரண்டம் கட்ட நிர்வாகிகள் இந்த அறிவிப்பால் ஏக குஷியில் இருக்கிறார்களாம். ஆனால் பாஜகவில் இருக்கும் இரண்டாம் கட்ட தலைகள் பலர் இந்த முடிவால் கொஞ்சம் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.
அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறி இருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மட்டும் இப்படி தனித்து போட்டி, கட்சியை பலப்படுத்த இது உதவியாக இருக்கும். மற்றபடி அடுத்த லோக்சபா தேர்தலில் மீண்டும் கூட்டணி தொடரும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்..
அதோடு நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்துதான் இந்த கூட்டணி பிளவிற்கு காரணம் என்று ஒரு பக்கம் கூறப்பட்டாலும்.. அதெல்லாம் காரணம் இல்லை.. நயினார் தெரிவித்த கருத்துக்கு விளக்கம் கொடுத்துவிட்டோம், கூட்டணி இடப்பங்கீடு ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை என்பதால் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பேச்சுவார்த்தை சரியில்லை
அதிமுக பாஜக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தைகள் இரண்டு முறை நடைபெற்றது. ஆனால் இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் பெரிய தோல்வி ஏற்பட்டது.
இதில் பாஜக முதலில் 50 சதவிகித வார்டுகளையும், 5 மேயர் பதவிகளையும் கேட்டது. ஆனால் அதிமுக 5 சதவிகித வார்டுகளை மட்டுமே தர தயாராக இருந்தது. 30 சதவிகித இடங்கள் வரை பாஜக இறங்கி வந்த நிலையில் அதிமுக அதிகபட்சம் 10 சதவிகித வார்டுகள் மட்டுமே தருவோம் என்றது. இதனால் கூட்டணியில் இழுபறி நீடித்தது.

வேட்பாளர் பட்டியல்
இதையடுத்து கூட்டணியில் இருந்து வெளியேறலாம் என்ற முடிவை பாஜக, அதிமுக எடுத்தது. நேற்று முதல்நாள் இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும் போதே அதிமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. நேற்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் அதிமுக வெளியிட்டது. இதையடுத்து கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக பாஜக அறிவித்தது. அதோடு பாஜகவும் தற்போது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஒருவழியாக வெளியிட்டுள்ளது.

பாஜக திணறல்
ஆனால் பாஜகவில் பல முக்கிய இரண்டாம் கட்ட தலைவர்கள் தேர்தலில் நிற்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது அதிமுக கூட்டணி இல்லாமல் தேர்தலில் நிற்பது ரிஸ்க்.. இப்போது போட்டியிட்டு தோல்வி அடைந்தால் அது சிக்கலாகும் என்ற அச்சத்தில் சில இரண்டாம் கட்ட தலைவர்கள் போட்டியிட முன்வரவில்லை என்று கட்சி அடிமட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்போது தனியாக நின்றால் நமக்குத்தான் சிக்கல் என்று சில நிர்வாகிகள் நினைக்கிறார்களாம்.

வேட்பாளர்கள் முன் வரவில்லை
ஆனால் சில இடங்களில் பாஜகவிற்கு பாசிடிவான சூழ்நிலை நிலவி வருகிறது. ஆனாலும் அதிமுக நிர்வாகிகள் உதவ மாட்டார்கள். அவர்களும் நமக்கு எதிராக வேலை பார்ப்பார்கள்.எனவே நமக்கு ஏன் வேண்டாத ரிஸ்க் என்று சில நிர்வாகிகள் ஒதுங்கிக்கொண்டதாக் கூறப்படுகிறது. ஆனால் அதிமுக கூட்டணியால் இதனால் பல நாட்கள் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த சில பாஜக நிர்வாகிகள்.. இதுதான் நாம் நம்மை நிரூபிக்க வேண்டிய தருணம்.. தனித்து நிற்கலாம் என்று தயாராக இருக்கிறார்களாம்.

அதிமுக சந்தோஷம்
இன்னொரு பக்கம் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறிய நிலையில் அதிமுக இரண்டம் கட்ட நிர்வாகிகள் இந்த அறிவிப்பால் ஏக குஷியில் இருக்கிறார்களாம். பாஜக கூட்டணியால் இத்தனை நாட்கள் எங்களுக்கு சில தொகுதிகளில் இடம் கிடைக்காமல் இருந்தது. இப்போது கூட்டணி இல்லை. ஏற்கனவே கூட்டணியில் பாமக, தேமுதிக இல்லை. எனவே எல்லா இடங்களும் நமக்குத்தான்.

இரண்டாம் கட்ட தலைகள்
நாம் கேட்ட இடங்களை கொடுப்பார்கள்.தேர்தல் பணிகளும் இதனால் சிக்கல் இன்றி நடக்கும் என்று அதிமுக தலைகள் சந்தோஷமாக இருக்கிறார்களாம். இதனால் இரண்டாம் கட்ட தலைவர்கள் பலர் இந்த முறை நேரடியாக மேயர் பதவிக்கு அடிபோடுவதாகவும் தகவல்கள் வருகின்றன. நேரடியாக ஓபிஎஸ் - இபிஎஸ் இரட்டையர்களுக்கு நகராட்சி, மாநகராட்சி பதவிகளுக்கு இப்போதே துண்டு போட அதிமுக நிர்வாகிகள் வரிசைகட்டி நிற்கிறார்கள் என்று ரத்தத்தின் ரத்தங்கள் வட்டாரத்தில் பேசப்படுகின்றது.
-
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications